india vs bangladesh: விராட் கோலி மேஜிக் பேட்..! அன்று ரிங்கு சிங்.. இன்று ஆகாஷ் தீப்..!

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் விராட் கோலியிடம் பேட்டை வாங்கி அதிரடியாக இரண்டு சிக்ஸ் அடித்து இருந்தார். அதை கோலியாலேயே நம்ப முடியவில்லை என்பது தான் சுவாரசியமான விஷயமாகும்.

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதனை தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்காளதேசம் அணி மொமினுல் ஹக் 40 ரன்னும், முஷ்பிகுர் ரகீம் 6 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருக்க மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்பட. 35 ஓவர் மட்டுமே வீசிய நிலையில் வீச நிலையில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்து நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது. 2-வது நாள் போட்டியும், நேற்றைய 3-வது நாள் ஆட்டமும் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

நிலையில் நான்காவது நாள் அன்று வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 233 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனைதொடர்ந்து முதல் இன்னிஸ்ங்ஸ் தொடங்கிய இந்திய அணி டி20 கிரிக்கெட் அதிரடியாக விளையாட தொடங்கியது. இதன்விளைவாக ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் 3 ஓவர்களில் 50 ரன்களை அடித்து அசத்தியது. இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலே அதிவேகமாக அடிக்கப்பட்ட அரை சதம் ஆகும். மேலும் ரோகித் சர்மா 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஜெய்ஸ்வால் இணைத்த சுப்மன் கில் தொடர்ந்து அதிரடியாக விளையாட அதிவேகமாக 10.1 ஓவர்களில் 100 ரன்களை கடந்து அசத்தியது. இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு அணி அதிவேகமாக 100 ரன்கள் அடித்தது முதல் முறையாகும். ஜெய்ஸ்வால் அரை சதம் கடந்த 72 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சுப்மன் கிலுடன் இணைத்த ரிஷப் பந்த் தொடர்ந்து அதிரடியாக விளையாட சுப்மன் கில் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரிஷப் பந்துடன் இணைத்த விராட் கோலி தொடர்ந்து அதிரடியாக விளையாட 18.2 ஓவரில் 150 ரன்கள் என்ற மைல் கல்லை எட்டியது. இதன் மூலம் இந்திய அணி அதிவேகமாக 150 ரன்களை எட்டி சாதனை படைத்தது.

அதிஷ்ட வசமாக ரிஷப் பந்த் 9 ரன்களில் ஆட்டமிழக்க வெளியேற விராட் கோலியுடன் இணைத்த ராகுல் இவர்கள் பங்கிற்கு அதிரடியை காட்டினார். இதன்விளைவாக 24.2 ஓவர்கள் எல்லாம் இந்திய அணி 200 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி அதிவேகமாக 200 ரன்கள் அடித்தது இதுவே முதல் முறை என்ற இமாலய சாதனையை நடத்தி காட்டியது.

விராட் கோலி அதிரடியாக அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 35 பந்துகளில் 1 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 47 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். ராகுலுடன் இணைத்த ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து அதிரடியாக விளையாட 30.3 ஓவர்களில் இந்திய அணி 250 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 50, 100, 150 ,200 ,250 ஆகிய ரன்களை அதிவேகமாக எட்டிய முதல் அணி என்ற பெருமையை இந்தியா படைத்தது.

பின்னர் விக்கெட்கள் வேகமாக சரிந்தன. அப்போது ஒன்பதாவது வரிசையில் ஆகாஷ் தீப் களம் இறங்கினார். அவர் விராட் கோலியின் பேட்டை கடன் வாங்கிக் கொண்டு பேட்டிங் செய்ய வந்தார். யாரும் எதிர்பாராத வகையில் அவர் சந்தித்த இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்துகளில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை விளாசினார்.

முன்னதாக இந்திய டி20 அணியின் அதிரடி மன்னன் ரிங்கு சிங், கோலியின் பேட்டை வாங்கித் தான் போட்டிகளில் அதிரடியாக ரன் சேர்த்து வந்தார். விராட் கோலி முதலில் கொடுத்த பேட் உடைந்து விட்டதால், மீண்டும் அவரிடமே சென்று இரண்டாவது பேட்டை வாங்கி ரிங்கு சிங் ஆடி வருகிறார்.

அதே போல, ஆகாஷ் தீப் பின்வரிசை வீரராக இருந்தாலும் அதிரடியாக ஆட வேண்டிய சூழ்நிலையில் கோலியின் பேட்டை வாங்கிக் கொண்டு வந்து இரண்டு சிக்ஸர்களை அடித்து இந்திய அணி அதிக முன்னிலை பெற உதவினார். விராட் கோலி பேட்டில் என்ன மேஜிக் இருக்கிறது? என்பது தெரியவில்லை. அவரது பேட்டை வாங்கி செல்லும் இளம் வீரர்கள் அனைவரும் அதிரடியாக சிக்ஸர்கள் அடிக்கிறார்கள் என்பது தான் ஆச்சரியமான விஷயம்