வட கொரியா காட்டம்: காசா ரத்தம் சிந்த இஸ்ரேல் காரணம்..!

இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையே 5 வது நாளாக போர் தொடர்ந்து வரும் நிலையில், வடகொரிய தொழிலாளர் கட்சியின் அதிகாரப்பூர்வ ஊடகமான ரோடாங் சின்முன் வெளியிட்டுள்ள செய்தியில், “பாலஸ்தீனுக்கு எதிரான இஸ்ரேலின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளின் காரணமாகவே இந்த பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாக சர்வதேச சமூகம் கருதுகிறது. சுதந்திரமான பாலஸ்தீன் நாட்டை அமைத்தால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்பது உலக மக்களின் கருத்தாக இருக்கிறது.

இந்த தாக்குதல் சம்பவங்கள் காரணமாக 1,500 க்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். பல்வேறு உலக நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து உள்ளனர். ஹமாஸ் நடத்திய தாக்குதலை தொடர்ந்து ஏற்பட்ட போரை நிறுத்திக்கொள்ளுமாறும், அப்பாவி பொதுமக்களை பாதுகாக்குமாறும் கேட்டுக்கொண்டு உள்ளன. இந்த போர் தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் நிலைபாடுகளுக்கு எதிராகவும் வடகொரியா கருத்து தெரிவித்து இருக்கிறது.

குறிப்பாக சர்வதேச விவகாரங்கள் அமெரிக்கா மேற்கொள்ளும் நடவடிக்கைகளை வட கொரியா கண்டித்து இருக்கிறது. மேலும் சிரியாவில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலின் காரணமாக அந்நாட்டில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டு இருக்கும் நிலையில், இதற்கு சிரியாவுக்கு உள்ளேயும், வெளியிலும் உள்ள விரோத சக்திகளே காரணம் என வட கொரிய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

சிரியாவின் அதிபர் பஷர் அல் அசாத்தின் ஆட்சியை அகற்றுவதற்காக நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. பாலஸ்தீனின் பெரும்பகுதி நிலத்தை அமெரிக்கா, பிரிட்டன் உதவியுடன் கடந்த பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து வந்த இஸ்ரேல் எஞ்சி இருக்கும் காசா, ஜெருசலேன், மேற்கு கரை பகுதிகளை கைப்பற்ற தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதுடன், சமீபத்தில் இஸ்லாமியர்களின் புனித தலமான அல் அக்சா மசூதியை இழிவுபடுத்தும் வகையில் நடந்துகொண்டது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை 5000 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா மீது கடந்த சில நாட்களாக இடைவிடாத தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்து இருக்கும் நிலையில், பாலஸ்தீனுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலை வட கொரியா மிக வன்மையாக கண்டித்துள்ளது.