போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே இறைவன் புத்தியை கொடுத்தானேஅதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து பூமியைக் கெடுத்தானே மனிதன் பூமியை கெடுத்தானே.. எம் ஜி ஆர் நடிப்பில் உருவான என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, திருவள்ளுவர் திருக்குறள் எழுதும் போது ஓலைச்சுவடி கிழித்து கொடுத்தவர்.
ஹிட்லருடன் நூடுல்ஸ் சாப்பிட்டவர். காந்தியடிகளுடன் காஃபி சாப்பிட்டவர். சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பீரங்கி படையில் பயிற்சி பெற்றவர் இப்படி பல அனுபவங்களைக் கொண்டுள்ள சீமானை விமர்சிக்கும் தகுதி எங்களுக்கு இல்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் கலாய்க்கும் அளவிற்கு இளைஞர்கள் மூளையை சலவை செய்து அரசியல் பிழைப்பு நடத்திக்கொண்டு இருக்கின்றார்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுடன் தமிழ் தேசியம் மற்றும் பிரபாகரன் பின்புலத்தை வைத்தே சீமானின் கட்சி பிரபலமானது. பிரபாகரனை சந்தித்தது, அவருடன் பேசியது, இட்லி கறி சாப்பிட்டது என பல மேடைகளில் சீமான் சிலாகித்து வந்துள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன் வெளியான பிரபாகரனுடன் சீமான் எடுத்துக்கொண்ட புகைப்படமும் நாம் தமிழர் மேடைகளில் இடம்பெறும்.
மொழி, இன, மத பேதமின்றி ஒரே குடையின் குடையின் கீழ் வாழும் வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி தொடங்கியதிலிருந்தே இவர்கள் பேசும் பிரிவினைவாத பேச்சுகளால் தமிழகம் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டுள்ளது. இவர்கள் அங்க தொட்டு.., இங்க தொட்டு.., கடைசியில் தந்தை பெரியாரை விமர்சிக்க தொடங்கிவிட்டார்.
கடந்த பொங்கலையொட்டி கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், “தந்தை பெரியாருக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்? மதுவுக்கு எதிரான போராட்டத்தில் மரத்தை வெட்டி சாய்த்தது தான் பெரியாரின் பகுத்தறிவா? காம இச்சையை தாய், மகளுடன் . என கூறியவர் பெரியார்” என்று சீமான் தெரிவித்தார். மேலும் சீமான் பேசுகையில், “அம்பேத்கரையும், பெரியாரையும் ஒப்பிடுவது ஓர் முரண். இருவரின் சிந்தனையும் ஒன்றா? இருவருக்கும் சிலை வைத்தால் ஒன்றாகி விடுமா? அம்பேத்கர் உலகின் தலைசிறந்த கல்வியாளர். மேலும், பேசிய சீமான், வள்ளலாரைத் தாண்டி என்ன சமூக சீர்திருத்தத்தை செய்தார் பெரியார் என்று கேள்வியை எழுப்பியுள்ளார்.
இதற்கு பெரியாரிய திராவிட இயக்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்தன. சீமானை எதிர்த்து கண்டனப் போராட்டங்கள் நடத்தின. அப்போது, அண்ணாமலை 20 ஆயிரம் புத்தகம் என்று கதை விடுகிறார். சீமான் எந்த புத்தகமும் படிக்காமல் வாய்க்கு வந்ததை உளறுகிறார். இவர்கள் பிரபாகரன் குறித்து அவதூறு பேசுவது, விடுதலைப் புலிகளுக்கு எதிராக இழிவுபடுத்துவது, தந்தை பெரியாருக்கு எதிராக அவதூறு பரப்புவது இதுதான் அவர்களுடைய அரசியலாக இருக்கிறது. சீமான்தான் வீழ்ந்து விடாத வீரன், மண்டியிடாத மானம் என்று டயலாக் பேசுகிறாரே அப்போது தைரியமாக ஆவணத்தை பொது வெளியில் வெளியிடட்டும் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சவாலிட்டு உள்ளார்.
மேலும், “எந்த தத்துவ பின்புலமும் இல்லாத அரசியல் தரித்திரம் சீமான். பெரியாரை அவமதித்த சீழ் பிடித்த சீமான் கட்சிக்கு ஈரோட்டுலேயே நல்லடக்கம் நடைபெறும் நாஞ்சில் சம்பத் அவரது பணியில் விமர்சனம் செய்தார்.
“சர்ச்சையை ஏற்படுத்திருக்கிறது என்பதற்கு பதிலாக சர்ச்சையை ஏற்படுத்துவதற்காகவே பேசியிருக்கிறார் எனத் தோன்றுகிறது. பெரியாரை குறிவைத்து அல்ல. திமுக அரசை குறிவைத்துதான் இவ்வாறு பேசுகிறார் எனக் கருதுகிறேன்.
வாய்க்கு வந்ததை எல்லாம் கண்டபடி பேசினால் கலவரம் வரும். கலவரம் வந்தால் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனச் சொல்லிவிடலாம் என்பது அவருக்கு உள்நோக்கமாக இருக்கலாம். அல்லது அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையாக இருக்கலாம். “நாம் தமிழர் கட்சி கூடாரம் காலியாவதால் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள பெரியார் போன்ற ஆளுமைகளை விமர்சிக்கிறார் சுப. வீரபாண்டியன் சீமானை விமர்சனம் செய்தார் .
இந்த சர்ச்சை ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க மறுபுறம் சீமான், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படம் போலியானது. அதனை எடிட் செய்து கொடுத்ததே நான் தான் என திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் அதிரடியாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியது. இது தொடர்பாக பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.
அந்த போட்டியில், “சீமான், பிரபாகரன் சந்திப்பு நடந்தது உண்மைதான். ஆனால், அது வெறும் 8 முதல் 10 நிமிட சந்திப்பு தான். இவர் சொல்வதுபோல், என் சித்தியுடன் பழகியதெல்லாம் கிடையாது. சீமான் பிரபாகரனுடன் சேர்ந்து உணவு அருந்துவதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது. சீமான் சொல்லும், ஆமைகறி, இட்லி கறி உள்ளிட்ட அனைத்தும் பொய்” என பகிரங்கமாக தெரிவித்தார். இந்தப் பேட்டி சீமான் பிரபாகரன் சந்திப்பு விவகாரம் இன்னும் அனல் பறக்கத் துவங்கியுள்ளது.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சியின் பெண் நிருபர் ஒருவர் பிரபாகரனின் அண்ணன் மகன் சொன்ன குற்றச்சாட்டுகளை மேற்கோள் காட்டி கேள்வி எழுப்பினார். அதற்கு ஆவேசமான சீமான், பொதுவெளியில் பெண் நிருபரின் கேள்விக்கு பீப் போடும் அளவிலான சொல்லை சொல்லி பிரபாகரனின் அண்ணன் மகனை திட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.
எது எப்படியோ.. சீமான் நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் அவிழ்த்து விட்ட கட்டு கதைகளும், மற்றவர்களை விமர்ச்சிக்கும் விமர்சனங்களும் நாம் தமிழர் கட்சி கூடாரம் காலியாவதால் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள பெரியார் போன்ற ஆளுமைகளை விமர்சிக்கிறார்.
கடைசியில் என்ன பேசுவது ? எப்படிப் பேசுவது?” தெரியாமல் நாதக கோட்பாடு திராவிட கோட்பாட்டிற்கு நேரெதிரானது, தமிழர் சித்தாந்தத்திற்கு நேரெதிரானது திராவிடம். தமிழ், தமிழர் பேசிய உரிமைக்கு நேரெதிரானது திராவிடம். திராவிட சித்தாந்தத்தின் ஆணிவேர் பெரியார். பெரியார் என்ற முகமூடியை வைத்துக்கொண்டே பேசுகின்றனர்.
எங்களுக்கு பல்லாயிரக்கண தலைவர்கள், எங்கள் முன்னோர்கள் எல்லா தளங்களிலும் நின்று வேலை செய்த பெருமக்கள் இருக்கின்றார்கள். எல்லா எங்கள் முன்னோர்களின் ஒற்றை அடையாளத்தில் பெரியார் வந்த பிறகுதான் எங்களுக்கு எல்லாம், பெரியார் வந்த பிறகுதான் எங்களுக்கு நாகரிகம், பெரியார் வந்த பிறகுதான் எங்களுக்கு கல்வி, பெரியார் வந்த பிறகுதான் எங்களுக்கு சமூகநீதி என்று சொல்லும்போது எங்களுக்கு மண்டை வெடிக்கும் அளவிற்கு கோவமும் வெறியும் வந்துவிடுகிறது. அதனால் தான் இது தேவைப்படுகிறது. பெரியார் எதிர்ப்பு என்பது நீங்க கட்டமைத்த போலி பிம்பத்தை நொறுக்குவது தான் பேசுகிறேன் என்று சொல்லும் அளவிற்கு சீமானின் “பிரைன் ரோட்”டாகி விட்டது என்பதே யதார்த்தமான உண்மையாகும்.