அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்பை சுற்றி ஏராளமான பென்குயின்கள் கண்ணீர் மல்க நிற்க, மற்றொரு புறம் நாங்கள் வேறு நாடுகளுடன் வணிகத்தை தொடங்குவோம் என்று எச்சரிக்கை விடுக்க, எங்கள் மீதான வரிவிதிப்பை ரத்து செய்யுங்கள் என மன்றாடும் ஏராளமான பென்குயின்கள் ‘மீம்ஸ்கள்’ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதற்கான காரணம் என்ன என ஆராய்ந்தால் நமக்கு தலை சுற்றும்போது பென்குயின்களுக்கு கோபம் வராத என்ன.?
அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றது முதல் நாட்டின் முன்னேற்றத்துக்கு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக தொடர்ந்து கூறி வரும் நிலையில், உலக நாடுகளுக்கான வரி விதிப்பை அமெரிக்காவின் விடுதலை நாளான டொனால்டு ட்ரம்ப் அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், ஜப்பான் பொருட்களின் மீது 24 சதவீதம், இந்திய பொருட்களின் மீது 27 சதவீதம், சீனா பொருட்களின் மீது 34 சதவீதம், வியட்நாம் பொருட்களின் மீது 46 சதவீதம், வங்கதேசம் பொருட்களின் மீது 37 சதவீதம், ஐரோப்பிய ஒன்றியம் பொருட்களின் மீது 20 சதவீதம், இந்தோனேசியா பொருட்களின் மீது 32 சதவீதம், பாகிஸ்தான் பொருட்களின் மீது 29 சதவீதம் மற்றும் தாய்லாந்து பொருட்களின் மீது 36 சதவீதம் என ஆகமொத்தம் 180-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்களை டொனால்டு ட்ரம்ப் வெளியிட்டு உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.
இந்த பட்டியலில் அன்டார்டிகாவில் உள்ள ஹியர்ட் மற்றும் மெக்டொனால்ட் ஆகிய 2 தீவுகள் இடம் பெற்று இருப்பது தான் இன்று சமூக வலைதளங்களில் ‘மீம்ஸ்கள்’ வைரலாகி வருவதற்க்கு காரணமாக உள்ளன. ஏன் என்றால் ஹியர்ட் மற்றும் மெக்டொனால்ட் தீவுகள் தெற்கு இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள மக்கள் வசிக்காத ஆஸ்திரேலிய பிரதேசங்களாகும். இங்கு நிலவும் கடுமையான காலநிலை காரணமாக மனித வாழ்விடத்திற்கு பொருந்தாததாக அமைத்துள்ளது. ஆகையால். விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தீவுகளுக்கு குறுகிய காலத்திற்கு வருகை தந்து சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் வனவிலங்குகளைப் பற்றி ஆய்வு செய்கிறார்கள்.
மேலும் இந்த தீவுகளில் பென்குயின்கள் மட்டுமே வாழ்கின்றன. மனிதர்களே வசிக்காத இரு தீவுகளுக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 10 சதவீத வரி விதித்திருக்கிறார். ஆகையால், மனிதர்கள் வசிக்காத ஹியர்ட் மற்றும் மெக்டொனால்ட் தீவுகளுக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 10 சதவீத வரி விதித்திருப்பதால், எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ‘மீம்ஸ்கள்’ வைரலாக பரவி வருகின்றன.