கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிபொருள் விலை கிடுகிடுவென உயர்வு இதன் விளைவாக அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைமுட்டி கொண்டுள்ளது. இதன்காரணமாக உலகெங்கும் ஆங்காங்கே மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். இது மட்டுமல்லாது மேற்கத்திய நாடுகளில் உணவு பொருட்கள் பற்றாக்குறை இதற்கான காரணங்களை ஆராய்ந்தால் உக்ரைனின் எல்லைகளில் படைகளை குவித்து கொண்டிருந்த ரஷ்யா பிப்ரவரி 24-ம் தேதி அதிகாலை வானை கிழித்துக் கொண்டு உக்ரைனின் தலைநகர் கீவ்-ஐ நோக்கி ரஷ்யாவின் ராணுவ விமானங்கள் சீறிப்பாய்ந்தன.
இந்த அறிவிப்பு தொலைக்காட்சிகளில் வெளியான சற்று நேரத்திலேயே உக்ரைனின் மேற்கு, கிழக்குப் பகுதிகள் மற்றும் நட்பு நாடான பெலாரஸ் வழியாக ரஷ்யப் படைகள் மும்முனை தாக்குதலை தொடங்கின. ரஷ்யாவின் தாக்குதலை எதிர்பார்த்திருந்த உக்ரைனும் பதிலடி கொடுக்க தொடங்கியது. அதுவரை உக்ரைனுக்கு ஆதரவுக் குரல் தந்து கொண்டேயிருந்த நேட்டோ நாடுகளால், உக்ரைன் கைவிடப்பட்டு “ரஷ்யாவிற்கு எதிரான யுத்தத்தில் உக்ரைன் தனித்து விடப்பட்டது. நேட்டோ நாடுகளை நம்பி ஏமாந்த உக்ரைன் எங்களுடன் நின்று போரிட யாருமில்லை. எங்களுக்கு நேட்டோ பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய யாரும் முன்வரவில்லை” என்று புலம்ப உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி ஆரம்பித்தார் .
உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றினாலும் இப்போதுவரை தலைநகரை ரஷ்ய படைகள் கைப்பற்றவிடாமல் உக்ரைன் போராடி வருகிறது. மேலும் சமூக வலைதளங்களில் பல வீடியோ உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியே வெளியிட்டு அண்டை நாடுகளின் ஆதரவு மற்றும் நேட்டோ நாடுகளின் அனுதாபத்தை பெற்றதன் விளைவு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் மீது பொருளதார தடைகள் விதித்தது. மட்டுமல்லாது சமூக வலைதளங்கள் தடை மற்றும் பல அந்நிய நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறியது மட்டுமின்றி பணபரிவர்த்தனை முடக்கப்பட்டது.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை கண்டித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பினர்களில், இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்த நிலையில் 11 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.இருந்த போதிலும், ரஷ்யா தன்னுடைய வீட்டோ அதிகாரம் மூலமாக இந்த தீர்மானத்தை முறியடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போரின் மூலம் 1940 க்கு பிறகு வரலாற்றில் அழிக்க முடியாத இருண்ட பக்கங்களை ரஷ்யா எழுதுகிறது என்று ஐரோப்பிய ஒன்றியத்தலைவர்கள் விமர்சித்தனர்.
இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகளால் எதுமே செய்ய முடியாத ஹிட்லர், ரஷ்யா நேச நாடுகளுடன் இணைந்து போரிட 1945 மே மாதம் ஜெர்மனியை சரணடைய செய்தது வரலாற்று பக்கங்கள் இன்னமும் மறக்கவில்லை. ஆனால் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் காலனி ஆதிக்கம் வீழ்ந்தாலும் இவர்களுடைய அந்நிய நாட்டின் மீதுள்ள வணிக மோகம் இன்றும் தீரவில்லை.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அணு ஆயுத பொருட்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருமானம் பார்க்கும் இவர்களுக்கு மற்ற நாடுகள் இந்த அணு ஆயுத உற்பத்தி செய்தால் அந்த நாடுகளை தனிமை படுத்தி பொருளாதார தடைகளை விதித்து அந்த நாட்டையும் நாட்டு மக்களையும் கொடுமை படுத்தி வருவது வழக்கமான ஒன்றாகும். ஈராக், ஈரான் மற்றும் வட கொரியா போன்ற நாடுகள் இவர்களுடன் சிக்கி சின்னாபின்னமாகி நிலையில் வட கொரியா இன்றும் மீண்டுவராதது நாடறிந்தது. இதுபோன்ற ஆதிக்க சக்திகளிடம் இருந்து மீண்டது ரஷ்யாவின் நட்பு நாடான இந்தியா மட்டுமே என்பது வரலாறு.
வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு என்ற ஒன்றை அமெரிக்கா, பிரிட்டன், டென்மார்க், பெல்ஜியம், கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஐஸ்லாந்து, லக்சம்பர்க், போர்ச்சுக்கல், நெதர்லாந்து மற்றும் நார்வே ஆகிய 12 நாடுகள், 1949-ல், இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் உருவாக்கிய ராணுவ கூட்டமைப்பு தான் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போருக்கு மூலக்காரணம். இந்த போருக்கும் நேட்டோ நாடுகளுக்கும் என என்ன தொடர்பு என்பதை அலசி ஆராயலாம்.
இந்த நேட்டோ அமைப்பில் 12 நாடுகளைத் தவிர, ஜெர்மனி, அல்பேனியா, பெலாரஸ், போலந்து, செக் குடியரசு உள்ளிட்ட 30 நாடுகள் இந்த நேட்டோவில் உறுப்பு நாடுகளாக உள்ளது. இந்த நேட்டோ அமைப்பில் உள்ள ஒரு நாட்டின் மீது, பிற நாடுகள் போர் தொடுக்கும் பட்சத்தில், நேட்டோவின் பிற நாடுகளும் உதவிக்கு வர வேண்டும் என்பதுதான் அடிப்படையான விஷயம். இந்த அமைப்பின் ஒப்பந்தப்படி, உறுப்பு நாடுகள் மீது மற்ற நாடுகள் போர் தொடுத்தால், பிற நாடுகள் உதவிக்கு வர வேண்டும் என்பதே பிரதான கொள்கையாகும்.
ஆனால், 1991-ல் சோவியத் ஒன்றியம் சிதறுண்டபோது, சோவியத்தின் அணு ஆயுதக் கிடங்குகளில் மூன்றில் ஒரு பகுதி உக்ரைனில் இருந்தது. மேலும் அது உலகின் மூன்றாவது பெரிய அணு ஆயுதக் கிடங்காக இருந்தது. இந்த அணு ஆயுதங்கள் அனைத்தும் சோவியத்திலிருந்து பிரிந்து சென்ற சுதந்திர நாடுகளின் தன்னுடன் எல்லையைப் பகிர்ந்துகொண்டுள்ள முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளின் உள்நாட்டு அரசியல் மாற்றங்கள் ரஷ்யாவுக்குப் புதிய பாதுகாப்பு சவால்களைத் தோற்றுவித்துள்ளன. ஆனால் உக்ரைன் 1994-ல் ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திட்ட பின்பு, தன்னிடம் இருக்கின்ற அனைத்து அணு ஆயுதங்களையும் 1996-ல் ரஷ்யாவிடம் ஒப்படைத்தது.
மேலும் உக்ரைன், மேற்கில் ஐரோப்பிய நாடுகளுடனும், கிழக்கில் ரஷ்யாவுடனும் எல்லைகளை பகிர்ந்து கொண்டுள்ளது எனவே உக்ரைனில் மேற்கத்திய சார்பு மக்கள், கிழக்கில் ரஷ்யாவை விரும்பும் மக்கள் என இரு பிரிவுகளாக உள்ளனர். 2010 ஆம் ஆண்டு ரஷ்ய ஆதரவு பெற்ற அதிபர் விக்டர் யானுகோவிச் பதவியேற்றபோது, ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒருங்கிணைப்புக்கான ஒப்பந்தத்தை நிராகரித்தார். அதை எதிர்த்து ”யூரோமைடன்” என்ற பெயரில் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்டன. ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தால் பொருளாதார நிலை மேம்படும் என மக்கள் கருதி ஐரோப்பாவுடனான நெருக்கமான உறவுகளை அவர்கள் கலாசார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் விரும்பினர்.
இந்நிலையில், ஓட்டோமான் பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, ரஷ்யப் பேரரசில் உக்ரைன் இணைந்ததன் 300-ம் ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில், 1954-ல் அன்றைய சோவியத் ஒன்றியத்தின் அதிபர் நிகிதா குருஷேவ் கிரீமியாவை உக்ரைனுக்குப் பரிசாக வழங்கியதை கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனிலிருந்த கிரீமியா பகுதியை மீண்டும் ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. மேலும், சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த நாடுகள் நேட்டோவில் உறுப்பு நாடுகளாக இணைக்க கூடாது என்று ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
மேலும், உக்ரைன் எல்லைகளில் பல்வேறு பிரச்சனைகள் நீடித்து வருகின்றன. நேட்டோவில் உறுப்பு நாடாக தன்னை இணைத்துக்கொண்டால், எல்லையில் பிரச்சனை மற்றும் கிளர்ச்சியாளர்களைச் சமாளிக்க உதவும் என உக்ரைன் அரசு நம்புகிறது. இதுமட்டுமின்றி தன் தாய் நாடான ரஷ்யா, அமெரிக்காவே பயப்படும் அளவிற்கு அதிக ராணுவ பலம் பொருந்திய நாடு . ஆகையால், ரஷ்யாவுடன் ஏதாவது பிரச்சனை என்றால் தன்னந்தனியாக எதிர்ப்பது முடியாத காரியம். இதனால், எப்படியாவது நேட்டோவில் தம்மை இணைத்து கொண்டால் நேட்டோ தமக்கு ஆதரவாக களமிறங்கும் என்ற யுத்தியை உக்ரைன் அரசு கையாளுகிறது.
இந்நிலையில் ரஷ்ய ஆதரவாளர்களுக்கும் ஐரோப்பிய ஆதரவாளர்களுக்கும் இடையே பெரும் மோதல்கள், உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்குப் பிராந்தியங்களில் தோன்ற பூர்விக ரஷ்யர்கள் பெருமளவில் வாழும் கிரீமியாவில் கீவுக்கு எதிராகவும் ரஷ்யாவுக்கு ஆதரவாகவும் போராட்டங்கள் வெடித்தன. இதன் காரணமாக ரஷ்ய ஆதரவாளர்கள் கிரீமியாவில் உள்ள அரசாங்கக் கட்டிடங்களையும் விமான நிலையங்களையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர 2014-ல் ரஷ்ய அதிபர் புதின் கிரீமியாவை ரஷ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரித்தார். இதனைத் தொடர்ந்து, ரஷ்யாவின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதிக்க அன்று முதல் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு கடுமையான பாதிப்புக்குள்ளாகி இன்றுவரை பனிப்போர் நடைபெற்று வருகின்றது.
மேலும் நோட்டோ நாடுகளில் உக்ரைனை சேர்த்து கொண்டால் உக்ரைனின் உள்ள நாட்டு பிரச்சனை காரணம் காட்டி நோட்டோ படைகளை ரஷ்யா எல்லைகளில் நிறுத்த அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் திட்டம் திட்டியது. கடந்த ஆண்டு அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன், ‘நோட்டோ’வுடன் உக்ரைன் சேர்வதற்கு ஊக்கமளித்தது ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்கா அதிபர் ஜோ பைடனுடனான காணோளிப் பேச்சுவார்த்தையின்போது, இந்த முயற்சிகள் தங்களது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளன என தெரிவிக்க அதற்கு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், ரஷ்யாவின் மீது கடுமையான பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என மிரட்டல் விடுத்தார். .
இதற்கிடையில், உக்ரைன் எல்லையில் படை குவிப்புக்கு ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உக்ரைன் எல்லையை நோக்கி விரைந்தனர். கூடுதலாகத் தனது நேசநாடான பெலாரஸில் அணு ஆயுதப் போர்ப் பயிற்சியிலும் ரஷ்ய ராணுவம் ஈடுபட்டுவந்தது. மேலும் உக்ரைன் மீது முப்படைகளின் மூலமும் முழுத் தாக்குதலுக்கு உத்தரவிட்டுள்ளார்