Gaurav Bhatia: அரவிந்த் கேஜ்ரிவால் உடனடியாக பதவி விலக வேண்டும்..!

ஜாமீன் நிபந்தனைகளை சுட்டிக்காட்டி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உடனடியாக பதவி விலக கவுரவ் பாட்டியா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, “டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது. அந்த நிபந்தனைகள் மூலம் கேஜ்ரிவால் தான் யார் என்பதை அறிந்து கொள்வதற்காக அவருக்கு கண்ணாடி காட்டப்பட்டுள்ளது.

ஜெயில்வாலாவாக இருந்த முதலமைச்சர் கேஜ்ரிவால் இனி பெயில்வாலாவாக இருப்பார். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், டெல்லி மக்களின் குரலுக்கு மதிப்பளித்து அரவிந்த் கேஜ்ரிவால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஆனால், அவருக்கு துளி கூட தார்மிகம் இல்லாததால் அதை அவர் செய்ய மாட்டார். ஒரு அரசியல்வாதி ஒரு குற்றச்சாட்டு வந்தாலும் பதவி விலக வேண்டும். ஆனால், 6 மாதங்கள் சிறையில் இருந்தபோதும், அவர் ராஜினாமா செய்யவில்லை. இப்போது அவர் குற்றம் சாட்டப்பட்டவர்.

தன்னை கைது செய்தது சட்டவிரோதம் என்பது நீதிமன்றத்தில் கேஜ்ரிவாலின் வாதமாக இருந்தது. ஆனால், கேஜ்ரிவாலின் கைது அரசியல் சட்டத்திற்கு உட்பட்டது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், ஆம் ஆத்மி கட்சியின் பிரச்சாரத்தை உச்ச நீதிமன்றம் முறியடித்துள்ளது. வழக்கில் இருந்து கேஜ்ரிவால் விடுவிக்கப்படவில்லை. விசாரணை தொடரும் என்பதால் விடுதலை என்ற பேச்சுக்கே இடமில்லை.

உச்ச நீதிமன்றத்தின் நிபந்தனைகளின்படி, அரவிந்த் கேஜ்ரிவாலின் பாஸ்போர்ட் உச்ச நீதிமன்றத்திடம் இருக்கும். அவரால் வெளிநாடுகளுக்கு பயணிக்க முடியாது. வாரத்திற்கு இரண்டு முறை திங்கள் மற்றும் வியாழன் தோறும் விசாரணை அதிகாரி முன் அரவிந்த் கேஜ்ரிவால் ஆஜராக வேண்டும். சாட்சியிடம் பேச முடியாது.

அரவிந்த் கேஜ்ரிவால் ஏன் ராஜினாமா செய்யவில்லை என்பதற்கு ஆம் ஆத்மி கட்சி பதில் சொல்ல வேண்டும். ஊழல்வாதி அரவிந்த் கேஜ்ரிவால் என்றாவது ஒரு நாள் தலைகுனிவார். அவரிடமிருந்து ராஜினாமாவை மக்கள் வாங்குவார்கள்” என கவுரவ் பாட்டியா தெரிவித்துள்ளார்.

Gaurav Bhatia: இந்திய ஜனநாயகத்தில் ராகுல் காந்தி கரும்புள்ளி..!

‘இந்திய ஜனநாயகத்தில் ராகுல் காந்தி ஒரு கரும்புள்ளி’ என பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உரையாடிய போது, பாஜக, ஆர்எஸ்எஸ்சை விமர்சித்து பேசினார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெக்சாஸ் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்கவாழ் இந்தியர்களை ராகுல் சந்தித்து பேசினார்.

அப்போது, கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. எனினும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் உதவியுடன், நரேந்திர மோடி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். இந்தத் தேர்தலில், காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி 2024-ஆம் ஆண்டுக்கான தேர்தல் முடிவுகளைத் தங்களின் மாபெரும் வெற்றியாகக் காட்டி வருகிறது.

இந்தியப் பிரதமர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பின்பற்றவில்லை என்பதை தேர்தல்களின் போது கோடிக்கணக்கான மக்கள் தெளிவாகப் புரிந்துகொண்டதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் மொழி, மதம், பாரம்பரியம், சாதி வேறுபாடின்றி அனைவருக்கும் மரியாதை அளிக்க வேண்டும் என்று கூறுகிறது என ராகுல் காந்தி கூறினார். “நவீன இந்தியாவின் அடித்தளம் அரசியலமைப்புச் சட்டம். நமது பாரம்பரியம், மொழி, மாநிலம், வரலாறு போன்றவற்றை பாஜக தாக்குகிறது என்பதை மக்கள் தெளிவாக புரிந்துகொண்டதைத் தேர்தலின் போது பார்த்தேன்.” என ராகுல் காந்தி தெரிவித்தார்.

இது குறித்து டெல்லியில் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியாவிடம் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்கையில், ‘‘ராகுல் காந்தி முதிர்ச்சியற்ற, பகுதி நேர தலைவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மக்களவையில் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து அவரது தோளில் மக்கள் பெரும் சுமையை வைத்துள்ளனர்.

இந்திய ஜனநாயகத்தில் ராகுல் ஒரு கரும்புள்ளி என்பதை நான் வருத்தத்துடன் சொல்லிக் கொள்கிறேன். வெளிநாட்டிற்கு சென்றால் என்ன பேசுவது என்பது கூட அவருக்கு தெரியாது. சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, வெளிநாடுகளில் தனது கருத்துக்களால் இந்திய ஜனநாயகத்தை பலவீனப்படுத்த ராகுல் காந்தி முயற்சிக்கிறார். நான் கூறுவது பொய் என்றால், சீனாவுடனான ஒப்பந்தத்தை ராகுலும், கார்கேவும் பகிரங்கப்படுத்த தைரியம் இருக்கிறதா?’’ என கவுரவ் பாட்டியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Gaurav Bhatia: சீனாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் இந்திய ஜனநாயகத்தை பலவீனப்படுத்த ராகுல் காந்தி முயற்சி..!

‘சீனவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி இந்திய ஜனநாயகத்தை பலவீனப்படுத்த ராகுல் காந்தி முயற்சிக்கிறார் என பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உரையாடிய போது, பாஜக, ஆர்எஸ்எஸ்சை விமர்சித்து பேசினார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெக்சாஸ் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்கவாழ் இந்தியர்களை ராகுல் சந்தித்து பேசினார்.

அப்போது, கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. எனினும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் உதவியுடன், நரேந்திர மோடி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். இந்தத் தேர்தலில், காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி 2024-ஆம் ஆண்டுக்கான தேர்தல் முடிவுகளைத் தங்களின் மாபெரும் வெற்றியாகக் காட்டி வருகிறது.

இந்தியப் பிரதமர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பின்பற்றவில்லை என்பதை தேர்தல்களின் போது கோடிக்கணக்கான மக்கள் தெளிவாகப் புரிந்துகொண்டதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் மொழி, மதம், பாரம்பரியம், சாதி வேறுபாடின்றி அனைவருக்கும் மரியாதை அளிக்க வேண்டும் என்று கூறுகிறது என ராகுல் காந்தி கூறினார். “நவீன இந்தியாவின் அடித்தளம் அரசியலமைப்புச் சட்டம். நமது பாரம்பரியம், மொழி, மாநிலம், வரலாறு போன்றவற்றை பாஜக தாக்குகிறது என்பதை மக்கள் தெளிவாக புரிந்துகொண்டதைத் தேர்தலின் போது பார்த்தேன்.” என ராகுல் காந்தி தெரிவித்தார்.

இது குறித்து டெல்லியில் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியாவிடம் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்கையில், ‘‘ராகுல் காந்தி முதிர்ச்சியற்ற, பகுதி நேர தலைவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மக்களவையில் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து அவரது தோளில் மக்கள் பெரும் சுமையை வைத்துள்ளனர். இந்திய ஜனநாயகத்தில் ராகுல் ஒரு கரும்புள்ளி என்பதை நான் வருத்தத்துடன் சொல்லிக் கொள்கிறேன். வெளிநாட்டிற்கு சென்றால் என்ன பேசுவது என்பது கூட அவருக்கு தெரியாது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, வெளிநாடுகளில் தனது கருத்துக்களால் இந்திய ஜனநாயகத்தை பலவீனப்படுத்த ராகுல் காந்தி முயற்சிக்கிறார். நான் கூறுவது பொய் என்றால், சீனாவுடனான ஒப்பந்தத்தை ராகுலும், கார்கேவும் பகிரங்கப்படுத்த தைரியம் இருக்கிறதா?’’ என கவுரவ் பாட்டியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.