வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் ஆந்திராவில் நேற்று கரையை கடந்தாலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , திருவள்ளூர் மாவட்டங்களை சூறையாடிவிட்டு சென்று விட்டது. சென்னையில் பேயாக பெருமழை கொட்டித்தீர்த்துள்ளது. இதனால் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மிக்ஜாம் புயலால் பெருமழை வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு சில நாட்கள் ஆகும்.
நகர் பகுதிகளில் வெள்ளம் வடிந்தாலும் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. பள்ளிகள், கல்லூரிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளன. இந்நிலையில் சென்னையில் மழை ஓய்ந்து 3 நாட்களாகியும் மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடியயும் இல்லை நிலைமை இன்னும் மாறவில்லை.
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த திராவிட கட்சிகள் ஊழலும் லஞ்சமும் கரைபுரண்டு ஓடியாதல் சென்னையின் இந்த அவல நிலைக்கு காரணம் என நடுநிலையானவர்களும் அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி திமுகவையும் வறுத்தெடுத்து கொண்டுள்ளனர். இந்நிலையில்,அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி பிரியா, ”ஊழலும் லஞ்சமும் கரைபுரண்டு ஓடினால் எப்படி மழை நீர் வடிந்து ஓடும்? பெரும்பாலான கட்டிடங்கள், வீடுகள் எல்லாம் ஏரியில் கட்டபட்டுள்ளது (அனுமதி வழங்க லஞ்சம் போதும்) என தனது குற்றசாட்டை முன்வைத்துயுள்ளார்.