10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், சேமிப்பு மற்றும் வைப்பு கணக்குகளைத் சுயமாக திறந்து நிர்வகிக்க RBI அனுமதித்துள்ளது. இதுகுறித்து RBI விடுத்துள்ள சுற்றறிக்கையில், வங்கிகள் தங்கள் இடர் மேலாண்மைக் கொள்கையின் அடிப்படையில் நெட் பேங்கிங் சேவை, ஏடிஎம் அல்லது டெபிட் கார்டுகள் மற்றும் காசோலை புத்தகங்கள் போன்ற கூடுதல் சேவைகளையும் சிறுவர்களுக்கு வழங்க முடியும். இருப்பினும், சிறார்களின் கணக்குகள் அதிகமாகப் பணம் எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை என்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என RBI விடுத்துள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 வயது பூர்த்தியாகி விட்டதா..!? வாங்க வங்கியில் சுயமாக கணக்கு தொடங்கலாம்..!
