அதானி குழுமம், ஆஸ்திரேலியா பணியாளர்கள் மீது இன பாகுபாடு காட்டியதாக பரபரப்பான புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே அதானி குழுமம் சார்பில், அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியதை மறைத்து அமெரிக்க முதலீட்டாளர்களிடம் முதலீடு பெற்றது தொடர்பான புகார் பற்றி எரியும் நிலையில் பழங்குடியினர் இனபாகுபாடு புகார் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின் உற்பத்தி, நிலக்கரி மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த அதானி குழும நிறுவனத் தலைவர் கவுதம் அதானி ஈடுபட்டு வருகிறார். இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள கவுதம் அதானி, பட்டியலில் 17-வது இடத்திலும் உள்ள பெரும் பணக்காரர்களில் ஒருவராகவும் திகழ்கிறார்.
அமெரிக்க பாதுகாப்பு ஆணையம் கவுதம் அதானி மீது அமெரிக்காவில் சூரிய சக்தி திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டுள்ளன. அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்சம் மற்றும் கடன் பத்திர மோசடி தொடர்பான தனித்தனி வழக்குகளில் அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
2020-24 காலகட்டத்தில் அதிக விலைக்கு சூரிய ஒளி (சோலார்) மின்சாரம் வாங்கும் வகையில் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக தமிழகம், ஆந்திரா, ஜம்மு – காஷ்மீர், சத்தீஸ்கர், ஒடிசா மாநிலங்களில் அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும், இதை மறைத்து அமெரிக்க நிறுவனங்களிடம் முதலீடு பெற்றதாகவும் அதானி குழுமம் மீது நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் பெடரல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அக்குழுமத்தின் தலைவர் கவுதம் அதானிக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் அதானி குழுமம் சார்பில் கார்மிசெல் நிலக்கரி சுரங்கம் ஒன்று உள்ளது. இந்த நிலக்கரி சுரங்கத்தில் அதானி குழுமத்தை சேர்ந்த பரிவாஸ் மைனிங் மற்றும் ரிசோர்ஸ் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலக்கரி சுரங்கத்தின் அருகே பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அந்த நிலக்கரி சுரங்கத்தின் அருகே நீரூற்றுகள் உள்ளன. தீண்டாமை வகையில் இந்த நீரூற்றுகளை பயன்படுத்த விடாமல் அதானி குழுமத்தினர் பழங்குடியின மக்களை தடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதானி குழுமத்தினர் எப்படி தடுத்து இன பாகுபாடு காட்டினர் என்பது பற்றி புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பழங்குடியின மக்கள் சார்பில் குயின்ன்ஸ்லாந்தில் உள்ள நாகானா யார்பைன் வாங்கன் மற்றும் ஜகலிங்கோ காலசார கஸ்டடியன்ஸ் ஆஸ்திரேலியாவின் மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. சமீபகாலமாக அதானி குழுமம் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில் தற்போது இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.