விஜயலலிதாம்பிகை தலைமையில் தொடரும் ஆய்வு

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் உத்தரவின்படி, உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் பல மாதங்களாகவே மாவட்டம் முழுவதும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். அதன் ஒரு தொடர்ச்சியாக அவினாசிபாளையம், செட்டிப்பாளையம் பகுதிகளில் உள்ள உணவகங்கள், இனிப்பு, கார வகைகள் தயாரிப்பு நிறுவனங்கள், பேக்கரிகள் எனபத்திற்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது.

உணவுப்பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்களில் பணிபுரிபவர்களில் ஒருவர் உணவு பாதுகாப்பு துறையால் நடத்தப்படும் Fostac பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் என்பது கட்டாயம். உணவு தயாரிப்பதற்காக வாங்கப்பட்ட இறைச்சிகள் குளிர்சாதன பெட்டியில் வைத்து பராமரித்தால் சரியான வெப்பநிலையில் பராமரிக்க வேண்டும் போன்ற விதிமுறைகளை கடைகளுக்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.