பிரியங்கா காந்தி முதல்முறையாக வெற்றி பெற்ற சகோதரி பிரியங்கா காந்திக்கு இனிப்பு ஊட்டிய ராகுல் காந்தி..!

கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் முதல்முறையாக தேர்தல் களத்தில் நின்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிட்டு சுமார் 4 லட்சத்திற்கும் மேல் வாக்கு வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றார்.

இந்நிலையில், வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் பிரியங்கா காந்திக்கு வழங்கப்பட்டது. இதனை, சகோதரர் ராகுல் காந்தியிடம் வழங்கி, பிரியங்கா காந்தி வாழ்த்து பெற்றார். மேலும், வெற்றி பெற்ற தங்கை பிரியங்கா காந்திக்கு இனிப்பு ஊட்டி ராகுல் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், வயநாட்டைச் சேர்ந்த எனது சகாக்கள் இன்று எனது தேர்தல் சான்றிதழைக் கொண்டு வந்தனர். என்னைப் பொறுத்தவரை, இது ஒரு ஆவணம் மட்டுமல்ல, இது உங்கள் அன்பு, நம்பிக்கை மற்றும் நாங்கள் உறுதியளிக்கும் மதிப்புகளின் சின்னம். உங்களுக்கான சிறந்த எதிர்காலத்தை உருவாக்க இந்தப் பயணத்தை முன்னெடுத்துச் செல்ல என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு வயநாட்டிற்கு நன்றி என பிரியங்கா காந்தி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.