பிரபல நடிகைகளுக்கு தினமும் போதை பொருள் விற்பனை செய்த துணை நடிகை மீனா..!

பப்புகளில் அறிமுகமான ஆண் நண்பர் உதவியுடன் போதை பொருட்களை பெற்று பிரபல நடிகைகளுக்கு வாட்ஸ் அப்பில் விற்பனை செய்து வந்ததாக துணை நடிகை மீனா காவல்துறையில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். மீனாவின் பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில், வாட்ஸ் மூலம் ஆர்டர் செய்து மெத்தம்பெட்டமைன் போதை பொருள் பெற்ற நடிகைகள் யார் யார் என்பது குறித்த பட்டியலை தனிப்படையினர் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை பெருநகர காவல் எல்லையில் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் காவல் ஆணையர் அருண் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி போதை பொருட்களை விற்பனை மற்றும் கடத்தும் நபர்களை கைது செய்யும் வகையில் உதவி காவல் ஆணையர் ஒருவர் தலைமையில் போதைப்பொருள் நுண்ணறிவு தடுப்பு பிரிவு ஒன்று புதிதாக பெருநகர காவல்துறையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவினர் போதை பொருட்களை விற்பனை மற்றும் கடத்தும் நபர்கள் மீது மட்டுமே கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் இளம்பெண் ஒருவர் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் பப்புகளில் போதை பொருள் விற்பனை செய்வதாக போதை பொருள் நுண்ணறிவு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தனிப்படையினர் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு போதை பொருள் வேண்டும் என்று ஆர்டர் செய்தனர். அந்த பெண் கூறிய ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ 7-வது கேட் அருகே கண்காணிப்பு பணியில் தனிப்படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பெண் வந்ததும், பெண் காவலர்கள் உதவியுடன் போதை பொருள் வாங்குவது போல் நடித்து அவரை மடக்கி பிடித்தனர்.

அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அதில், 5 கிராம் மெத்தம்பெட்டமைன் என்ற போதை பொருள் இருந்தது தெரியவந்தது. உடனே தனிப்படையினர் இளம்பெண்ணை பிடித்து அண்ணாசாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் இருந்து செல்போன் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். பின்னர் இளம்பெண்ணிடம் காவல்துறை விசாரணை நடத்தினர். அதில், கோவிலம்பாக்கம் வெள்ளக்கோயில் கண்ணதாசன் தெருவை சேர்ந்த மீனா என்றும் சின்னத்திரை துணை நடிகையான இவர், திரைப்படம் ஒன்றிலும் நடித்துள்ளதும் தெரியவந்தது. உடனே துணை நடிகை மீனாவை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை காவல்துறை ஆய்வு செய்த போது, அதில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். இந்த விசாரணை குறித்து காவல்துறை தரப்பில் கூறும்போது, சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் மீனா, சினிமா துறை சார்ந்தவர்களிடம் பழகி வந்துள்ளார். அதன்படி மீனாவுக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு ‘டெடி’ என்ற படத்தில் சிறு வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தனக்கு தெரிந்த துணை இயக்குநர்கள் மூலம் சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு தேடினார். இதற்காக நடிகர் மற்றும் நடிகைகள் கலந்து கொள்ளும் நட்சத்திர ஓட்டல் பார்ட்டி, பப்புகளில் மீனா கலந்து கொண்டுள்ளார்.

அதன் பிறகு சின்னத்திரையில் சிறு சிறு வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனால் அடிக்கடி இரவு நேரம் பப்புகளுக்கு மீனா சென்று வந்து போது, தாமஸ் என்பவரின் நட்பு கிடைத்தது. அவருடன் சேர்ந்து மெத்தம்பெட்டமைன் மற்றும் உயர் ரக கஞ்சாவை மீனா பயன்படுத்தி போதைக்கு அடிமையானார். மேலும், சினிமா மற்றும் சின்னத்திரையில் மீனாவுக்கு பிரபல நடிகைகளுடன் நல்ல நட்பு இருந்தது.

பொதுமக்களிடம் நல்ல வரவேற்புள்ள சீரியல் எபிசோடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் நட்சத்திர ஓட்டல்களில் சம்பந்தப்பட்ட சீரியல் நடிகைகள் மற்றும் நடிகர்கள் கலந்து கொள்வார்கள். அப்படி கலந்து கொள்ளும் போது, முன்னணி நடிகைகள் சிலரிடம் மீனா, மெத்தம்பெட்டமைன் பற்றி தெரிவித்துள்ளார். அதன்பின் ஒவ்வொரு நடிகைகளும், அவர்களாகவே மீனாவை தொடர்பு கொண்டு, மெத்தம்பெட்டமைன் வாங்கி பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்த வகையான போதை பொருள் எளிதில் கிடைக்காது என்பதால், துணை நடிகை மீனாவை முன்னணியில் உள்ள சீரியல் நடிகைகள் பலர், வாட்ஸ் அப் கால் மூலம் தொடர்பு கொண்டு மெத்தம்பெட்டமைன் பெற்றுள்ளனர். அதை உறுதி செய்யும் வகையில், துணை நடிகை மீனா பயன்படுத்திய செல்போனில் உள்ள வாட்ஸ் அப்பில் எந்தெந்த சீரியல் நடிகைகளுக்கு போதை பொருட்கள் விற்பனை செய்து வந்தார். அவர்களுக்கு எவ்வளவு போதை பொருள் வழங்கப்பட்டது என்ற விவரங்கள் உள்ளது.

மேலும், சில முன்னணி நடிகைகள் தினமும் மெத்தம்பெட்டமைன் பயன்படுத்தி வந்துள்ளனர். அவர்களுக்கு என தனியாக துணை நடிகை மீனா வாட்ஸ் அப் குழு ஒன்று அமைத்து அதன் மூலம் போதை பொருள் விற்றுள்ளார். அந்த வகையில் சின்னத்திரை நடிகைகள் மத்தியில் அமோகமாக போதை பொருள் விற்பனை செய்ததாகவும், பணத்திற்கு ஆசைப்பட்டு வெளியாட்களுக்கும் மெத்தம்பெட்டமைன் விற்பனை செய்து வந்த போது காவல்துறை பிடியில் சிக்கி கொண்டதாகவும் கைதான துணை நடிகை மீனா வாக்குமூலம் கொடுத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதேநேரம், துணை நடிகை மீனா பயன்படுத்திய செல்போனில் உள்ள வாட்ஸ் அப் மூலம் மெத்தம்பெட்டமைன் போதை பொருட்கள் வாங்கிய முன்னணி நடிகைகள் யார் யார் என்பது குறித்து பட்டியல் எடுத்து போலீசார் ரகசிய விசாரணையை தொடங்கி உள்ளனர். அவருக்கு மொத்தமாக மெத்தம்பெட்டமைன் வாங்கி கொடுக்கும் ஆண் நண்பர் தாமஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணை முடிவில் மெத்தம்பெட்டமைன் விற்பனை செய்த கும்பலை கூண்டோடு பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதை பொருளை துணை நடிகை மீனாவிடம் பெற்று பயன்படுத்தி வந்த பிரபல நடிகைகள் குறித்து விபரங்களும் விரையில் வெளியே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கண்மூடித்தனமாக தந்தை வழியில் செயல்பட்டு தந்தையை போலவே கம்பி எண்ணும் பெண்..!

மண்ணாசை, பெண்ணாசையினால் ஏற்படும் அழிவைக் காட்டிலும், பொன்னாலும், பொருளாலும் ஏற்படும் அழிவு ஒட்டு மொத்த சந்ததியையே சரித்து விடும் என்பதை மறந்து பொன்னையும் பொருளையும் மனிதன் தேடி அழைக்கின்றான். பணம் சம்மதிக்க எண்ணற்ற வழிகள் பல இருந்தும் நியாயம், நேர்மைகளை மறந்து பணம் மட்டுமே குறிக்கோளாக கொண்ட பலர் அதர்ம வழிகளில் பணம் சம்பாதிக்கின்றனர். அதனுடைய விளைவுகள் பற்றி அவன் ஒருபோதும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

தன்னுடைய முன்னோர் எப்படி கண்மூடித்தனமாக பொருள் ஒன்றே குறிக்கோளாக கொண்டு அலைந்து திரிந்து பொருள் ஈட்டினார்களோ அதோ வழியில் அவர்களுடைய சந்ததியினரும் தொடர்ந்து பொருள் ஈட்டுகின்றனர் என்பதே இன்றைய காலக் கொடுமையாக உள்ளது. அப்படி ஒரு சம்பவம் தான் இன்று தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. கண்மூடித்தனமாக தந்தை வழியில் செயல்பட்டு தந்தையை போலவே கம்பி எண்ணும் பெண்.

தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து நாளுக்கு நாள் போதை பழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் காவல்துறை அதிரடி சோதனையில் போதைபொருள் கைப்பற்றப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை பெருநகர காவல் எல்லையில் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் காவல் ஆணையர் அருண் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி போதை பொருட்களை விற்பனை மற்றும் கடத்தும் நபர்களை கைது செய்யும் வகையில் உதவி காவல் ஆணையர் ஒருவர் தலைமையில் போதைப்பொருள் நுண்ணறிவு தடுப்பு பிரிவு ஒன்று புதிதாக பெருநகர காவல்துறையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவினர் போதை பொருட்களை விற்பனை மற்றும் கடத்தும் நபர்கள் மீது மட்டுமே கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்தவகையில், உயர் நீதிமன்றம் அருகே பிரகாசம் சாலையில், இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேரை சுற்றி வளைத்தனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 6 பேரில், 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். மற்ற நான்கு பேரும் காவல்துறையினரிடம் சிக்கினார். வாகனத்தில் சோதனை செய்தபோது 2 கிராம் மெத்தப்பட்டமைன் என்னும் போதை பொருள் வைத்திருந்தது தெரிந்தது. இது தொடர்பாக எஸ்பிளனேடு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் புழல் பகுதியை சேர்ந்த பிரவீன், உணவகத்தில் வேலை பார்த்து வந்த கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த தினேஷ், அலுவலகத்தில் உதவியாளரான பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த சிறுவன், 12-ம் வகுப்பு படித்து வரும் தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த சிறுவன் எனத் தெரிந்தது. அவர்களிடம் மெத்தம்பட்டமைன் எப்படி கிடைத்தது? எங்கு வாங்கினீர்கள்? என்று கேட்டபோது மணலி பகுதியைச் சேர்ந்த மௌஷியா என்ற பெண்ணிடம் வாங்கியதாக தெரிவித்தனர்.

இதையடுத்து காவல்துறை அந்த பெண்ணின் வீட்டை சோதனை செய்தபோது 5 கிராம் மெத்தப்பட்டமைன் சிக்கியது. அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் மதிப்புள்ள மொத்தம் 7 கிராம் மெத்தப்பட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட பெண் மெத்தம்பெட்டமைன் போதை பொருளை மொத்தமாக வாங்கி இளைஞர்கள் சிறுவர்களை வைத்து கல்லூரி மாணவர்களுக்கும் மதுபான விடுதி, பப்புகளுக்கும் சப்ளை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே மௌஷியாவின் தந்தை அக்பர் அலி போதைப் பொருள் கடத்தலில் சிக்கி 12 வருட சிறை தண்டனை பெற்று கடந்த மூன்று வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில், மௌஷியா தந்தையின் அதே நெட்வொர்க்கை பயன்படுத்தி பல போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது காவல் துறை கைது செய்துள்ளது.

தந்தை சிறையில் உள்ள நிலையில் தந்தையின் நெட்வொர்க்கை பயன்படுத்தி போதைபொருள் கடத்திய பெண் கைது..!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து நாளுக்கு நாள் போதை பழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் காவல்துறை அதிரடி சோதனையில் போதைபொருள் கைப்பற்றப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை பெருநகர காவல் எல்லையில் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் காவல் ஆணையர் அருண் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி போதை பொருட்களை விற்பனை மற்றும் கடத்தும் நபர்களை கைது செய்யும் வகையில் உதவி காவல் ஆணையர் ஒருவர் தலைமையில் போதைப்பொருள் நுண்ணறிவு தடுப்பு பிரிவு ஒன்று புதிதாக பெருநகர காவல்துறையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவினர் போதை பொருட்களை விற்பனை மற்றும் கடத்தும் நபர்கள் மீது மட்டுமே கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்தவகையில், நேற்று இரவு சென்னை உயர் நீதிமன்றம் அருகே பிரகாசம் சாலையில், இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேரை சுற்றி வளைத்தனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 6 பேரில், 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். மற்ற நான்கு பேரும் காவல்துறையினரிடம் சிக்கினார். வாகனத்தில் சோதனை செய்தபோது 2 கிராம் மெத்தப்பட்டமைன் என்னும் போதை பொருள் வைத்திருந்தது தெரிந்தது. இது தொடர்பாக எஸ்பிளனேடு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் புழல் பகுதியை சேர்ந்த பிரவீன், உணவகத்தில் வேலை பார்த்து வந்த கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த தினேஷ், அலுவலகத்தில் உதவியாளரான பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த சிறுவன், 12-ம் வகுப்பு படித்து வரும் தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த சிறுவன் எனத் தெரிந்தது. அவர்களிடம் மெத்தம்பட்டமைன் எப்படி கிடைத்தது? எங்கு வாங்கினீர்கள்? என்று கேட்டபோது மணலி பகுதியைச் சேர்ந்த மௌஷியா என்ற பெண்ணிடம் வாங்கியதாக தெரிவித்தனர்.

இதையடுத்து காவல்துறை அந்த பெண்ணின் வீட்டை சோதனை செய்தபோது 5 கிராம் மெத்தப்பட்டமைன் சிக்கியது. அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் மதிப்புள்ள மொத்தம் 7 கிராம் மெத்தப்பட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட பெண் மெத்தம்பெட்டமைன் போதை பொருளை மொத்தமாக வாங்கி இளைஞர்கள் சிறுவர்களை வைத்து கல்லூரி மாணவர்களுக்கும் மதுபான விடுதி, பப்புகளுக்கும் சப்ளை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே மௌஷியாவின் தந்தை அக்பர் அலி போதைப் பொருள் கடத்தலில் சிக்கி 12 வருட சிறை தண்டனை பெற்று கடந்த மூன்று வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில், மௌஷியா தந்தையின் அதே நெட்வொர்க்கை பயன்படுத்தி பல போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது காவல் துறை கைது செய்துள்ளது.

காவல் ஆணையர் அருன் அதிரடி: போதைபொருள் கடத்தல் கும்பல் தலைவி கைது..!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து நாளுக்கு நாள் போதை பழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் காவல்துறை அதிரடி சோதனையில் போதைபொருள் கைப்பற்றப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை பெருநகர காவல் எல்லையில் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் காவல் ஆணையர் அருண் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி போதை பொருட்களை விற்பனை மற்றும் கடத்தும் நபர்களை கைது செய்யும் வகையில் உதவி காவல் ஆணையர் ஒருவர் தலைமையில் போதைப்பொருள் நுண்ணறிவு தடுப்பு பிரிவு ஒன்று புதிதாக பெருநகர காவல்துறையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவினர் போதை பொருட்களை விற்பனை மற்றும் கடத்தும் நபர்கள் மீது மட்டுமே கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்தவகையில், நேற்று இரவு சென்னை உயர் நீதிமன்றம் அருகே பிரகாசம் சாலையில், இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேரை சுற்றி வளைத்தனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 6 பேரில், 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். மற்ற நான்கு பேரும் காவல்துறையினரிடம் சிக்கினார். வாகனத்தில் சோதனை செய்தபோது 2 கிராம் மெத்தப்பட்டமைன் என்னும் போதை பொருள் வைத்திருந்தது தெரிந்தது.

இது தொடர்பாக எஸ்பிளனேடு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் புழல் பகுதியை சேர்ந்த பிரவீன், உணவகத்தில் வேலை பார்த்து வந்த கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த தினேஷ், அலுவலகத்தில் உதவியாளரான பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த சிறுவன், 12-ம் வகுப்பு படித்து வரும் தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த சிறுவன் எனத் தெரிந்தது. அவர்களிடம் மெத்தம்பட்டமைன் எப்படி கிடைத்தது? எங்கு வாங்கினீர்கள்? என்று கேட்டபோது மணலி பகுதியைச் சேர்ந்த மவுபியா என்ற பெண்ணிடம் வாங்கியதாக தெரிவித்தனர்.

இதையடுத்து காவல்துறை அந்த பெண்ணின் வீட்டை சோதனை செய்தபோது 5 கிராம் மெத்தப்பட்டமைன் சிக்கியது. அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் மதிப்புள்ள மொத்தம் 7 கிராம் மெத்தப்பட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட பெண் மவுபியா மெத்தம்பெட்டமைன் போதை பொருளை மொத்தமாக வாங்கி இளைஞர்கள் சிறுவர்களை வைத்து கல்லூரி மாணவர்களுக்கும் மதுபான விடுதி, பப்புகளுக்கும் சப்ளை செய்து வந்தது தெரியவந்துள்ளது.