துபாய் சர்வதேச மைதானத்தில் ஏற்கனவே பிளே ஆப் சுற்றிற்கு தகுதி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் ஐபிஎல் தொடரின் 56-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தலைவர் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர்.
தொடக்கம் முதலே இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஹர்ஷல் படேல் 10.1 ஓவரில் ஷிகர் தவான் 43 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட், பிரித்வி ஷாவுடன் ஜோடி சேர்த்தார். யுஸ்வேந்திர சாஹல் 11.2 ஓவரில் பிரித்வி ஷா 48 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். ரிஷப் பண்ட்(10), ஸ்ரேயாஸ் ஐயர்(18), ஷிம்ரான் ஹெட்மியர்(28), என ஆட்டமிழந்து வெளியேற 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது.
165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக தேவதூத் படிக்கல் மற்றும் தலைவர் விராட் கோலி களமிறங்கினர். ஆனால் அன்ரிச் நார்ட்ஜே முதல் ஓவரின் கடைசி பந்தில் தேவதூத் படிக்கல் ரன் ஏதுமில்லாமல் இல்லாமல் வெளியேற மேலும் அன்ரிச் நார்ட்ஜே இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி 4 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2.1 ஓவரில் 6 ரன்களுக்கு 2 ரன்களை இழந்து தடுமாறியது.
அடுத்து களமிறங்கிய ஸ்ரீகர் பாரத் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் இருவரும் ஜோடி சேர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்க அக்சர் பட்டேல் 9.3 ஓவரில் ஏபி டிவில்லியர்ஸ் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய க்ளென் மேக்ஸ்வெல், ஸ்ரீகர் பாரதுடன் ஜோடி சேர்ந்தார்.
இருவரும் நிதானமாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த 12 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அன்ரிச் நார்ட்ஜே 19 வது ஓவரை வீச வெறும் 4 ரன்களை விட்டு கொடுக்க 6 பந்துகள் 15 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆட்டம் நகர்ந்தது.
கடைசி ஓவரை அவேஷ் கானிடம் கொடுக்க முதல் பந்தில் 4, 2, 1, 0, 2, 1w, கடைசி பந்தில் 4 ரன்கள் அடித்தால் ஆட்டம் சமநிலை என்ற நிலையில் ஸ்ரீகர் பாரத் இமாலய சிக்சர் அடித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்ற செய்தார். இதன்மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீழ்த்தியது.