இம்ரான் கானின் மனைவி நீதிமன்றத்தில் கதறல்..! நீதிக்கு இடமில்லை..!

பாகிஸ்தான் நீதிமன்றத்தில் நீதிக்கு இடமில்லை. நீதி கேட்டு, இனி நீதிமன்றத்துக்கு வரவே மாட்டேன்’ என, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவி கண்ணீருடன் நீதிமன்றத்தில் கதறியழுத காட்சி அங்கு பரபரப்பு ஏற்படுத்தியது.

ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமீன் கோரி இஸ்லாமாபாத் மாவட்ட மாஜஸ்திரேட் நீதிமன்றத்துக்கு புஷ்ரா பீபி நேற்று வந்திருந்தார். அப்போது, நீதிபதி முன் கண்ணீர் மல்க, புஷ்ரா பீபி பேசுகையில், ‘கடந்த 9 மாதங்களாக, நீதிமன்றத்தில் இம்ரான் கானுக்கு ஜாமீன் கேட்டு அலைந்து கொண்டிருக்கிறேன். சிறையில் அடைக்கப்பட்டுள்ள என் கணவர் இம்ரான் கான், மனிதர் இல்லையா? இந்த அநீதியை எந்த நீதிபதியும் கண்டுகொள்வதில்லை.

இந்த நீதிமன்றத்தில் நீதிக்கு இடமில்லை; இனி, நீதிகேட்டு நீதிமன்றத்துக்கு வரவே மாட்டேன்’ என்றார். முன்னாள் பிரதமரின் மனைவி, நீதிமன்றத்தில் கதறியழுத காட்சியால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தியது.