‘பிரிந்தால் இழப்பு’ எனும் கோஷம் ஹரியானாவை போல, மகாராஷ்டிராவில் செல்லாது..!

‘பிரிந்தால் இழப்பு’ எனும் கோஷம் ஹரியானாவை போல, மகாராஷ்டிராவில் செல்லாது என மகா யுதியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மகாராஷ்டிராவை ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், பாஜக ஆகிய கூட்டணி கட்சிகளான மஹாயுதி கூட்டணியின் பதவிக்காலம் நவம்பர் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது. இத்தனை தொடர்ந்து 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடத்தப்பட்டு வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது.

மஹாயுதி கூட்டணிக்கும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகளான மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் ஆட்சியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், ஆளும் மகா யுதி கூட்டணிக்கு ஆதரவாக, உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் தனது உரையில் ‘பட்டேங்கே தோ கட்டங்கே’ எனும் கோஷத்தை தவறாமல் எழுப்பி வருகிறார். இந்த கோஷம் உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தால், ஹரியானா பேரவை தேர்தலில் முதன்முறையாக எழுப்பப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடியும் தனது பிரச்சாரத்தில் யோகி ஆதித்யநாத்தின் கோஷத்தை அங்கீகரித்து பேசினார். ஹரியானாவில் இந்துக்களின் பல்வேறு பிரிவுகளை ஒருங்கிணைக்கும் இக்கோஷம், பாஜக வெற்றிக்கு அடித்தளமிட்டதாக கருதப்படுகிறது. இது தற்போது, அனைத்து தேர்தல் பிரச்சாரங்களிலும் பாஜகவின் அதிகாரபூர்வக் கோஷம் என்றானது. இதை மகாராஷ்டிர தேர்தல் பிரச்சாரத்திலும் தொடரும் உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு, ஆளும் மகா யுதி கூட்டணியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

எதிர்ப்பவர்களில் ஒருவரான பாஜக MLA பங்கஜா முண்டே பேசுகையில், உத்திரபிரதேச மாநிலம் போன்ற மாநிலங்களில் எடுபடும் இந்த கோஷம் மகாராஷ்டிராவில் தேவையில்லை. ஏனெனில் இங்கு வட மாநிலங்கள் போன்ற அரசியல் சூழல் இல்லை. எனவே எங்கள் கட்சியை சேர்ந்தவர் எழுப்புகிறார் என்பதற்காக அதை நாங்களும் ஏற்க முடியாது என தெரிவித்தார்.

அமித் ஷா: மகா விகாஸ் அகாதி வெற்றி பெற்றால் மகாராஷ்டிரா மாநிலமே காங்கிரஸின் ATM ஆக மாறிவிடும்..!

மகா விகாஸ் அகாதி வெற்றி பெற்றால் மகாராஷ்டிரா மாநிலமே காங்கிரஸின் ATM ஆக மாறிவிடும் என அமித் ஷா விமர்சித்துள்ளார். மகாராஷ்டிராவை ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், பாஜக ஆகிய கூட்டணி கட்சிகளான மஹாயுதி கூட்டணியின் பதவிக்காலம் நவம்பர் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது. இத்தனை தொடர்ந்து 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடத்தப்பட்டு வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது.

மஹாயுதி கூட்டணிக்கும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகளான மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் ஆட்சியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், ஷிந்த்கேடா மற்றும் சாலிஸ்கான் சட்டப்பேரவைத் தொகுதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, “சில நாட்களுக்கு முன்பு உமேலா குழுவைச் சேர்ந்தவர்கள், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியின் தலைவரை சந்தித்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கேட்டனர். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றால், SC – ST – OBC-க்கான இடஒதுக்கீட்டை குறைக்க வேண்டும். ராகுல் காந்திக்கு நான் சொல்கிறேன், உங்கள் நான்கு தலைமுறைகளால் கூட SC – ST – OBC க்கான இடஒதுக்கீட்டை வெட்டி முஸ்லிம்களுக்கு கொடுக்க முடியாது.

மன்மோகன் சிங் ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் 11-வது இடத்தில் இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பொருளாதாரத்தை 5-வது இடத்துக்கு கொண்டு சென்றார். 2027-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதாரம் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

மகா விகாஸ் அகாதி சிறுபான்மையினரை தாஜா செய்வதையே விரும்புகிறது. அதிகாரத்துக்காக பால் தாக்கரேவின் கொள்கைகளை உத்தவ் தாக்கரே மறந்துவிட்டார். அவுரங்காபாத் நகருக்கு சம்பாஜி நகர் என்று பெயர் மாற்றுவதை எதிர்ப்பவர்களுடன், ராமர் கோயில் கட்டுவதை எதிர்ப்பவர்களுடன், முத்தலாக் தடை சட்டத்தை எதிர்ப்பவர்களுடன், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370 நீக்கத்தை எதிர்ப்பவர்களுடன் உத்தவ் தாக்கரே அமர்ந்திருக்கிறார். இந்துக்களை பயங்கரவாதிகள் என்று அழைப்பவர்களுடன் அவர் உள்ளார்.

பாஜக தலைமையிலான கூட்டணியான மகாயுதி என்றால் வளர்ச்சி என்று அர்த்தம். காங்கிரஸ் இடம் பெற்றுள்ள மகா விகாஸ் அகாதி என்றால் அழிவு என்று அர்த்தம். வளர்ச்சியை கொண்டு வருபவர்களை ஆதரிக்க வேண்டுமா அல்லது அழிவை கொண்டுவருபவர்களை ஆதரிக்க வேண்டுமா என்பதை வாக்காளர்கள் தீர்மானிக்க வேண்டும்.

வக்பு சட்டத்தால் நாட்டில் மக்கள் சிரமப்படுகின்றனர். சமீபத்தில், கர்நாடகாவில் உள்ள வக்பு வாரியம், கிராமங்களை வக்பு சொத்து என்று முடிவு செய்தது. 400 ஆண்டுகள் பழமையான கோயில்கள், விவசாயிகளின் நிலங்கள், வீடுகள் ஆகியவை வக்பு சொத்தாக மாறின. வக்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மசோதா கொண்டு வந்துள்ளோம். ஆனால் ராகுல் காந்தியும், சரத் பவாரும் மசோதாவை எதிர்க்கின்றனர். ராகுல் காந்திக்கு நான் சொல்கிறேன், நீங்கள் தடுத்தாலும் வக்பு சட்ட திருத்தத்தை பிரதமர் மோடி நிறைவேற்றுவார்.

மகாயுதி அரசாங்கம் அமையும்போது, மகாராஷ்டிராவின் அன்பு சகோதரிகளின் வங்கிக் கணக்கில் மாதம்தோறும் ரூ 2,100 டெபாசிட் செய்யப்படும். விவசாயிகளின் கணக்கில் ஆண்டுக்கு ரூ.12,000-க்கு பதிலாக ரூ.15,000 வரவு வைக்கப்படும். உங்கள் ஒரு வாக்கு, இந்தியாவின் எதிர்காலத்தை வலுப்படுத்தும்.

ஜார்க்கண்டில் பாஜக ஆட்சி அமைக்கப் போகிறது. மகாராஷ்டிராவில் மகாயுதி அரசு ஆட்சிக்கு வரப்போகிறது. காங்கிரஸ் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுவதே இதற்குக் காரணம். ஒருவேளை தவறுதலாக மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி அரசு ஆட்சிக்கு வந்தால், வளமான மகாராஷ்டிரா மாநிலமானது காங்கிரஸின் ATM ஆகிவிடும். மகாராஷ்டிர மாநிலத்தின் வளங்களைப் பயன்படுத்தி நிதியை எடுத்து டெல்லிக்கு அனுப்புவார்கள். மாறாக, மகாயுதி ஆட்சி அமைத்தால், மோடி நிர்வாகம் மகாராஷ்டிராவுக்கு பெரிய வளர்ச்சியை உறுதி செய்யும்” என அமித் ஷா தெரிவித்தார்.

அஜித் பவார்: சொந்த குடும்பத்தையே உடைக்கும் ஒருவரை இந்த சமூகம் எப்போதும் ஏற்றுக்கொள்ளாது..!

மகாராஷ்டிரா தேர்தல் நெருங்குவதை ஒட்டி துணை முதலமைச்சர் அஜித் பவாரின் தேசியவாத – பாஜக – ஷிண்டே சிவசேனா ஆகியோர் இடம் பெற்றுள்ள மஹாயுதி கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது.

மகாராஷ்டிராவில் முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகின்றது. மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் 2024 இல் முடிவடையும் நிலையில் அடுத்த சட்டமன்றத் தேர்தல் அக்டோபர் 2024 இல் அல்லது அதற்கு முன்னதாக மாநிலத்தின் அனைத்து 288 சட்டமன்ற உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்க எதிர்பார்க்கப்படுகிறது.

2024 -ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தலில் மகாயுதி கூட்டணிக்கும் மகா விகாஸ் அகாதிக்கும் இடையே பெரும் போட்டி நிலவி வருகின்றது. இந்நிலையில், சித்தப்பா சரத் பவாரின் தேசியவாத காங்கிரசை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் தங்கள் பக்கம் வந்த அவரது அண்ணன் மகன் அஜித் பவாரின் நடவடிக்கைகளை பாஜக மேலிடம் சந்தேகக் கண்களோடு கவனித்து வருகிறது.

குறிப்பாக மக்களவைத் தேர்தலில் சரத் பவார் அணி சார்பில் இந்திய கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டு வென்ற சகோதரி சுப்ரியா சூலேவை எதிர்த்து தனது மனைவியை நிறுத்தியிருக்கக்கூடாது என்று அஜித் பவார் கூறியது கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு வருவதை வெளிப்படையாக காட்டியது. மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிர பாஜக கூட்டணி பின் தங்கியதற்கு அஜித் பவார் அணி தான் காரணம் என்ற சலசலப்பும் கூட்டணி கட்சிகள் மத்தியில் இருந்து வருகிறது.

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்று அறிவித்த அஜித் பவார் மகனை நிறுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் குடும்பத்தை உடைத்தது பெரிய தவறு என்று அஜித் பவார் பொதுவெளியில் மீண்டும் வருத்தப்பட்டு உள்ளார். அஜித் பவார் அணியைச் சேர்ந்த அமைச்சர் பாபா ஆத்ராம் என்பவரது மகள் பாக்கியஸ்ரீ சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் அணிக்கு தாவ உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எனது மகளையும் மருமகனையும் ஆற்றில் தூக்கி வீசுங்கள் என்று பாபா ஆத்ரம் கடுமையாக பேசியிருந்தார்.

இந்நிலையில் கட்சிரோலி நகரில் நடந்த ஜனசம்மான் பேரணியில் கலந்துகொண்ட அஜித் பவார், ஒரு மகளை அவரது தந்தையை விட யாரும் அதிகமாக நேசிக்க மாட்டார்கள், உங்களை ஜில்லா பிரெசிடெண்டாக ஆக்கினார் உங்கள் தந்தை. ஆனால் நீங்கள் இப்போது அவருடன் சண்டை போடுவது சரிதானா? உங்கள் தந்தைக்கு நீங்கள் ஆதரவாக இருக்க வேண்டும். அவரை விட்டு செல்வது குடும்பத்தை உடைப்பது போன்றது தனது சொந்த குடும்பத்தையே உடைக்கும் ஒருவரை இந்த சமூகம் எப்போதும் ஏற்றுக்கொள்ளாது.

நானும் அதை அனுபவித்திருக்கிறேன், எனது தவறை நான் ஏற்றுகொண்டடேன் என்று தெரிவித்துள்ளார். சரத் பவாரை விட்டு வெளியேறியதைத் தவறு என்று அஜித் பாவர் கூறியுள்ளது பாஜக மேலிடத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபட்டு கொண்டுள்ளதாம்.

Uddhav Thackeray: ‘காங்கிரஸ்., என்சிபி அறிவிக்கும் மகா விகாஸ் அகாதி முதல்வர் வேட்பாளருக்கு ஆதரவு..!’

மகாராஷ்டிராவின் எதிர்க்கட்சிகளான மகா விகாஸ் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் கூட்டத்தில் சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே உரையாற்றினார். அப்போது, இந்தச் சட்டப்பேரவைத் தேர்தல் என்பது மகாராஷ்டிராவின் சுயமரியாதையை காப்பதற்கான போராட்டம் என்றார். நாட்டுக்கும், மாநிலத்துக்கும் நீங்கள் (மகாயுதி) என்ன செய்தீர்கள், நாங்கள் (மகா விகாஸ் அகாதி) என்ன செய்தோம் என்று விவாதிப்போம். அவர்கள் மாநகராட்சி தேர்தலை நடத்தவில்லை, வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை.

பாஜகவுடனான எங்களின் கூட்டணி அனுபவத்துக்கு பின்னர், கூட்டணியில் அதிக எம்எல்ஏக்களைக் கொண்டுள்ள கட்சிக்கு முதல்வர் பதவி என்ற கொள்கையை பின்பற்றக்கூடாது என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். கடந்த பல தேர்தலில் பாஜகவுடனான கூட்டணி அனுபவம், அதிக எம்எல்ஏக்களைப் பெற கூட்டணியில் உள்ள பிற கட்சி வேட்பாளர்களை வீழ்ச்சியடைய செய்கின்றனர் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். அதனால் அதிக எம்எல்ஏகள் கொண்ட கட்சிக்கு முதல்வர் பதவி என்ற கொள்கைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை.

காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் (சரத் பவார்) அவர்களின் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பர். நான் அவர்களுக்கு ஆதரவு அளிப்பேன். ஏனென்றால் நாங்கள் மகாராஷ்டிராவின் முன்னேற்றத்துக்காக உழைக்கிறோம். மேலும் நான் 50 கோகாக்கல் மற்றும் கத்தார் என்பதற்கு பதில் சொல்ல விரும்புகிறேன். மக்கள் விரும்புவது எங்களைத் தான்; உங்களை அல்ல என உத்தவ் தாக்கரே பேசினார்.

மகாராஷ்டிராவின் எதிர்க்கட்சிகளான மகா விகாஸ் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் கூட்டத்தில் சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே உரையாற்றினார். அப்போது, இந்தச் சட்டப்பேரவைத் தேர்தல் என்பது மகாராஷ்டிராவின் சுயமரியாதையை காப்பதற்கான போராட்டம் என்றார். நாட்டுக்கும், மாநிலத்துக்கும் நீங்கள் (மகாயுதி) என்ன செய்தீர்கள், நாங்கள் (மகா விகாஸ் அகாதி) என்ன செய்தோம் என்று விவாதிப்போம். அவர்கள் மாநகராட்சி தேர்தலை நடத்தவில்லை, வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை.

பாஜகவுடனான எங்களின் கூட்டணி அனுபவத்துக்கு பின்னர், கூட்டணியில் அதிக எம்எல்ஏக்களைக் கொண்டுள்ள கட்சிக்கு முதல்வர் பதவி என்ற கொள்கையை பின்பற்றக்கூடாது என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். கடந்த பல தேர்தலில் பாஜகவுடனான கூட்டணி அனுபவம், அதிக எம்எல்ஏக்களைப் பெற கூட்டணியில் உள்ள பிற கட்சி வேட்பாளர்களை வீழ்ச்சியடைய செய்கின்றனர் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். அதனால் அதிக எம்எல்ஏகள் கொண்ட கட்சிக்கு முதல்வர் பதவி என்ற கொள்கைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை.

மகா விகாஸ் அகாதியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை நாங்கள் முடிவு செய்வோம். நான் அதனை ஆதரிப்பேன். காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் (சரத் பவார்) அவர்களின் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பர். நான் அவர்களுக்கு ஆதரவு அளிப்பேன். ஏனென்றால் நாங்கள் மகாராஷ்டிராவின் முன்னேற்றத்துக்காக உழைக்கிறோம். மேலும் நான் 50 கோகாக்கல் மற்றும் கத்தார் என்பதற்கு பதில் சொல்ல விரும்புகிறேன். மக்கள் விரும்புவது எங்களைத் தான்; உங்களை அல்ல.

மேலும் அவர், நாட்டுக்கான மதசார்பற்ற சிவில் சட்டம் தேவை என்ற சுதந்திரதின உரையில் சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி பேச்சுக்கு பதில் அளித்த உத்தவ் தாக்கரே இந்த முறை இந்துத்துவாவை விட்டு விட்டார்களே என்று ஆச்சரியப்பட்டார். தொடர்ந்து வக்ஃபு வாரிய. சட்டத் திருத்தம் குறித்து கருத்து தெரிவித்த உத்தவ் தாக்கரே,”பாஜக பெரும்பான்மையுடன் இருக்கும் போது இதனைச் செய்யவில்லை என கேள்வி உத்தவ் தாக்கரே எழுப்பினார்.