கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் காலை 7.35 மணிக்கு போப் பிரான்சிஸ் உயிர் பிரிந்ததாக வாடிகன் தெரிவித்து உள்ளது. போப் பிரான்சிஸிக்கு கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவருக்கு சுவாச குழாயில் பாதிப்பு ஏற்பட்டது.

மேலும், வைரசுகள், பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகள் என பல வகையான தொற்று பாதிப்பும் ஏற்பட்டிருந்தது. மருத்துவமனையில் 5 வாரங்களுக்கு மேலாக சிகிச்சையில் இருந்து போப் பிரான்சிஸ் உடல்நலம் தேறிய நிலையில் வீடு திரும்பியனார்.

ஈஸ்டா் திருநாளையொட்டி செயின்ட் பீட்டா்ஸ் சதுக்கத்தில் போப் பிரான்சிஸ் மக்களைச் சந்தித்து ஆசி வழங்கியிருந்தார். இந்நிலையில், இன்று காலை வாடிகனில் உள்ள தனது இல்லத்தில் காலமானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காலை 7.35 மணிக்கு போப் பிரான்சிஸ் உயிர் பிரிந்ததாக வாடிகன் தெரிவித்து உள்ளது.