பொங்கல் பண்டிகை அன்று நடக்க இருந்த CA பவுண்டேசன் தேர்வு தேதி மாற்றம்

நாடு முழுவதும் பட்டய கணக்காளர் எனப்படும் CA பவுண்டேசன் தேர்வுகள் ஜனவரி 12, 14, 16 மற்றும் 18-ஆம் தேதிகளில் நடைபெறும் என ICAI அறிவித்துள்ளது. இதற்கு தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அமுமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியில் தேதியை மாற்றம் செய்ய வலியுறுத்து கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகை அன்று நடக்க இருந்த CA பவுண்டேசன் ஜனவரி 12, 16, 18, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன் பதிவு: சரியாகவும், விளக்கமாகவும் பதில் சொல்லியிருக்கீங்க சூர்யா..!

சரியாகவும், விளக்கமாகவும் பதில் சொல்லியிருக்கீங்க சூர்யா என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிவிட்டுள்ளார். என தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகத்தில் வரும் ஜனவரி 14-ஆம் தேதியும், இதனை தொடர்ந்து 15 -ஆம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும் 16-ஆம் தேதி திருவள்ளூர் தினம் ஆகியவை தொடர்ந்து கொண்டாடப்படுவது காலகாலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்நிலையில், நாடு முழுவதும் பட்டய கணக்காளர் எனப்படும் CA பவுண்டேசன் தேர்வுகள் ஜனவரி 12, 14, 16 மற்றும் 18-ஆம் தேதிகளில் நடைபெறும் என ICAI அறிவித்துள்ளது. இதற்கு தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அமுமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியில் கண்டனம் தெரிவித்து வருகின்றது. இதே வேளையில் பாஜக அரசு தமிழர் விரோத போக்கில் ஈடுபடுவதாக திமுகவினர் விமர்சித்து வரும் நிலையில், சிபிஎம் கட்சியின் மதுரை தொகுதி MP சு. வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில், “பொங்கல் திருநாளன்று CA பவுண்டேசன் தேர்வுகள். எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை. அதற்காக நாம் ஓயப்போவதுமில்லை. ஒன்றிய அரசே, தேர்வு தேதியை உடனே மாற்று. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு. பொங்கல் அன்று சிஏ பவுண்டேஷன் தேர்வுகள். தேதிகளை மாற்ற ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். சிஏ பவுண்டேஷன் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களின் பெற்றோர் பலர் என்னைத் தொடர்பு கொண்டனர்.

தமிழ்நாட்டின் மக்கள் திருவிழாவான பொங்கல் (14.11.2024) அன்றும், உழவர் திருநாள் (16.11.2024) அன்றும் முறையே Business laws மற்றும் Quantitative Aptitude தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறுவடைத் திருநாளான பொங்கல் திருவிழா என்பது தமிழ்நாட்டின் தனித்துவமிக்க பண்பாட்டுத் திருவிழா என்பதை கருத்தில் கொண்டு தேர்வர்களுக்கு சிரமங்கள் இன்றி தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்குமாறு ஒன்றிய நிறுவன விவகாரத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், ICAI தலைவர் சி.ஏ. ரஞ்சித் குமார் அகர்வாலுக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.

இதேபோல இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு SBI தேர்வு இறுதிச்சுற்றி பொங்கல் திருநாளில் அறிவிக்கப்பட்டது. சுமார் 6,000-க்கும் மேற்பட்டோர் அந்தத் தேர்வு எழுதினர். அப்போது நாங்கள் தீவிரமாக போராட்டம் நடத்தினோம். இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அப்போது அறிவித்தார். இப்போது, நிர்மலா சீதாராமன் வசமுள்ள துறையில் மீண்டும் அதேபோன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

துர்கா பூஜை அல்லது தீபாவளி பண்டிகையின்போது ஒன்றிய அரசு இதுபோல தேதி அறிவிக்க முடியுமா. பொங்கல் பண்டிகையில் CA தேர்வு அறிவிக்கப்பட்டதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். ” என சு. வெங்கடேசன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதே வேளையில் பாஜக அரசு தமிழர் விரோத போக்கில் ஈடுபடுவதாக திமுகவினர் விமர்சித்து வருகின்றனர். அதேநேரத்தில் பாஜகவினர் இதற்கு பதில் கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் பாஜக மாநிலச் செயலாளர் எஸ்ஜி சூர்யா, தனது எக்ஸ் பக்கத்தில், “இதே பொங்கல் தான் மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி, வட இந்தியாவில் லோஹ்ரி, உ.பியில் கிச்சடி, குஜராத் மற்றும் ராஜஸ்தானில் உத்தராயணி, ஹரியானா பஞ்சாப்பில் மாஹி என கொண்டாடப்படுகிறது. அப்படி இருக்கும்போது இது எப்படி தமிழருக்கு மட்டும் எதிரானதாகும். மேலும் CA தேர்வு தேதியை மத்திய அரசு முடிவு செய்வதில்லை. ICAI என்ற தன்னாட்சி பெற்ற அமைப்பு தான் நடத்துகிறது.” என்று கூறினார்.

இந்தப் பதிவை ரீ-போஸ்ட் செய்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “சரியாகவும், விளக்கமாகவும் பதில் சொல்லியிருக்கீங்க சூர்யா. எதில பார்த்தாலும், எப்ப பார்த்தாலும் தமிழ் விரோதி பிரச்சாரம் சிலருக்கு பழக்கமாகிவிட்டது.” என குறிப்பிட்டுள்ளார்.