உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டு காலமாக தனது கைப்பிடிக்குள் வைத்து படாதபாடு படுத்தி வரும் கொரோனா வைரஸ். உலகில் வாழும் ஏழை எளிய நடுத்தர மக்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் வாட்டி வதைத்து வருகின்றது. உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் டெல்டா வகை கொரோனா பாதிப்பினால் தடுமாறி வரும் நிலையில், ஆல்பா, பீட்டா, கப்பா என பலவகையில் உருமாறி பரவி வருகின்றன.
உலகம் முழுவதும் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருகின்றன. கொரோனாவுக்கு எதிராக அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்த சில தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது. அஸ்ட்ராஜெனகா அதாவது கோவிஷீல்ட் உலக அளவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் தடுப்பூசி மற்றும் பைஸர், சிங்கிள் டோஸ் தடுப்பூசிகள் மட்டுமின்றி மாடர்னா, சினோபார்ம், ஸ்புட்னிக்-வி, கோவாக்சின், சினோவேக் தடுப்பூசிகள் அவசரத் தேவைகளுக்காகப் பயன்படுத்த படுகின்றன.
அஸ்ட்ராஜெனகா அதாவது கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ‘கில்லென்-பார்ஸ் சிண்ட்ரோம்’ என்று அழைக்கப்படும் அரிய வகை நோய் பாதிப்பானது நோய் எதிர்ப்பு சக்தியால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதைக் குறிக்கிறது. மிகவும் அரிதாக நரம்பு கோளாறு ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஐரோப்பிய மருந்து கட்டுப்பாட்டு கழகம் தெரிவித்துள்ளது.