டிஜிட்டல் யுகத்தில் அடியெடுத்து வைத்த காலம் தொட்டே அலைபேசி, டேப், ஐ-பாட் கையில் இருந்தால் உலகமே கையடக்கத்தில் வந்ததில் இருந்தே இன்றைய சமுதாயம் பல வழிகளில் இன்னல்களை ஏற்பட்டாலும் காவல்துறையினர் மற்றும் நீதி துறையினருக்கு அவ்வப்போது துணையாக இருக்கிறது. அதன் வரிசையில், காதலனுக்கு கசாயத்தில் விஷம் கலந்து கொன்ற வழக்கில், நேரடி ஆதாரங்கள் எதுவும் இல்லாத போதும், சூழ்நிலை சான்றுகளை இணைத்து, டிஜிட்டல் ஆதாரங்களின் துணையுடன் குற்றத்தை நிரூபிக்க காதலிக்கு தூக்கு தண்டனை விதிக்க உதவி இருக்கின்றது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தின் பாறசாலையை சேர்ந்த ஜெயராஜன் – பிரியா தம்பதியின் இளைய மகன் ஷாரோன் ராஜ் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி ரேடியாலஜி இறுதி ஆண்டு படித்து வந்தார். மேலும் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா அழகியமண்டபம் பகுதியில் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் கல்லூரிக்குச் சென்றுவர ஒரே பேருந்தில் பயணம் செய்ததில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஜாதி, மத பேதமின்றி ஏழை, பணக்காரன் என்ற பாகுபாட்டை மறந்து கண்களில் தோன்றி, இதயத்தில் முடியும் அகநானூறு படைத்த சங்கத் தமிழ் சமுதாயத்தின் நாத வேர் காதலாக மாறியது.
இது வாழ்க்கைப் படகு வரும் நேற்று வரை நீ யாரோ நான் யாரோ இன்று முதல் நீ வேறோ நான் வேறோ என்ற பாடல் வரிகளாய் மாறினர். மேலும் அலைபேசியில் பாலியல் உணர்வுகளை தூண்டும் விதமாக பேசி பேசி கடலை போட்டனர். ஒருகட்டத்தில் அலைபேசி இவர்கள் போட்ட கடலை பாலியல் உணர்வுகளை தூண்டியதால் இருவரும் கல்லூரியை “காட்” அடித்து விட்டும் பல இடங்களில் தனிமையில் இருந்துள்ளார். மேலும் கிரீஷ்மாவின் வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் ஷாரோன் ராஜை வரவழைத்து தனிமையில் உல்லாசமான இருப்பதை வழக்கமாக கொண்டு இருந்துள்ளார்.
காதல் விவகாரம் கிரீஷ்மாவின் தாய் சிந்துவிற்கு தெரிய வந்தது. இத்தனை தொடர்ந்து சிந்து தனது மகள் கிரீஷ்மாவை கவனிக்க தொடங்கியது மட்டுமின்றி தனது சகோதரர் நிர்மலகுமாரன் நாயர் மூலம் மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை தொடங்கினர். இந்நிலையில், கிரீஷ்மா தனது தாயிடம் ஷாரோன் ராஜ் என்பவரை காதலிப்பதாகவும் அவரை தான் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தனது நிலைப்பட்டதை தெரிவித்துள்ளார்.
ஆனால் கிரீஷ்மாவின் தாய் சிந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் இல்லாமல் 2022 -ஆம் ஆண்டு மார்ச் 4 -ஆம் தேதி கிரீஷ்மாவின் சம்மதம் இல்லாமல் பணக்கார இடத்தில் அதாவது ராணுவ வீரருடன் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இதனை கண்டு அதிர்ந்து போன கிரீஷ்மா ஷாரோன் ராஜிக்கு போன் செய்து தனது வீட்டில் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் நான் உன்னுடன் வந்து விடுகிறேன், இருவரும் எங்காவது சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார். இதையடுத்து ஷாரோன் ராஜ், கிரீஷ்மா சொன்னது போல் வீட்டை விட்டு வெளியேறி ஒரு கோயிலில் தாலியையும் கட்டியுள்ளார்.
மேலும், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் மீண்டும் இவர்களுக்கு திருமணம் செய்து கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பில் ஒரு ஹோட்டலில் இருவரும் உடையுறவு கொண்டுள்ளனர். இதை அறிந்த கிரீஷ்மாவின் தாய் சிந்து ஷாரோன் ராஜ், கிரீஷ்மாவை பிரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். மற்றொருபுறம் ஷாரோன் ராஜூடன் நடந்த திருமண வாழ்க்கையில் கிரீஷ்மாவிற்கு திருப்பி அடையாமல் தவறு செய்து விட்டோமோ என உணர்த்துள்ளார்.
இதனை அறிந்த கிரீஷ்மா தாய் சிந்து மகளின் ஜாதகத்தை ஜோஷியரிடம் காட்டியதாகவும் ஜாதகத்தின்படி அவருக்கு முதல் கணவர் உடனே இறந்துவிடுவார் என்றும் இரண்டாவது கணவர்தான் உயிருடன் இருப்பார் என்றும் அவருடன்தான் கிரீஷ்மா வாழ முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஷாரோன் ராஜிடன் நடந்த திருமணத்தை கிரீஷ்மாவுக்கு திருப்தி இல்லாததால் உறவை முடித்து கொள்ள முடிவு செய்தார். ஷாரோன் ராஜிடன் நெருக்கமாக இருந்த காலங்களில் இருந்த அனைத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை நீக்குவதற்கு முன்னர் இருந்ததை போலவே இருந்து நீக்குவதற்கு முயற்சி செய்தார்.
அந்த முயற்சியில் கிரீஷ்மா காதல் பூவிலுள்ள பனித்துளி போல மெல்ல மெல்ல மறைய, ஷாரோன் ராஜின் காதல் வேரில் உள்ள நீரைப்போல ஆழமாக அவரை கொலை செய்ய கிரீஷ்மா தீர்மானித்துள்ளார். ஆகையால், 2022 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 -ஆம் தேதி அன்று போதைப்பொருள், விஷம், பாராசிட்டமால் மருந்து குறித்தும் பாராசிட்டமாலை எப்படி விஷமாக பயன்படுத்தலாம்? அதை எந்த ஜூஸில் கலந்து கொடுத்தால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது என்றெல்லாம் தனது அலைபேசி வழியாக இணையத்தில் கிரீஷ்மா தேடியுள்ளார்.
இதனை தொடர்ந்து பாராசிட்டமால் மருந்தை, ஜூஸில் கலந்து “ஜூஸ் சேலஞ்ச்” எனச் சொல்லி அந்த ஜூஸை குடிக்கச் செய்துள்ளார். ஆனால் ஏதாவது ஒரு காரணத்தால் அந்த ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணத்தால் “ஜூஸ் சேலஞ்ச்” தடைப்பட்டு போக எமனின் பாச கயிற்றிலிருந்து ஷாரோன் ராஜின் உயிர் தப்பிக்கொண்டே சென்றுள்ளது.
ஆனாலும் கிரீஷ்மா தனது காதலனை கொலை செய்யும் இருந்து கைவிடவில்லை. ஜூஸுடன் பாராசிட்டமால் கலக்குவது எப்படி என்று கிரீஷ்மா 23 முறை இணையத்தில் கிரீஷ்மா தேடியுள்ளார். நெல்லையைச் சேர்ந்த ராணுவ வீரருக்கு திருமணம் நடக்கவிருப்பதால், திருமணத்திற்கு முன் காதலனுடன் நெருக்கமாக இருக்கும் அனைத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை எப்படியாவது நீக்கியாக வேண்டும் என்று தீவிரம் கட்ட தொடங்கினார்.
வீட்டில் யாருமில்லை ஜாலியா இருக்கலாம் என கிரீஷ்மாவிடமிருந்து அழைப்பு வந்த அடுத்த நொடியே கிரீஷ்மாவின் மீது இருந்த மோகத்தில் வீட்டை ஷெரான் ராஜ் அடைந்தான். கஷாயத்தில் பாராகுவாட் கலந்ததை ஷாரோன் ராஜிடம் என் மீது உனக்கு காதல் இருந்தால் நான் கொடுக்கும் கசப்பு கசாயத்தை குடி பார்ப்போம் என கூறியுள்ளார். காதலைப்போல் மிகச் சிறந்த பரிசும் இல்லை.. மிக மோசமான தண்டனையும் இல்லை என உணர்ந்த ஷெரான் ராஜ், காதலி மீது கண்மூடித்தனமான அன்பு காரணமாக கிரீஷ்மா கொடுத்த கசாயத்தை குடித்தான். இதன்பிறகு கசப்பு சுவை நீங்க வேறு ஒரு இனிப்பு ஜூஸையும் கிரீஷ்மா கொடுத்துள்ளார்.
இந்த ஜூஸை குடித்ததும் உடல் ஒரு மாதிரி இருக்கவே தனது நண்பனை வரவழைத்து அவருடன் பைக்கில் ஷெரான் ராஜ் வீடு திரும்பினார். அப்போது திரும்பும் வழியெல்லாம் ஷெரான் ராஜ் வாந்தி எடுத்து வந்துள்ளான். அப்போது அந்த நண்பரிடம், கிரீஷ்மா எனக்கு கசாயம் கொடுத்து ஏமாற்றிவிட்டார் என ஷெரான் ராஜ் கூறியுள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஷெரான் ராஜ் சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டு ஷெரான் ராஜ் உயிரிழந்தான்.