துபாய் சர்வதேச மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 39-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக தேவதூத் படிக்கல் மற்றும் தலைவர் விராட் கோலி களமிறங்கினர்.
ஜஸ்பிரித் பும்ரா 1.2 ஓவரில் தேவதூத் படிக்கல் 4 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஷ்ரிகர் பரத், விராட் கோலிவுடன் ஜோடி சேர்த்தார். ராகுல் சாஹர் 8.5 ஓவரில் ஷ்ரிகர் பரத் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய க்ளென் மேக்ஸ்வெல், விராட் கோலிவுடன் ஜோடி சேர்த்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஷர்துல் தாக்குர் 15.5 ஓவரில் விராட் கோலி 51 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய , ஏபி டிவில்லியர்ஸ், க்ளென் மேக்ஸ்வெலுடன் ஜோடி சேர்த்தார். க்ளென் மேக்ஸ்வெல் 56 ரன்களுக்கு ஆட்டமிழக்க இறுதியில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 165 ரன்கள் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 3விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் குவிண்டன் டி காக் களமிறங்கினர். முதல் இரண்டு ஓவர்கள் நிதானமாக விளையாடிய ரோகித் சர்மா மூன்றாவது ஓவரின் கடைசி மூன்று பௌண்டரிகள் விளாசினார். பின்னர் இருவரும் அதிரடி ஆட்டத்தை கைகளில் எடுக்க பவ்ர் பிலே முடிவில் 50 ரன்களை கடந்து 90 % மேல் வெற்றி என மும்பை இந்தியன்ஸ் அணி இருந்தது.
இந்த ஜோடியை கலைக்க யுஸ்வேந்திர சாஹல் களமிறங்கினர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைவர் விராட் கோலி. ஏழாவது ஓவரின் நான்காவது பந்தில் 24 ரன்கள் எடுத்திருந்த குவிண்டன் டி காக் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன், ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்த்தார். க்ளென் மேக்ஸ்வெல் 9.6 ஓவரில் ரோகித் சர்மா 43 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் , இஷான் கிஷனுடன் ஜோடி சேர்த்தார்.
ஆனால் யுஸ்வேந்திர சாஹல் 10.3 ஓவரில் இஷான் கிஷன் வந்த வேகத்தில் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி பக்கமிருந்த ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பக்கம் திசை மாறியது. அதன்பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களை வரிசையாக ஒற்றை இலக்குகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்து வீச்சாளர்கள் சுருட்டி அனுப்பினர்.
இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 18.1 ஒவர்களில் 11 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 54 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.