சீனாவில் கோவிட்-19 காய்ச்சல் முதலில் வுகான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த கோவிட்-19 தோன்றியதாக தகவல்கள் கூறுகின்றன. முதலில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி வருகிறது. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கோவிட்-19 ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கொடிய கோவிட்-19 பாதிப்பால் சீனாவில் மட்டும் 1,110 பேர் பலியாகியுள்ளனர். சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் தகவல் படி,, சீனாவின் வுகானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,500 ஆக இருந்தது. உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஒரே நாளில் 242 பேர் பலியான நிலையில், கோவிட்-19 பாதிப்பிற்கு பலியானோர் எண்ணிக்கை இன்று 1,350- ஐ கடந்துள்ளது. இதேபோன்று 14,840 பேருக்கு கூடுதலாக வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.