இங்கிலாந்து வெற்றிபெற 291 ரன்களை கடைசி நாள் இலக்கு // ஓவல் டெஸ்ட் இங்கிலாந்து வெற்றியை இந்திய பந்து வீச்சாளர்கள் தடுப்பார்களா ?

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 போட்டிகளில் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 4-வது டெஸ்ட் போட்டி நேற்றைய முதல்நாள் லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இந்திய அணி ஆட்டத்தின் முதல் நாளே 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி 84 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்து. இங்கிலாந்து அணி இந்திய அணியை விட 99 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து, 2 வது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய வீரர்களின் பொறுப்பான ஆட்டதால் இந்திய அணி 3-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி 171 ரன்கள் முன்னிலை பெற்றது.

இந்நிலையில், 4-ம் நாள் ஆட்டம் இன்று போட்டி தொடங்கிய சில நிமிடங்களில் கிறிஸ் வோக்ஸ் பந்து வீச்சில் ஜடேஜா 17 ரன்களளில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹானேவும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் மற்றும் கேப்டன் விராட் கோலி பொறுப்புடன் ஆடிய நிலையில் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேப்டன் விராட் கோலி மொயீன் அலி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ஷர்துல் தாக்குர் அதிரடியாக ஆட மறுமுனையில் ரிஷப் பண்ட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஷர்துல் தாக்குர் 72 பந்துகளில் 60 ரன்கள் குவித்து ஜோ ரூட் பந்து வீச்சில் ஆட்டமிழக்க நிதானமாக ஆடிய ரிஷப் பண்ட் 50 ரன்கள் எடுத்து நிலையில் மொயீன் அலி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய பும்ரா 24 ரன்களையும், உமேஷ் 25 ரன்களையும் குவித்தனர். இறுதியில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 466 ரன்கள் குவித்தது.

இதனால், இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்தை விட 367 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து, 2 வது இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் ரோரி ஜோசப் பர்ன்ஸ் மற்றும் ஹசீப் ஹமீது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இங்கிலாந்து அணிகளின் பொறுப்பான ஆட்டதால் இங்கிலாந்து அணி 4-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணி 291 ரன்கள் 90  ஓவர்களில் எடுக்கவேண்டிய நிலையில் உள்ளது.