இங்கிலாந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நாற்பது ஆண்டுகளாக பொருளாதாரம், அரசியல், சட்ட விவகாரங்களில் ஒருங்கிணைந்திருந்த ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முறைப்படி விலகியது. இங்கிலாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், டென்மார்க், கிரீஸ், இத்தாலி உள்ளிட்ட 28 நாடுகள் இணைந்த ஐரோப்பிய ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகியதன் காரணமாக பிற ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த டேங்கர் லாரி ஓடுனர்களை இங்கிலாந்தில் பணியமர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
மேலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இங்கிலாந்தில் இருந்து வெளியேறிய பிறநாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான டேங்கர் லாரி ஓடுனர்கள் இங்கிலாந்து திரும்பவில்லை என தெரிகிறது. இதன் காரணமாக இங்கிலாந்தில் சுமார் 1 லட்சம் டேங்கர் லாரி ஓடுனர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களுக்கு டேங்கர் லாரிகளில் பெட்ரோல் எடுத்து செல்வது தடைபட்டு, அங்கு பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன நிலையில் பெட்ரோல் தீர்த்து ஒவ்வொரு பெட்ரோல் நிலையமாக மூடப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, பெட்ரோல் நிலையங்களுக்கு டேங்கர் லாரிகளில் பெட்ரோல் எடுத்து செல்ல ராணுவத்தின் உதவியை நாட இங்கிலாந்து முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.