சீனாவில் கொரோனா என்ற மர்ம வைரஸ் காய்ச்சல் முதலில் வுகான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியதாக தகவல்கள் கூறுகின்றன. முதலில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி வருகிறது.
சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு 4 கோடி பேர் வசித்து வரும் வுகானில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதன்விளைவாக, சீன சுகாதார ஆணையம் இன்று காலை வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா வைரஸ் 880 பேருக்கு பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. சீனா முழுவதும் இதற்கு 26 பேர் பலியாகி உள்ளனர் என தகவல்கள் வெளிவந்ததுள்ளன.
இந்நிலையில் சீனாவில் இருந்து கடந்த சில நாட்களில் கேரளா திரும்பியிருந்த 80 பேர் சுகாதாரத்துறையின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 7 பேருக்கு லேசான காய்ச்சல் இருந்ததால் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.