india vs bangladesh: 147 ஆண்டுக்கால கிரிக்கெட் வரலாற்றில் எந்த அணியும் செய்ய முடியாத சாதனை..!

இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தகுதி பெற வேண்டும் என்றால் தற்போது நடைபெறும் 9 டெஸ்ட் போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றே ஆகவேண்டும். இதில் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி சொந்த மண்ணில் நடைபெறுகிறது. அடுத்த ஐந்து டெஸ்ட் போட்டிகள் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறுகிறது. இதனால் இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் வென்றால் இந்திய அணி பைனலுக்கு செல்ல முடியும்.

இந்த சூழலில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டரை நாள் மழையால் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதனால் எஞ்சி இருக்கும் நான்காவது நாள் மற்றும் ஐந்தாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி அதிரடியாக ஆடி பெரிய ஸ்கோரை குவித்து முயற்சி செய்தது.

நேற்றைய 4-வது நாள் ஆட்டம் தொடங்கப்பட்டது. 11 ரன்கள் எடுத்த நிலையில் முஷ்பிகுர் ரகீமும் 13 ரன்னில் லிட்டன் தாஸும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து வந்த சாஹிப் அல் ஹசன் 9 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மொமினுல் சதம் விளாசி அசத்தினார்.

அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற வங்கதேச அணி 74.2 ஓவரில் 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் பும்ரா 3 விக்கெட்டும் ஆகாஷ் தீப், அஸ்வின், சிராஜ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைதொடர்ந்து முதல் இன்னிஸ்ங்ஸ் தொடங்கிய இந்திய அணி டி20 கிரிக்கெட் அதிரடியாக விளையாட தொடங்கியது. இதன்விளைவாக ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் 3 ஓவர்களில் 50 ரன்களை அடித்து அசத்தியது. இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலே அதிவேகமாக அடிக்கப்பட்ட அரை சதம் ஆகும். மேலும் ரோகித் சர்மா 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஜெய்ஸ்வால் இணைத்த சுப்மன் கில் தொடர்ந்து அதிரடியாக விளையாட அதிவேகமாக 10.1 ஓவர்களில் 100 ரன்களை கடந்து அசத்தியது. இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு அணி அதிவேகமாக 100 ரன்கள் அடித்தது முதல் முறையாகும். ஜெய்ஸ்வால் அரை சதம் கடந்த 72 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சுப்மன் கிலுடன் இணைத்த ரிஷப் பந்த் தொடர்ந்து அதிரடியாக விளையாட சுப்மன் கில் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரிஷப் பந்துடன் இணைத்த விராட் கோலி தொடர்ந்து அதிரடியாக விளையாட 18.2 ஓவரில் 150 ரன்கள் என்ற மைல் கல்லை எட்டியது. இதன் மூலம் இந்திய அணி அதிவேகமாக 150 ரன்களை எட்டி சாதனை படைத்தது.

அதிஷ்ட வசமாக ரிஷப் பந்த் 9 ரன்களில் ஆட்டமிழக்க வெளியேற விராட் கோலியுடன் இணைத்த ராகுல் இவர்கள் பங்கிற்கு அதிரடியை காட்டினார். இதன்விளைவாக 24.2 ஓவர்கள் எல்லாம் இந்திய அணி 200 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி அதிவேகமாக 200 ரன்கள் அடித்தது இதுவே முதல் முறை என்ற இமாலய சாதனையை நடத்தி காட்டியது.

விராட் கோலி அதிரடியாக அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 35 பந்துகளில் 1 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 47 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். ராகுலுடன் இணைத்த ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து அதிரடியாக விளையாட 30.3 ஓவர்களில் இந்திய அணி 250 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 50, 100, 150 ,200 ,250 ஆகிய ரன்களை அதிவேகமாக எட்டிய முதல் அணி என்ற பெருமையை இந்தியா படைத்தது.

 

india vs bangladesh: கான்பூர் டெஸ்ட் இந்திய அணி சாதனை மேல் சாதனை ..! அதிவேகமாக 50, 100, 150, 200, 250 ரன்கள்..!

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதனை தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்காளதேசம் அணி மொமினுல் ஹக் 40 ரன்னும், முஷ்பிகுர் ரகீம் 6 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருக்க மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்பட. 35 ஓவர் மட்டுமே வீசிய நிலையில் வீச நிலையில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்து நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து முடிந்தது. 2-வது நாள் போட்டியும், நேற்றைய 3-வது நாள் ஆட்டமும் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

மழை இல்லாததால் இன்றைய 4-வது நாள் ஆட்டம் தொடங்கப்பட்டது. 11 ரன்கள் எடுத்த நிலையில் முஷ்பிகுர் ரகீமும் 13 ரன்னில் லிட்டன் தாஸும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து வந்த சாஹிப் அல் ஹசன் 9 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மொமினுல் சதம் விளாசி அசத்தினார்.

அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற வங்கதேச அணி 74.2 ஓவரில் 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் பும்ரா 3 விக்கெட்டும் ஆகாஷ் தீப், அஸ்வின், சிராஜ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைதொடர்ந்து முதல் இன்னிஸ்ங்ஸ் தொடங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட தொடங்கியது. இதன்விளைவாக ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் 3 ஓவர்களில் 50 ரன்களை கடக்க டெஸ்ட் தொடரில் புதிய சாதனை படைத்தனர். மேலும் ரோகித் சர்மா 23 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் இணைத்த சுப்மன் கில் தொடர்ந்து அதிரடியாக விளையாட அதிவேகமாக 10.1 ஓவர்களில் 100 ரன்களை கடக்க டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி மேலும் ஒரு புதிய சாதனை சாதனை படைத்துள்ளது. ஜெய்ஸ்வால் அரை சதம் கடந்த 72 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சுப்மன் கிலுடன் இணைத்த ரிஷப் பந்த் தொடர்ந்து அதிரடியாக விளையாட சுப்மன் கில் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரிஷப் பந்துடன் இணைத்த விராட் கோலி தொடர்ந்து அதிரடியாக விளையாட அதிவேகமாக 150 ரன்களை கடந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி மேலும் ஒரு புதிய சாதனை சாதனை படைத்துள்ளது.

ரிஷப் பந்த் 9 ரன்களில் ஆட்டமிழக்க விராட் கோலியுடன் இணைத்த ராகுல் இருவரும் அதிரடியாக விளையாடினர். இதன்விளைவாக இந்திய அணி 200 ரன்களை கடக்க மேலும் ஒரு புதிய சாதனை படைத்துள்ளது.

விராட் கோலி அதிரடியாக அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 35 பந்துகளில் 1 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 47 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். ராகுலுடன் இணைத்த ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து அதிரடியாக விளையாட அதிவேகமாக 250 ரன்களை கடந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி மேலும் ஒரு புதிய சாதனை சாதனை படைத்துள்ளது. இந்திய அணி 34.4 ஓவர்களில் 285 ரன்களுக்கு 9 விக்கெட் இழக்க 52 ரன்கள் முன்னிலையில் டிக்ளர் செய்து.