சீனாவில் கொரோனா என்ற மர்ம வைரஸ் காய்ச்சல் முதலில் வுகான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியதாக தகவல்கள் கூறுகின்றன. முதலில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி வருகிறது.
கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் மட்டும் 170 பேர் பலியாகியுள்ளனர். சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் தகவல் படி திங்கள்கிழமை முடிவில், சீனாவின் வுகானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7800 ஆக இருந்தது. உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் பெரும்பாலானவை ஹூபே மாகாணத்தில் உள்ளன. அங்குதான் வைரஸ் முதலில் அடையாளம் காணப்பட்டது.
வைரஸ் தாக்குதலை தடுக்க கைகளை சோப்பு நீரில் அடிக்கடி நன்றாக கழுவ வேண்டும். கழுவப்படாத கைகளால் வாய், மூக்கு மற்றும் கண்களை தொடக்கூடாது. கொதிக்க வைத்த நீரை வெதுவெதுப்பாக குடிப்பது நல்லது. நோய்வாய்ப்பட்டவர்களுடன் நெருங்கி இருக்கக்கூடாது.
நோய்வாய்ப்பட்டவர்கள் வெளியே செல்ல வேண்டாம். இருமல் அல்லது தும்மல் வந்தால், முகத்தை மூடி தும்மிவிட்டு, பின்னர் கைகளை கழுவ வேண்டும். அடிக்கடி தொடும் பொருட்களையும் சுத்தப்படுத்த வேண்டும். பொது இடங்களில் பயணம் செய்தால், ‘என் 95‘ வகை முகமூடியை பயன்படுத்த வேண்டும்.
கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகம் இருந்தால், முகமூடி அணிந்து உடனடியாக மருத்துமனையை தொடர்பு கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்திய மருத்துவ முறையில் தடுப்பு மருந்துகள் உள்ளன. மருத்துவர்களின் அறிவுரைப்படி அவற்றை உட்கொள்ள வேண்டும்.