ஐ.பி.எல். கிரிக்கெட் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி

அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதும் ஐபிஎல் தொடரின் 38-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவர் இயன் மோர்கன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மான் கில், மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர்.

முதல் ஓவரில் 10 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி பந்தில் சுப்மான் கில் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி, வெங்கடேஷ் ஐயருடன் ஜோடி சேர்த்தார். ஷர்துல் தாக்குர் 5.1 ஓவரில் வெங்கடேஷ் ஐயர் 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதனை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவர் இயன் மோர்கன், ராகுல் திரிபாதியுடன் ஜோடி சேர்த்தார். ஆனால் ஜோஷ் ஹேசில்வுட் 9.1 ஓவரில் இயன் மோர்கன் 14 பந்துகளில் வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவர் இயன் மோர்கன், ராகுல் திரிபாதியுடன் ஜோடி சேர்த்தார். ஆனால் ஜோஷ் ஹேசில்வுட் 9.1 ஓவரில் இயன் மோர்கன் 14 பந்துகளில் வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய நிதிஷ் ரானா , ராகுல் திரிபாதியுடன் ஜோடி சேர்த்தார். ரவீந்திர ஜடேஜா 12.2 ஓவரில் ராகுல் திரிபாதி 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதனை தொடர்ந்து களமிறங்கிய ஆண்ட்ரே ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக் அதிரடியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் ஷர்துல் தாக்குர், ஹேசில்வுட் தலா 2 விக்கெட்டையும், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாப் டு பிளிஸ்சிஸ் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இருவரும் 7 ஓவர் முடிவில் 70 ரன்கள் சேர்த்தனர். ஆண்ட்ரே ரஸ்ஸல் 8.2 ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய மொயீன் அலி, பாப் டு பிளிஸ்சிஸ்ஸிடன் ஜோடி சேர்த்தார்.

பிரஷித் கிருஷ்ணா 11.3 ஓவரில் பாப் டு பிளிஸ்சிஸ் 43 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய அம்பதி ராயுடு, மொயீன் அலியுடன் ஜோடி சேர்த்தார். சுனில் நரைன் 14.2 ஓவரில் அம்பதி ராயுடு 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா, மொயீன் அலியுடன் ஜோடி சேர்த்தார். லுகி பெர்ஹூசன்16.4 ஓவரில் மொயீன் அலி 32 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்து களமிறங்கிய மகேந்திர சிங் தோனி,சுரேஷ் ரெய்னாவுடன் ஜோடி சேர மகேந்திர சிங் தோனி வந்த வேகத்தில் நடையை கட்டினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.3 ஓவரில் 142 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்த நிலையில் 15 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையிருந்தது. கடைசி ஓவரில் 2 விக்கெட்களை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.