சீனாவை சேர்ந்த சென் தனது கணவர் தன்னுடன் அடிக்கடி சண்டைபோடுகிறார் என கூறி சென் சமீபத்தில் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடிய நிலையில் நீதிமன்றத்தில் இருந்து மனைவியை குண்டுக்கட்டாக தூக்கி ஓடிய கணவன் இந்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இன்றைய நவீன காலத்தில் இளம் தலைமுறையினர் வாழ்கை என்றால் என்ன என்று புரியாமல் நமது பெரியோர்கள் எப்படி எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள் என்றும் யாருக்கும் தெரியாமல் வெளிநாட்டு வாழ்க்கைக்குள் தங்களைத் திணித்துக் கொண்டு அவர்களைப் போலவே பல பேர் வாழப்பழகி விட்டார்கள். அதன்விளைவுகள் திருமணம் முடிந்த கையுடன் பல இளம் தலைமுறையினர் விவகாரத்தை நோக்கி சென்று அவர்களின் எதிர்காலத்தையம் குழந்தைகளின் எதிர்காலத்தையும் தொலைத்து கொண்டுள்ளார்.
‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ ‘கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்’ ‘திருமணம் ஆயிரம் காலத்து பயிர்’ போன்றவை பழமொழிகள் மட்டும் அல்ல, நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை எல்லாவற்றையும் மறந்து ஏதுஏதுக்கோ இன்றைய தலைமுறையினர் விவகாரத்து பெறுகின்றனர்.
சீனாவை சேர்ந்த லீ மற்றும் சென், ஆகிய இருவர் 20 வருடங்களாக கணவன் மனைவியாக ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது கணவர் தன்னுடன் அடிக்கடி சண்டைபோடுகிறார் என கூறி சென் சமீபத்தில் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
ஆனால் கணவர் லீ மனைவியை பிரிய துளியும் விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார். இருவருக்கும் இடையில் ஏற்பட்டது சிறிய பிரச்சனைதான் என்றும் அவர்கள் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என்றும் அறிவுரை கூறி நீதிமன்றம் அந்த வழக்கை ரத்து செய்தது. ஆனால் தனக்கு கட்டாயம் விவாகரத்து வேண்டும் என்று மனைவி சென் மீண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இதுதொடர்பான விசாரணைக்கு கணவன் மனைவி ஆகிய இருவரும் நீதிமன்றத்துக்கு வந்த நிலையில், விசாரணையை நடக்கவிடாமல் லீ தனது மனைவி கணவர் துண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு நீதிமன்ற கட்டடத்தை விட்டு வெளியே ஓட முயற்சித்துள்ளார்.
மனைவியை கையில் ஏந்திக்கொண்டு சத்தமாக கூச்சலிட்டபடி லீ நீதிமன்றத்தை விட்டு ஓட முயற்சித்ததை பார்த்த அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். கணவனின் காதலை பார்த்து வியந்த நீதிபதி, இனிமேல் மனைவியிடம் சண்டை போட மாட்டேன் என்று மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுக்க உத்தரவிட்டுள்ளனர். அதனபடி, ‘எனது தவறின் விளைவுகளை நான் புரிந்துகொண்டேன். இனி இந்த தவறை ஒருபோதும் செய்யமாட்டேன்’ என்று கணவர் லீ எழுதிக்கொடுத்துவிட்டு மனைவியை அழைத்து சென்றார்.