சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றிபெற 126 ரன்களை இலக்காக நிர்ணயித்த பஞ்சாப் கிங்ஸ் அணி

ஷார்ஜா கிரிக்கெட் சங்க மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதும் ஐபிஎல் தொடரின் 37-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தலைவர் கேன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.இதனை தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைவர் கே.எல். ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர்.

ஜேசன் ஹோல்டர் 4.1 ஓவரில் கே.எல். ராகுல் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். மேலும் அதே ஓவரில் 5-வது பந்தில் 5 ரன்கள் எடுத்த நிலையில் மயங்க் அகர்வால் ஆட்டமிழந்து வெளியேறி பஞ்சாப் கிங்ஸ் அணி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அடுத்து களமிறங்கிய கிறிஸ் கெய்ல், ஐடன் மார்க்ரம் ஜோடி சேர்த்தார். ரஷீத் கான் 10.4 ஓவரில் கிறிஸ் கெய்ல் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன், ஐடன் மார்க்ரமுடன் ஜோடி சேர்த்தார். சந்தீப் சர்மா 11.4 ஓவரில் நிக்கோலஸ் பூரன் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா, ஐடன் மார்க்ரமுடன் ஜோடி சேர்த்தார். அப்துல் சமத் 14.4 ஓவரில் ஐடன் மார்க்ரம் 27 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஹர்பிரீத் பர், தீபக் ஹூடாவுடன் ஜோடி சேர்த்தார்.

ஜேசன் ஹோல்டர் 15.4 ஓவரில் தீபக் ஹூடா 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய நாதன் எலிஸ், ஹர்பிரீத் பருடன் ஜோடி சேர்த்தார். இறுதியில் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 125 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.