IPL 18-வது தொடர், 2025 -ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் தேதி தொடங்கி மே 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த 2025 IPL தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட இருக்கிறார்.
இந்நிலையில் ரசிகர்கள் பலரும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கும், ரிஷப் பண்ட்டுக்கும் மோதல் வர வாய்ப்பு உள்ளதாக பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா சில ஆண்டுகளுக்கு முன்பு ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் என்ற அணியை நடத்தி வந்தபோது அந்த அணியின் கேப்டனாக 2016 -இல் மகேந்திரசிங் தோனியின் நியமிக்கப்பட்டு இருந்தார்.
அப்போது அந்த அணி தோல்விகளை சந்தித்ததால் சஞ்சீவ் கோயங்காவுக்கு மகேந்திரசிங் தோனி மீது அதிருப்தி ஏற்பட்டது. மகேந்திரசிங் தோனி மீது இருந்த அதிருப்தியை சஞ்சீவ் கோயங்கா பொதுவெளியில் வெளிப்படுத்தியது மட்டுமின்றி மகேந்திரசிங் தோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கினார். அதே போல 2024 தொடரின் போது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் கேப்டன் கே. எல். ராகுல் இருந்தார்.
ஆனால், 2024 IPL தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ப்ளே -ஆஃப் சுற்றிற்கு தகுதி பெறாமல் புள்ளி பட்டியலில் 7-வது இடம் பிடித்ததால் கே எல் ராகுல்லுக்கும், சஞ்சீவ் கோயங்காவுக்கும் கசப்பான சம்பவம் நடந்தது. ஒரு போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் தோல்வி அடைந்தபோது கே எல் ராகுலை மைதானத்தில் வைத்து சஞ்சீவ் கோயங்கா திட்டி இருந்தார் . இத்தனை தொடர்ந்து கே எல் ராகுல் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
தற்போது IPL 2025 மெகா ஏலத்தில் 27 கோடி ரூபாய்க்கு ரிஷப் பண்ட்டை சஞ்சீவ் கோயங்கா வாங்கினார் பண்ட்டை லக்னோ அணி வாங்கி இருக்கிறது. அவரை கேப்டனாகவும் நியமிக்க முடிவு செய்தார். ஏற்கனவே, டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் உரிமையாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்தான் ரிஷப் பண்ட் அந்த அணியில் இருந்து விலகி ஏலத்தில் பங்கேற்றார்.
இந்நிலையில், சஞ்சீவ் கோயங்கா போன்ற ஒரு அணி உரிமையாளருடன் ரிஷப் பண்ட் இணக்கமாக செயல்பட முடியுமா? என ரசிகர்கள் தங்கள் சந்தேகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயரை வாங்கி அவரை கேப்டனாக நியமிக்க விரும்பியதாகவும், ஆனால் ஸ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் கிங்ஸ் அணி 26.75 கோடி கொடுத்து வாங்கியதால், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தயக்கத்தில் அவரை வாங்காமல் கைவிட்டு விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 2025 IPL போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பதில் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.