இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது ரசிகர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் 14-வது ஐ.பி.எல். போட்டிகள் மும்பை, டில்லி, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி தொடங்கியது. வீரர்கள், கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு வளையத்திற்குள் தங்களை இணைத்து போட்டியில் பங்கேற்றனர். முதல் 29 ஆட்டங்கள் எந்தவித சலசலப்பும் இன்றி நடந்து முடிந்தது.
அதன் பிறகு திடீரென 4 அணிக்குள் கொரோனா ஊடுருவி சில வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதால் வேறு வழியின்றி மே 3-ந்தேதியுடன் ஐ.பி.எல். போட்டி நிறுத்தப்பட்டு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள ஆட்டங்களை நடத்த முடிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் அதை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றியது. அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் செப்டம்பர் 19தேதி முதல் அக்டோபர் 15-ந்தேதி வரை எஞ்சிய 31 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது.
துபாயில் உள்ள மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதும் ஐபிஎல் தொடரின் 33-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் விருத்திமான் சாஹா களமிறங்கினர்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அக்சர் பட்டேல் வீசிய முதல் ஓவரில் மூன்றாவது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் டேவிட் வார்னர் ஆட்டமிழந்து வெளியேறி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன், விருத்திமான் சாஹாவுடன் ஜோடி சேர்த்தார். இருவரும் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். க
கிசோ ரபாடா 4.6 ஓவரில் விருத்திமான் சாஹா 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய மணீஷ் பாண்டே , கேன் வில்லியம்சனுடன் ஜோடி சேர்த்தார். ஆனால் லலித் யாதவ் 9.5 ஓவரில் கேன் வில்லியம்சன் வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய கேதர் ஜாதவ், மணீஷ் பாண்டேவுடன் ஜோடி சேர்த்தார். ஆனால் ககிசோ ரபாடா 10.1 ஓவரில் மணீஷ் பாண்டே 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய அப்துல் சமத், கேதர் ஜாதவுடன் ஜோடி சேர்த்தார். அன்ரிச் நார்ட்ஜே 12.6 ஓவரில் கேதர் ஜாதவ் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி12.6 ஓவரில் 74 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி கொண்டுள்ளது.