யாருனு நெனச்ச தோனியின் ரீப்ளேஸ்மென்ட் .. 34 பந்துகளில் அரைசதம் அடித்த ரிஷப் பண்ட்..!

துலீப் டிராபி தொடரில் இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியின் 2-வது இன்னிங்ஸ் ரிஷப் பண்ட் 34 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். இதனால் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் நிச்சயம் கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

2022-ஆம் ஆண்டு நெடுஞ்சாலை கார் விபத்தில் சிக்கிய இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட், சுமார் 18 மாதங்களுக்கு பின் ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுத்தார். ஐபிஎல் தொடரில் மிடில் ஆர்டரில் களமிறங்கி சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட், டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார். அதில் இந்திய அணியின் எதிர்பார்ப்பை ரிஷப் பண்ட் பூர்த்தி செய்தார்.

இருந்தாலும் ரிஷப் பண்ட்-டம் இருந்து எதிர்பார்த்த அளவிற்கான பெரிய இன்னிங்ஸ் வெளிப்படவில்லை. இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும் சொதப்பிய ரிஷப் பண்ட், டெல்லி பிரீமியர் லீக் தொடரிலும் சொதப்பினார். இந்நிலையில் இந்திய அணிக்கான ஹோம் சீசன் தொடர் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இந்நிலையில் வங்கதேசம் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கு முன்பாக, இந்திய அணியின் அனைத்து வீரர்களையும் துலீப் டிராபியில் விளையாட வைக்க பிசிசிஐ முடிவு செய்தது. அதன்படி ரோஹித் சர்மா, பும்ரா, விராட் கோலி, அஸ்வின் உள்ளிட்ட சில வீரர்களை தவிர அனைவரும் துலீப் டிராபிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

அந்த வகையில் ரிஷப் பண்ட் இந்தியா பி அணியில் தேர்வு செய்யப்பட்டார். தற்போது இந்தியா ஏ – இந்தியா பி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடந்து வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். தொடர்ந்து 2-வது இன்னிங்ஸ் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் மரண மாஸ் கம்பேக்கை கொடுத்தார்.

தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட், எந்த பவுலராக இருந்தாலும் பவுண்டரியை விளாசி கொண்டே இருந்தார். அதேபோல் குல்தீப் யாதவ் வீசிய முதல் ஓவரிலேயே ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசி 34 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். முதல்தர கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் அடிக்கும் 20-வது அரைசதம் இதுவாகும். சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் 47 பந்துகளில் 2 சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 61 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். இதனால் ரிஷப் பண்ட் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பார் என ரசிகர்கள் பார்க்கப்படுகிறது.

சோதனைகளை..! சாதனைகளாக..! மாற்றும் ரிஷப் பந்த்;

இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் தோனி கிரிக்கெட் வரலாறு, ஒருபுறம் வீரேந்தர் சேவாக் மறுபுறம் சௌரவ் கங்குலி இருவரின் விளையாட்டை நினைவூட்டும் வகையில் விளையாடும் அதிரடி ஆட்டத்திற்கு சொந்தக்காரான இளம் வீரர் ரிஷப் பந்த் இந்திய அணியின் வருகைக்கு பிறகு முடிவிற்கு வந்தது எனலாம்.

இதனால் மகேந்திரசிங் தோனியின் ரசிகர்கள்  ரிஷப் பந்தின் ஆட்டத்தை வெறுத்து, விமர்சனங்களை அடுக்கடுக்காக வைத்தனர். மகேந்திரசிங் தோனி இடத்திற்கு வந்த  ரிஷப் பந்த் சர்வதேச போட்டிற்கு வந்த புதிதில் மகேந்திரசிங் தோனியின் ரசிகர்கள்  கொடுத்த அழுத்தம் காரணமாக ரிஷப் பந்த் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேற பலரால் பொறுப்பில்லாமல் விக்கெட்டை பறி கொடுக்கிறார் என விமர்சிக்கப்பட்டார்.

மேலும் மனம் போன போக்கில் விளையாடும் ரிஷப் பந்திற்கு இந்த விமர்சனங்கள் இன்னும் அழுத்தத்தை கொடுத்தது. இருந்த போதிலும் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் கேப்டன் விராட் கோலி ஆகியோர் ரிஷப் பந்திற்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தனர். மற்றொரு புறம் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள்  பலரும் ரிஷப் பந்திற்கு அறிவுரை கூறினார்.

2017 -ம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான பன்னாட்டு T 20 போட்டியில் விளையாட இந்திய அணியில்  இடம்பிடித்த ரிஷப் பந்த்  சென்னை சேப்பாக்கம் அரங்கத்தில் பிப்ரவரி 1-ந் தேதி  2017 -ம் ஆண்டு  இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் அறிமுகமானார்.

மேலும் ஜூன் 2017 -ம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்  பிடித்தார். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி, 2018- ம்  நடைபெற்ற சுதந்திரக் கோப்பை தொடரில் T 20 போட்டிக்கான இந்திய அணியில் பிடித்தார். இதனைத்தொடர்ந்து, ஜூலை 2018 -ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யப்பட்டு  ஆகஸ்ட் 18 -ந் தேதி அறிமுகமானார். இந்த  அறிமுகப் போட்டியில் 6 கேட்சுகள் பிடித்த  இந்தியர் எனும் சாதனை படைத்தார். மேலும் இதே தொடரில் ரிஷப் பந்த் தனது முதல் சதம் பதிவு செய்து இங்கிலாந்தில் முதல் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர்  எனும் சாதனை படைத்தார்.

2018 -ம் ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற  ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான டெஸ்ட் தொடரில் பங்கேற்றார். அதில் ராஜ்கோட் நடைபெற்ற முதலாவது போட்டியில் 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அதேபோல ஹைதராபாத்தில்  நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து இரண்டு போட்டிகளிலும் 90 ரன்களுக்கு மேல் அடித்தும் சதத்தை தவறவிட்டார். ஆனால் மகேந்திரசிங் தோனி தன் முதல் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் 297 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிஷப் பண்ட் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் 346 ரன்கள் எடுத்து மகேந்திரசிங் தோனி சாதனையை முறியடித்தார்.

2018 -ம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற  ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான நான்கு  டெஸ்ட் தொடரில் பங்கேற்றார். அதில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் 11 கேட்சுகளைப் பிடித்து  ஒரே போட்டியில் அதிக கேட்சுகளைப் பிடித்த இந்திய வீரர் எனும் சாதனை படைத்தார். மேலும் சிட்னி நடைபெற்ற நான்காவது போட்டியில் முதல் இன்னிங்சில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 159 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன்மூலம் ஆஸ்திரேலியாவில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பந்த் படைத்தார். மேலும் வெளிநாட்டு மண்ணில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் டோனியை பின்னுக்குத்தள்ளி ரிஷப் பந்த் முதல் இடம் பிடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி கடந்த டிசம்பர் 26-ந் தேதி துவங்கிய 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விளையாடியது  முதல் டெஸ்ட் போட்டியில்  ரிஷப் பந்த், முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்காவின் 4 வீரர்களை கேட்ச் பிடித்து ஆட்டமிழக்க செய்தார்.  இதன்மூலம் ரிஷப் பந்த் டெஸ்ட் தொடரில் இதுவரை 93 கேட்ச், 8 ஸ்டம்பிங் என்று மொத்தம் 101 பேரை விக்கெட் கீப்பிங் மூலம் ஆட்டமிழக்கச் செய்து அதிவேகமாக 100 பேரை விக்கெட் கீப்பிங் மூலம் ஆட்டமிழக்கச் செய்துள்ள இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை ரிஷப் பந்த் பெற்றுள்ளார்.

மேலும் மகேந்திரசிங் தோனி, விருத்திமான் சஹா தங்களது 36-வது டெஸ்டில் இந்த இலக்கை எட்டிய நிலையில் 24 வயதான ரிஷப் பந்த், தனது 26 வது டெஸ்ட் போட்டியிலேயே “கீப்பிங்கில் 100 அவுட்” என்ற மைல்கல்லை வேகமாக எட்டிய இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை  படைத்து மேலுமொரு சாதனையை தனக்கு சொந்தமாக்கி கொண்டுள்ளார்.

கடந்த மார்ச் இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடி விளையாடியது. இந்திய அணி முதல் டெஸ்டில் வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்றது. தலில் பேட் செய்த இந்திய அணி 252 ரன்னுக்குள் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து களமிறங்கி இலங்கை அணி இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 102 ரன்னுக்குள் சுருண்டது.

இந்நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியுள்ள இந்திய அணி சற்றுமுன் வரை 199 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 342 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் மூன்று நாட்கள் ஆட்டம் மீதி இருக்கும் நிலையில், களமிறங்கிய  ரிஷப் பந்த், டெஸ்ட் போட்டியை ஒருநாள் ஆட்டம் போல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 28 பந்துகளில்அ ரை சதம் அடிக்க இந்திய அளவில் குறைந்த பந்துகளில் 1982-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான  கபில்தேவ் 30 பந்துகளில் அரை சதம் அடிந்திருந்த நிலையில் மிக வேகமாக அரைசதம் அடித்து  கபில்தேவ்வின் சாதனையை ரிஷப் பந்த் முறியடித்து மேலுமொரு சாதனையை நிகழ்த்தினார்.

இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற 5-வது டெஸ்ட் போட்டியில்  டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி இந்திய அணி வீரர்கள் களமிறங்கிய இந்திய அணி 98 ரன்னில் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து ரிஷப் பந்த்- ரவீந்தர் ஜடேஜா ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி சதம் அடிக்க 111 பந்துகளில் 20 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 146 ரன்னில் அவுட் ஆனார். இந்த அதிரடியாக சதம் மூலம் 2006-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 78 பந்தில் சதம் அடித்த வீரேந்திர சேவாக்  முதல் இடத்திலும், 1990-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 88 பந்தில் சதம் அடித்த முகம்மது அசாருதீன்  2-வது இடத்திலும் உள்ள நிலையில்  தற்போது ரிஷப் பந்த் 89- பந்தில் அதிவேகமாக சதம் அடித்து  3-வது இடத்தை ரிஷப் பந்த் பிடித்துள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் சதம், இங்கிலாந்துக்கு  எதிராக எட்ஜ்பாஸ்டன் சதம் என  இரண்டு சதம் அடித்து  24 வயதில் ரிஷப் பந்த் வெளிநாட்டு மண்ணில் இரண்டு சதம் அடித்தவர்கள் பட்டியலில் ரிஷப் பந்த் மட்டுமே இருக்கின்றார்.  இந்நிலையில், இந்த போட்டியில் மூலம் டெஸ்ட் போட்டிகளில் தனது 2000 ரன்களை பதிவு செய்த ரிஷப் பந்த் , இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 2000 ரன்களை கடந்த இளம் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் என்ற பெருமையை  பெற்றுள்ளார்.

இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 416 ரன்களும், இங்கிலாந்து அணி 284 ரன்களையும் எடுத்தது. முதல் இன்னிங்ஸீல் 132 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸில் ஆடிய இந்திய அணி 75 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழக்க அடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த், சேதேஷ்வர் புஜாரா ஜோடி சேர்ந்து விளையாடி  86 பந்துகளை சந்தித்த பண்ட் 8 பவுண்டரிகளுடன் 57 ரன்களை குவித்தார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற பெருமையை ரிஷப் பந்த் படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் கடந்த 1950-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர் க்லைட் வால்காட் 182 ரன்களை அடித்திருந்தார். மேலும்  இதற்கு முன் 1953-ம் ஆண்டு விஜய்  மஞ்சரேக்கர் கிங்ஸ்டனில் ஒரு டெஸ்ட் போட்டியில் 161 ரன்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. அதன்பின்னர் தோனி உட்பட எத்தனையோ சிறந்த விக்கெட் கீப்பர்கள் விளையாடியும், அவரின் சாதனையை முறியடிக்க முடியாமல் இருந்தது. மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ஃபரூக் இன்ஜினியர் கடந்த 1973ம் ஆண்டு 203 ரன்கள் அடித்து பெற்றிருந்தார். இன்று ரிஷப் பந்த், அதே ரன்களை அடித்து ஃபரூக்கின் சாதனையை சமன் செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமாக திகழும் ரிஷப் பந்த், T 20, டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக தனது அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் மற்றும்  முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆதரவுடன் கூடிய விளையாட்டு நுணுக்கங்கள் மட்டுமல்லாது  டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர்  ரிக்கி பாண்டிங் அனுபவம்கள், நுணுக்கங்கள் அறிவுரைகளால் நாளுக்கு நாள் செதுக்கப்பட்டு ரிஷப் பந்த் அபார ஆட்டத்தால் பல சாதனைகளை நிகழ்த்தி கொண்டுள்ளார். அதாவது ரிஷப் பந்த் இந்திய அணியில் நுழைந்த போது ஏற்பட்ட சோதனைகளை  இன்று சாதனைகளாக மாற்றிக் கொண்டுள்ளார்.

IND vs SA: சச்சின் டெண்டுல்கர் 25 ஆண்டுகள் சாதனையை நாளை ரிஷப் பண்ட் முறியடித்து… தொடரை சமன் செய்வர்..!

இந்தியக் கிரிக்கெட் உலகின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை 16 வயதில் தொடங்கினார். எத்தனையோ நிகழ்த்தியுள்ளார். அவரது ஒரு சில சாதனைகளை விராட் கோலி போன்ற வீரர்கள் முறியடித்து வருகின்றனர்.

ரிஷப் பந்த் தனது 16 வயதில் முதல் தர போட்டிகளில் அறிமுகமாகி 2016 -ம் ஆண்டிற்கான 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் துணை கேப்டானாக இருந்து 18 பந்துகளில் 50 ரன்கள் சாதனையைப் படைத்தார். மேலும் அதே நாளில் 100 ரன்கள் அடித்து இந்திய அணி அரையிறுதிக்கு அழைத்து சென்றார். ரஞ்சி கிரிக்கெட்டில் இளம் வயதில் முச்சதம், அதிவேக சதம் போன்ற சாதனைகளை படைத்த ரிஷப் பந்த் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாடுகளில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர்.

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஜூன் 9 – ந், தேதி டில்லி அமைந்துள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 211 ரன்கள் குவித்தும் தோல்வி, ஜூன் 12 – ந் தேதி கட்டாக்கிலுள்ள பாராபதி மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி 148 ரன்கள் எடுத்திருத்தத்தால் மீண்டும் ஒரு தோல்வி என 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் கட்டாயம் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது .

ஆகையால் ஜூன் 14 – ந், தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் ரிஷப் பந்த் மூன்றாவது முறையாக டாஸ் தோற்க இந்திய அணி மீண்டும் பேட்டிங் செய்ய வேண்டிய நிலையில் 179 ரன்கள் எடுக்க அதன்பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழக்க 48 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்ததுடன் ரிஷப் பந்த் தலைமையிலான இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்து போட்டியை 2-1 என்ற கணக்கில் உள்ளது.

இந்நிலையில் நாளை ராஜ்கோட் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற நான்காவது போட்டியில் கேப்டன் ரிஷப் பண்ட் ஒரு சிக்சர் அடித்து சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடிப்பது மட்டுமின்றி இந்திய, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி போட்டியை சமன் செய்யும் என்பதில் எந்த ஒரு ஐயமுமில்லை என ரசிகர்கள் அதிகம் ஆர்வத்துடன் உள்ளனர்.

அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் 100 சிக்சர் விளாசிய இளம் வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் படைத்திருந்தார். அவர் தனது 25-வது வயதில் படைத்திருந்த சாதனையை, 25 ஆண்டுகளாக யாராலும் தொட முடியாமல் உள்ளது. ஆனால், ரிஷப் பண்ட் 24 வயது 251 நாட்களே ஆன தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் 99 சிக்சர்களை விளாசி இருக்கிறார். கடந்த இரண்டு போட்டிகளில் கேப்டன்ஷி அழுத்தம் காரணமாக பேட்டிங்கில் அதிகம் கவனம் செலுத்த முடியவில்லை. ஆனால் நாளைய ஆட்டத்தில் அவர் ஒரு சிக்சர் அடித்தால் , சச்சினின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடிப்பார்.

ICC T 20 World Cup: பாகிஸ்தான் அணி வெற்றி பெற 152 ரன்கள் நிர்ணயித்தது இந்திய அணி

உலக கோப்பை திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று குரூப்-1 பிரிவில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்கா அணியையும் இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியையும் வீழ்த்தி இங்கிலாந்து அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.

இந்நிலையில் குரூப்-2 பிரிவில் இன்று மதியம் 3.30 மணிக்கு ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியில் இலங்கை-வங்கதேச அணிகள் மோதும் ஆட்டத்தில் வங்காளதேச அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியது. இந்நிலையில் குரூப்-2 பிரிவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில், பாபர் அசாம் தலைமையிலான பரம எதிரியான பாகிஸ்தானை துபாயில் எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி தலைவர் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் களமிறங்கினர். ஆனால் ஷாகின் ஷா அப்ரிடி வீசிய முதல் ஓவரின் 4-வது பந்தில் ரோகித் சர்மா ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து வெளியேற மீண்டும் ஷாகின் ஷா அப்ரிடி வீசிய இரண்டாவது முதல் பந்தில் லோகேஷ் ராகுல் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற இந்திய அணி 2.1 ஓவரில் 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாற விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தனர். ஆனால் ஹசன் அலியின் 5.4 ஓவரில் சூர்யகுமார் யாதவ் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்து களமிறங்கிய ரிஷப் பன்ட், விராட் கோலியுடன் ஜோடி சேர்த்தார். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை சரிவிலிருந்து மீட்டனர். ஷதாப் கானின் 12.2 ஓவரில் ரிஷப் பன்ட் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா, விராட் கோலியுடன் ஜோடி சேர்த்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 151 ரன்கள் எடுத்தது.

ICC T 20 World Cup : இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தி உலக கோப்பை திருவிழாவை வெற்றியுடன் தொடங்குமா…!?

உலக கோப்பை திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் சூப்பர்-12 சுற்றில் பங்கேற்றுள்ள 12 அணிகளில் குரூப்-1ல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம் மற்றும் குரூப்-2ல் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, ஸ்காட்லாந்து, நமிபியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்நிலையில் நேற்று குரூப்-1 பிரிவில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா அணி தென்ஆப்பிரிக்கா அணியையும் இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியையும் வீழ்த்தி இங்கிலாந்து அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.

இந்நிலையில் குரூப்-2 பிரிவில் இன்று மதியம் 3.30 மணிக்கு ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியில் இலங்கை-வங்கதேச அணிகள் மோதுகின்றன. மேலும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில், பாபர் அசாம் தலைமையிலான பரம எதிரியான பாகிஸ்தானை துபாயில் எதிர்கொள்கிறது. இந்தியா, பாகிஸ்தான் மோதல் என்றாலே வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் உணர்ச்சி பிழம்பாகி விடும் நிலையில், உலக கோப்பை என்பதால் அனல் பறக்கும்.

உலகக்கோப்பை வரலாற்றில் ஒருநாள் போட்டி உட்பட இந்திய அணியை, பாகிஸ்தான் அணி இதுவரை வீழ்த்தியதே இல்லை. தற்போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் தலைவர் விராட் கோலி, ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் போன்ற அதிரடி பேட்டிங் வரிசையில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாக்குர், வருண் சக்ரவர்த்தி போன்ற தரமான பந்து வீச்சாளர்களும் அணிவகுத்து நிற்கிறார்கள்.

மகேந்திரசிங் தோனி ஆலோசனையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒருங்கிணைந்து திறமையை வெளிப்படுத்தினால் 2-வது முறையாக ஐ.சி.சி. T 20 கோப்பையை வென்று எத்தனையோ சாதனைகளை படைத்த விராட் கோலியின் ஏக்கத்தை தணிக்கலாம்.

உலக கோப்பை போட்டிகளில் தொடர்ச்சியாக இந்தியாவிடம் உதை வாங்கி வரும் பாகிஸ்தான் இந்த முறை அந்த சோகத்துக்கு முடிவு கட்டும் வேட்கையுடன் வியூகங்களை தீட்டி வருகிறது. அணி தலைவர் பாபர் அசாம், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான், சோயிப் மாலிக், முகமது ஹபீஸ், பஹார் ஜமான் ஆகியோர் அந்த அணியின் பேட்டிங் வரிசை உள்ளனர். மேலும் ஹாரிஸ் ரவுப், ஷகீன் ஷா அப்ரிடி இருவரும் பந்து வீச்சில் மிரட்டக்கூடியவர்கள். மொத்தத்தில் இரு அணிகளும் சம பலத்துடன் உள்ளதால் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதை கணிப்பது கடினம்.

இந்தியா உத்தேச அணி: ரோகித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி (தலைவர்), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பன்ட், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா, வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாகூர், முகமது ஷமி.

பாகிஸ்தான் உத்தேச அணி: முகமது ரிஸ்வான், பாபர் அசாம் (தலைவர்), சோயிப் மாலிக், பஹார் ஜமான், முகமது ஹபீஸ், ஆசிப் அலி, ஹசன் அலி, இமாத் வாசிம், ஷதாப் கான், ஹாரிஸ் ரவுப், ஷாகின் ஷா அப்ரிடி.

ICC T 20 World Cup : இந்த படை வெல்லுமா…!? நாளைய சரித்திரம் சொல்லுமா…!?

2007-ம் ஆண்டு முதல் நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐசிசி T 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை கடைசியாக 2016-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி கோப்பையை வென்ற நிலையில் 2018- ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவிருந்த தொடரை ஐசிசி கைவிடுவதாக அறிவித்த நிலையில் 2020- ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த தொடர் கொரோனா காரணமாக ஒத்திவைதத்து மட்டுமின்றி 7-வது T 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில் இந்தியாவில் கொரோனா பரவலின் 3-வது அலை வரலாம் என்ற அச்சத்தால் T 20 உலக கோப்பை கிரிக்கெட் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு கடந்த ஜூன் மாதம் மாற்றி அறிவிக்கப்பட்டது.

இதன்படி 16 அணிகள் இடையிலான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா தொடங்குகிறது. இதில் ஓமனில் 6 லீக் ஆட்டங்கள் மட்டுமே நடத்தப்படும் நிலையில் மற்ற அனைத்து போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் அரங்கேறுகிறது. தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக சூப்பர்-12 சுற்றில் கால்பதிக்கும் நிலையில், தொடக்கத்தில் முதல் சுற்று போட்டிகள் நடைபெறுகின்றது.

முதல் சுற்றில் பங்கேற்கும் 8 அணிகளில் ‘ஏ’ பிரிவில் இலங்கை, நெதர்லாந்து, அயர்லாந்து, நமிபியா, ‘பி’ பிரிவில் வங்காளதேசம், ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, ஓமன் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதி, இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.

சூப்பர் 12 சுற்றில் ஏற்கனவே குரூப்-1-ல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா மற்றும் இரு முதல் சுற்று அணிகள், குரூப்-2-ல் இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இரண்டு முதல் சுற்று அணிகள் அங்கம் வகிக்கின்றன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதி முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு நுழையும்.

2007-ம் ஆண்டு மகேந்திரசிங் தோனி தலைமையில் உலக கோப்பைக்கு வென்ற இந்திய அணி இந்த முறை விராட் கோலி தலைமையில் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் , இஷான் கிஷன் போன்ற அதிரடி பேட்டிங் வரிசையில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாக்குர், வருண் சக்ரவர்த்தி போன்ற தரமான பந்து வீச்சாளர்களும் அணிவகுத்து நிற்கிறார்கள். மகேந்திரசிங் தோனி ஆலோசனையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒருங்கிணைந்து திறமையை வெளிப்படுத்தினால் 2-வது முறையாக ஐ.சி.சி. T 20 கோப்பையை வென்று எத்தனையோ சாதனைகளை படைத்த விராட் கோலியின் ஏக்கத்தை தணிக்கலாம்.

இந்திய இளம் அதிரடி வீரர் ரிஷாப் பண்டின் தலைமையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வெற்றிப்பயணம் தொடருமா…?

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது ரசிகர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் 14-வது ஐ.பி.எல். போட்டிகள் மும்பை, டில்லி, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி தொடங்கியது. வீரர்கள், கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு வளையத்திற்குள் தங்களை இணைத்து போட்டியில் பங்கேற்றனர். முதல் 29 ஆட்டங்கள் எந்தவித சலசலப்பும் இன்றி நடந்து முடிந்தது.

அதன் பிறகு திடீரென 4 அணிக்குள் கொரோனா ஊடுருவி சில வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதால் வேறு வழியின்றி மே 3-ந்தேதியுடன் ஐ.பி.எல். போட்டி நிறுத்தப்பட்டு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள ஆட்டங்களை நடத்த முடிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் அதை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றியது. லீக் சுற்று நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

புள்ளி பட்டியலில் டாப்-4 இடங்களை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று துபாயில் இன்றிரவு புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும் , சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லீக் சுற்றில் 14 ஆட்டங்களில் விளையாடி 9-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் சந்தித்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிடில் ஆர்டரில் சுரேஷ் ரெய்னாவுக்கு காயம் ஏற்பட்டதால் கடைசி 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் (533 ரன்கள் ) மற்றும் பாப் டு பிளிஸ்சிஸ் (546 ரன்கள் ) எடுத்து திருப்திகரமான தொடக்கம் தருகின்றனர்.

ஆனால் மிடில் வரிசையில் சுரேஷ் ரெய்னா, மொயீன் அலி, மகேந்திர சிங் தோனியின் பேட்டிங் பெரும்பாலும் சொதப்பிய விடுகிறது. இதே போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சிலும் அவ்வப்போது தான் நன்றாக செயல்படுகிறார்கள். ஏற்கனவே டெல்லியிடம் லீக்கில் தோற்று இருப்பதால் அதற்கு பதிலடி கொடுக்க இதைவிட கச்சிதமான சந்தர்ப்பம் அமையாது. இதில் வெற்றி பெற்றால் சென்னை அணி 9-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதிக்குமா ..?

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு தொடரில் எல்லா விதமான மைதானங்களிலும் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை (10 வெற்றி, 4 தோல்வியுடன் 20 புள்ளி) வெளிப்படுத்தியுள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ஷிகர் தவான் (544 ரன்), பிரித்வி ஷா (401 ரன்), ரிஷாப் பண்ட் (362 ரன்), ஸ்ரேயாஸ் அய்யர் (6 ஆட்டத்தில் 144 ரன்) பேட்டிங்கில் சூப்பர் பார்மில் உள்ளனர். அதேபோல பந்து வீச்சில் அவேஷ்கான் (22 விக்கெட்), அக்‌ஷர் பட்டேல் (15 விக்கெட்), அன்ரிச் நோர்டியா, ககிசோ ரபாடா, ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் வலு சேர்க்கிறார்கள்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடம் கடந்த ஆண்டும் இரண்டு லீக்கிலும் உதை வாங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் இரண்டு லீக்கிலும் உதை வாங்கியுள்ளது. கடந்த ஆண்டு முதல்முறையாக இறுதி ஆட்டத்திற்கு வந்து தோல்வி அடைந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, இந்த சீசனில் முதல்முறையாக கோப்பையை உச்சிமுகர்ந்து விட வேண்டும் என்பதில் கங்கணம் கட்டி நிற்கிறது. அவர்களது பயிற்சியாளர் ரிக்கிபாண்டிங்கின் திட்டமிட்ட வழிநடத்துதலும் இந்திய இளம் அதிரடி வீரர் ரிஷாப் பண்டின் தலைமையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வெற்றிப்பயணம் தொடருமா…?

ஐபிஎல்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 விக்கெட்டு வித்தியாசத்தில் அபார வெற்றி

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது ரசிகர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் 14-வது ஐ.பி.எல். போட்டிகள் மும்பை, டில்லி, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி தொடங்கியது. வீரர்கள், கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு வளையத்திற்குள் தங்களை இணைத்து போட்டியில் பங்கேற்றனர். முதல் 29 ஆட்டங்கள் எந்தவித சலசலப்பும் இன்றி நடந்து முடிந்தது.

அதன் பிறகு திடீரென 4 அணிக்குள் கொரோனா ஊடுருவி சில வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதால் வேறு வழியின்றி மே 3-ந்தேதியுடன் ஐ.பி.எல். போட்டி நிறுத்தப்பட்டு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள ஆட்டங்களை நடத்த முடிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் அதை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றியது. அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் செப்டம்பர் 19தேதி முதல் அக்டோபர் 15-ந்தேதி வரை எஞ்சிய 31 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது.

துபாயில் உள்ள மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதும் ஐபிஎல் தொடரின் 33-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் விருத்திமான் சாஹா களமிறங்கினர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அக்சர் பட்டேல் வீசிய முதல் ஓவரில் மூன்றாவது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் டேவிட் வார்னர் ஆட்டமிழந்து வெளியேறி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன், விருத்திமான் சாஹாவுடன் ஜோடி சேர்த்தார். இருவரும் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ககிசோ ரபாடா 4.6 ஓவரில் விருத்திமான் சாஹா 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய மணீஷ் பாண்டே , கேன் வில்லியம்சனுடன் ஜோடி சேர்த்தார். ஆனால் லலித் யாதவ் 9.5 ஓவரில் கேன் வில்லியம்சன் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய கேதர் ஜாதவ், மணீஷ் பாண்டேவுடன் ஜோடி சேர்த்தார். ஆனால் ககிசோ ரபாடா 10.1 ஓவரில் மணீஷ் பாண்டே 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்து களமிறங்கிய அப்துல் சமத், கேதர் ஜாதவுடன் ஜோடி சேர்த்தார். அன்ரிச் நார்ட்ஜே 12.6 ஓவரில் கேதர் ஜாதவ் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஜேசன் ஹோல்டர், அப்துல் சமத்வுடன் ஜோடி சேர்த்தார். அன்ரிச் நார்ட்ஜே 12.6 ஓவரில் கேதர் ஜாதவ் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஜேசன் ஹோல்டர், அப்துல் சமத்வுடன் ஜோடி சேர்த்தார். அக்சர் பட்டேல்15.1 ஓவரில் ஜேசன் ஹோல்டர் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஜேசன் ஹோல்டர், அப்துல் சமத்வுடன் ஜோடி சேர்த்தார்.

அக்சர் பட்டேல்15.1 ஓவரில் ஜேசன் ஹோல்டர் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ரஷித் கான், அப்துல் சமத்வுடன் ஜோடி சேர்த்தார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 90 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த தடுமாறி கொண்டிருந்த நிலையில் ரஷித் கான், அப்துல் சமத் அதிரடியாக ஆடிய டெல்லி பந்துவீச்சை நாளா புறமும் சிதறடித்தார். இறுதியில் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 134 ரன்கள் எடுத்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் அந்த அணியின் ககிசோ ரபாடா 3 விக்கெட்டுகள் அக்சர் பட்டேல், அன்ரிச் நார்ட்ஜே தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் பிருத்வி ஷா களமிறங்கினர். கலீல் அகமது 2.5 ஓவரில் பிருத்வி ஷா 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், ஷிகர் தவானுடன் ஜோடி சேர்த்தார். ரஷித் கான் 10.5 ஓவரில் ஷிகர் தவான் 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்த்தார். ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பந்துவீச்சை நாளா புறமும் சிதறடித்தார். இறுதியில் ஸ்ரேயாஸ் அய்யர் 47 ரன்களும், ரிஷப் பந்த் 35) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 17.5 ஒவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 139 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

நிர்வாகம் அதிரடி தகவல்: டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டனாக ரிஷாப் பண்ட் தொடருவார்

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் தொடங்கி நடந்து வந்த நிலையில் கொரோனா பாதிப்பால் போட்டிகள் திடீரென நிறுத்தப்பட்டது. மீதமுள்ள ஐ.பி.எல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நாளை மறுதினம் தொடங்கி அக்டோபர் 15-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் இந்தியாவில் ஐ.பி.எல். தொடங்குவதற்கு முன்பே தோள்பட்டை காயத்தில் சிக்கியதால் ஐ.பி.எல்.-ல் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக அதன் பிறகு காயத்துக்கு ஆபரேஷன் செய்து கொண்ட அவர் ஓய்வில் இருந்தார்.

அவருக்கு பதிலாக ஒருபுறம் சேவாக் மறுபுறம் கங்குலி இருவரின் அதிரடியை நினையூட்டும் வகையில் அதிரடி ஆட்டத்திற்கு சொந்தக்காரர் இளம் விக்கெட் வீரர் ரிஷாப் பண்ட் கேப்டன் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். அதன் விளைவு முதல் 8 ஆட்டங்களில் அந்த அணி 6-ல் வெற்றி, 2-ல் தோல்வி என்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் சென்றுள்ளது.

இதற்கிடையே, ஐ.பி.எல். தள்ளிவைக்கப்பட்டதால் கிடைத்த 4 மாத காலஅவகாசத்தில் ஸ்ரேயாஸ் அய்யரும் காயத்தில் இருந்து குணமடைந்து அணியுடன் இணைந்து விட்டார். அவர் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் டெல்லி அணியின் கேப்டன் யார்? என்பதில் குழப்பம் நிலவி வந்த நிலையில் ஐ.பி.எல். 2-ம் கட்ட சீசனிலும் ரிஷாப் பண்டே கேப்டனாக தொடருவார் என்று டெல்லி அணி நிர்வாகம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்து வெளியிடப்படுள்ளது.