அதிவேகமாக 27000 ரன்களை கடந்து விராட் கோலி மீண்டும் ஒரு இமாலய சாதனை..!

வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதனை தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்காளதேசம் அணி மொமினுல் ஹக் 40 ரன்னும், முஷ்பிகுர் ரகீம் 6 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருக்க மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்பட. 35 ஓவர் மட்டுமே வீசிய நிலையில் வீச நிலையில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்து நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து முடிந்தது. 2-வது நாள் போட்டியும், நேற்றைய 3-வது நாள் ஆட்டமும் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

மழை இல்லாததால் இன்றைய 4-வது நாள் ஆட்டம் தொடங்கப்பட்டது. 11 ரன்கள் எடுத்த நிலையில் முஷ்பிகுர் ரகீமும் 13 ரன்னில் லிட்டன் தாஸும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து வந்த சாஹிப் அல் ஹசன் 9 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மொமினுல் சதம் விளாசி அசத்தினார்.

அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற வங்கதேச அணி 74.2 ஓவரில் 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் பும்ரா 3 விக்கெட்டும் ஆகாஷ் தீப், அஸ்வின், சிராஜ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைதொடர்ந்து முதல் இன்னிஸ்ங்ஸ் தொடங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட தொடங்கியது. இதன்விளைவாக ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் 3 ஓவர்களில் 50 ரன்களை கடக்க டெஸ்ட் தொடரில் புதிய சாதனை படைத்தனர். மேலும் ரோகித் சர்மா 23 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் இணைத்த சுப்மன் கில் தொடர்ந்து அதிரடியாக விளையாட அதிவேகமாக 10.1 ஓவர்களில் 100 ரன்களை கடக்க டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி மேலும் ஒரு புதிய சாதனை சாதனை படைத்துள்ளது. ஜெய்ஸ்வால் அரை சதம் கடந்த 72 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சுப்மன் கிலுடன் இணைத்த ரிஷப் பந்த் தொடர்ந்து அதிரடியாக விளையாட சுப்மன் கில் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரிஷப் பந்துடன் இணைத்த விராட் கோலி தொடர்ந்து அதிரடியாக விளையாட அதிவேகமாக 150 ரன்களை கடந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி மேலும் ஒரு புதிய சாதனை சாதனை படைத்துள்ளது. ரிஷப் பந்த் 9 ரன்களில் ஆட்டமிழக்க விராட் கோலியுடன் இணைத்த ராகுல் இருவரும் அதிரடியாக விளையாடினர். இதன்விளைவாக இந்திய அணி 200 ரன்களை கடக்க மேலும் ஒரு புதிய சாதனை படைத்துள்ளது.

விராட் கோலி அதிரடியாக அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 35 பந்துகளில் 1 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 47 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். ராகுலுடன் இணைத்த ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து அதிரடியாக விளையாட அதிவேகமாக 250 ரன்களை கடந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி மேலும் ஒரு புதிய சாதனை சாதனை படைத்துள்ளது. இந்திய அணி 34.4 ஓவர்களில் 285 ரன்களுக்கு 9 விக்கெட் இழக்க 52 ரன்கள் முன்னிலையில் டிக்ளர் செய்து.

இந்த சூழலில் விராட் கோலி நெறைய ஆட்டத்தில் 30 ரன்களை கடந்த போது சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 27,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். இதற்கு முன்பு 27 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை சச்சின் டெண்டுல்கர் 623 இன்னிங்சில் தொட்டார். ஆனால், விராட் கோலி வெறும் 594 இன்னிங்சில் அதிவேகமாக 27 ஆயிரம் ரன்களை கடந்து அசத்தி உள்ளார்.

மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 34 ஆயிரத்து 357 ரன்களுடன் முதலிடத்திலும் 28016 ரன்களுடன் இலங்கை வீரர் சங்ககாரா இரண்டாவது இடத்திலும் 27,483 ரன்களுடன் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மூன்றாம் இடத்திலும் இருக்கும் நிலையில் விராட் கோலி நான்காம் இடத்தில் இருக்கிறார்.

மேலும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கை கடக்க 484 ரன்களும், இலங்கை வீரர் சங்ககாரா கடக்க 1016 ரன்களும் தான் தேவைப்படுகிறது. அதனை விராட் கோலி இந்த ஆண்டுக்குள்ளே முறியடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

இரண்டாவது இடத்தில் இலங்கை வீரர் சங்ககாரா 28016 ரன்களுடன் இருக்கிறார். மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் 27,483 ரன்களுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். தற்போது ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு வெறும் 484 ரன்கள் தான் தேவைப்படுகிறது. அதனை விராட் கோலி இந்த ஆண்டுக்குள்ளே முறியடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என கூறலாம்.