ஓபிஎஸ்- இபிஎஸ் அணியினர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு மரியாதை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் 8-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஜெ. ஜெயலலிதா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அண்ணா சிலை அருகே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் 8-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஓபிஎஸ் அணியினர் புறநகர் மாவட்ட செயலாளர் டி.டி.கே. காமராஜ், சார்பில் அண்ணா சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் ஓபிஎஸ் அணியில் புதிதாக சேர்ந்த நகரம் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் 50 பேர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், எடப்பாடி அணி அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் 8-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி வடதாரை பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு எடப்பாடி அணி தாராபுரம் நகர செயலாளர் சி. ராஜேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து. 300 பேர்கள் கருப்பு சட்டை அணிந்து அங்கிருந்து அதிமுக கொடியுடன் அரசமரம். சின்னகடைவீதி, டி.எஸ். கார்னர். பெரிய கடைவீதி. பூகடைகார்னர். வழியாக மௌன ஊர்வலம் வந்தனர்.

இதனைத் தொடர்ந்து பழைய நகராட்சி அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி 3 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். பொருளாளர் சின்னப்பன்.மற்றும் ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ்,பாலு, செல்வகுமார் உள்ளிட்ட அதிமுகவினர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.