உலகின் எந்த கிரிக்கெட் வீரரின் உடலுக்குள் கூடு விட்டு கூடு பாய விரும்புகிறீர்கள் என தொகுப்பாளரின் கேள்விக்கு, தயக்கமே இல்லாமல் விராட் கோலிதான் என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சொல்லும் அளவிற்கும் “விராட் கோலி” ஒரு மன்னன், அவர் ஆலோசகர். கேப்டன் நிச்சயமாக அவரது ஆலோசனைகளை கேட்க வேண்டும் என அதிரடி சொந்தக்காரர் வீரேந்தர் சேவாக் வர்ணனை செய்யும் அளவிற்கும், சிறந்த ஒரு வீரர்.
பேஸ்புக்கில் 49 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள், இன்ஸ்டாகிராமில் 250 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள், ட்விட்டரில் 50 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் என சமூக வலைத்தளங்களில் 310 மில்லியன் அதிகமான ரசிகர்கள் உள்ள ஆசியாவிலேயே இதுவரை யாரும் அடையாத உச்சத்தை விராட் கோலி அடைந்து பல புதிய சாதனைகளுக்கு மேலும் ஒரு சாதனையை படைத்த காரணத்தால் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள 2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட விராட் கோலியின் செல்வாக்கு ஒரு முக்கிய காரணம் என்று ஒலிம்பிக் இயக்குனர் நிக்கோலோ காம்ப்ரியானி தெரிவிதுள்ளார்.
உலகின் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட கால்பந்துக்கு அடுத்த கிரிக்கெட் விளையாட்டின் 18-வது IPL சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதுவரை நடந்துள்ள 17 சீசன்களில் அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், அணிகள் தலா 5 முறை கோப்பையை கைப்பற்றியுள்ள நிலையில் 18-வது IPL கிரிக்கெட் திருவிழா மார்ச் 22-ந் தேதி தொடங்கி மே 25-ந் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்கும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளும் ‘பி’ பிரிவில் மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறையும், எதிர்பிரிவில் ஒரு அணியுடன் மட்டும் 2 முறை, மற்ற 4 அணிகளுடன் தலா ஒரு முறையும் லீக்கில் விளையாடும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. முதல் நாளான இன்றிரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்தித்தது.
2008 -ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையில் இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்ற கையோடு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த வீரரும் செய்யாத பிரம்மாண்ட ஐபிஎல் சாதனையை விராட் கோலி செய்து. மிரள வைத்து கொண்டுள்ளார். முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 1,053 ரனகளும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக 1,057 ரன்களும், பஞ்சாப் அணிக்கு எதிராக பஞ்சாப் அணிக்கு எதிராக 1,030 ரன்களும் அடித்து சாதனை படைத்த விராட் கோலி இந்த போட்டியில் 38 ரன் அடித்தபோது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 1000 ரன்களை கடந்த IPL தொடரில் விராட் கோலி நான்கு அணிகளுக்கு எதிராக 1000 ரன்கள் குவித்து மிகப்பெரிய IPL சாதனையை செய்து இருக்கிறார்.
18-வது IPL சீசனில் விராட் கோலி விளையாட வந்தாலே இன்று எந்த சாதனையை முறியடிக்க போகின்றார் என கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் எதிர்பார்ப்பு தொடங்கியது. அந்த வகையில் மார்ச் 28 -ந் தேதி நடைபெற்ற 8-வது லீக் சுற்றில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிராக போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 16 ஆண்டுகளாக வீழ்த்தவே முடியாமல் இருந்த தொடர் தோல்விகளுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மேலும் இந்த லீக் சுற்றில் விராட் கோலி 31 ரன்கள் அடித்தார். இதன் மூலம் IPL வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஷிகர் தவான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிராக 1,057 ரன்கள் அடித்திருந்த நிலையில் விராட் கோலி 1,084 ரன்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
மேலும் ஏப்ரல் 7 -ந் தேதி நடைபெற்ற IPL 20-வது லீக் சுற்றில் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிராக போட்டியில் விராட் கோலி 67 ரன்கள் அடித்தார். அப்போது T 20 -ல் 13,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை விராட் கோலி செய்தார். மேலும் உலக அளவில் T-20 ல் 13,000 ரன்கள் எடுத்த ஐந்தாவது வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்தார்.
மேலும் ஏப்ரல் 7 -ந் தேதி நடைபெற்ற IPL 20-வது லீக் சுற்றில் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிராக போட்டியில் விராட் கோலி 67 ரன்கள் அடித்தார். அப்போது T 20 -ல் 13,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை விராட் கோலி செய்தார். மேலும் உலக அளவில் T-20 ல் 13,000 ரன்கள் எடுத்த ஐந்தாவது வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்தார்.
மேலும் ஏப்ரல் 10 -ந் தேதி நடைபெற்ற IPL 24-வது லீக் சுற்றில் சின்னசாமி மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிராக போட்டியில் விராட் கோலி 22 ரன்கள் அடித்தார். ஐபிஎல் தொடரில் 8190 ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி அடைந்தார். மேலும் அதில் 1 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடித்து இருந்தார். IPL வரலாற்றில் 721 பவுண்டரிகள் , 280 சிக்ஸர்களுடன் 1000 பவுண்டரியை கடந்ததன் மூலம் IPL வரலாற்றிலேயே அதிக பவுண்டரிகளை அடித்த வீரர் என்ற பெருமை விராட் கோலி பெற்றார்.
மேலும் ஏப்ரல் 20 -ந் தேதி நடைபெற்ற IPL 37-வது லீக் சுற்றில் பஞ்சாபிலுள்ள முல்லன்பூர் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ்அணிக்கு எதிராக போட்டியில் விராட் கோலி 73 ரன்கள் அடித்து 67-வது அரைசதம் ஆகும். இதன் மூலம் IPL வரலாற்றல் 50-க்கும் அதிகமான ரன்களை எடுத்தவர் என்ற சாதனையை படைத்தார்.
ஏப்ரல் 24 -ந் தேதி நடைபெற்ற IPL 42-வது லீக் சுற்றில் சின்னசாமி மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக போட்டியில் விராட் கோலி 70 ரன்கள் அடித்து மூலம் T-20 வரலாற்றில் 100-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். மேலும் IPL வரலாற்றல் 50-க்கும் அதிகமான ரன்களை எடுத்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
ஏப்ரல் 27 -ந் தேதி நடைபெற்ற IPL 46-வது லீக் சுற்றில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக போட்டியில் விராட் கோலி 51 ரன்கள் அடித்து மூலம் இந்த சீசனில் 5-வது அரைசத்தை பூர்த்தி செய்து 443 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்து ஆரஞ்ச் தொப்பியை கைப்பற்றினார். மேலும் இதுவரை நடைபெற்ற IPL 11 சீசன்களில் 400-க்கும் அதிகமான ரன்களை அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை “ரன் மெஷின்” விராட் கோலி படைத்துள்ளார்.
அடுத்து மே 3 -ந் தேதி நடைபெற்ற IPL 52-வது லீக் சுற்றில் சின்னசாமி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அணிக்கு எதிராக போட்டியில் விராட் கோலி 62 ரன்கள் அடித்து மூலம் இந்த சீசனில் 7-வது அரைசத்தை பூர்த்தி செய்து 505 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்து மீண்டும் ஆரஞ்ச் தொப்பியை கைப்பற்றினார். மேலும் விராட் கோலி தொடர்ச்சியாக அடித்த 4-ஆவது அரைசதம். அதேவேளையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 10-வது அரை சதம் அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அதிக அரை சதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி 5 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். பெங்களூரு அணிக்காக அவர், இதுவரை ஒட்டுமொத்தமாக 304 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இந்த வகையில் T- 20- வரலாற்றில் ஓர் அணிக்காக அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையும் விராட் கோலி வசம் சென்றது. மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 1,146 ரன்கள் குவித்துள்ள விராட் கோலி, IPL வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
சேசிங் மாஸ்டர் ஜெர்சி எண்18 “ரன் மெஷின்” விராட் கோலி IPL சீசன்-18 -ல் ஒவ்வொரு நாளும் அதிரடியாக விளையாடி பல்வேறு சாதனைகளை படைத்து அந்த சாதனைகளையே சரித்திரமாக மாற்றி கொண்டுள்ளார் என்பதே நிதர்சனமான உண்மை.