இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 போட்டிகளில் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 4-வது டெஸ்ட் போட்டி நேற்றைய முதல்நாள் லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இந்திய அணி ஆட்டத்தின் முதல் நாளே 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி 84 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்து. இங்கிலாந்து அணி இந்திய அணியைவிட 99 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து, 2 வது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. விக்கெட்டுகளை இழந்து விடக் கூடாது என்பதில் மிகவும் கவனம் எடுத்து விளையாடிய ரோகித் சர்மாவும், கே.எல் ராகுலும் பொறுப்புடன் விளையாடினர்.
இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி நிதான ஆட்டத்தை ரோகித் சர்மாவும், கே.எல் ராகுலும் பொறுப்புடன் விளையாடினர். 2-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 16 ஓவர்கள் நிலவரப்படி விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் சேர்த்துள்ளது. ரோகித் சர்மா 20 ரன்களுடனும், கே எல் ராகுல் 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி, இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட இன்னும் 56 ரன்கள் பின் தங்கியுள்ளது.
இந்நிலையில், 3-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது முதலே இரு வீரர்களும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேஎல் ராகுல் வெளியேறினார். அதன்பின்னர் புஜாராவுடன் ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இங்கிலாந்து வீரர்களின் பந்து வீச்சை சிதறடித்த ரோகித் சர்மா சதம் விளாசினார். வெளிநாட்டு மண்ணில் ரோகித் சர்மா அடிக்கும் முதல் சதம் இதுவாகும். ரோகித் சர்மாவுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்த புஜாராவும் அரைசதம் விளாசினார்.
ரோகித் சர்மா 127 ரன்கள் எடுத்து இருந்த நிலையில், ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த சில நிமிடங்களில் அதே ஓவரின் கடைசி பந்தில் புஜாராவும் 61 ரன்களில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இந்திய அணி அடுத்தடுத்து இரு முக்கிய விக்கெட்டுகளை இந்திய அணி பறிகொடுத்த நிலையில், கேப்டன் கோலியுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். போதிய வெளிச்சமின்மை காரணமாக 3-வது நாள் ஆட்டம் முன்கூட்டியே நிறுத்திக்கொள்ளப்பட்டது.
இந்திய அணி 3-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் சேர்த்துள்ளது. விராட் கோலி 22 ரன்களிலும் ஜடேஜா 9 ரன்களிலும் களத்தில் உள்ளனர். இந்திய அணி 171 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் 2 தினங்கள் எஞ்சியுள்ளதால், ஓவல் டெஸ்ட் போட்டி ரசிகர்களுக்கு பரப்பிற்கு பஞ்சமில்லாத விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.