உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்: சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது..!

உதயநிதி ஸ்டாலின் ஆவேசம் சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தொடர்ந்து மக்கள் விரோத போக்கினை கடைபிடித்து வருகின்றது. கறுப்புப் பணம் ஆரம்பித்த பாஜக அரசின் சர்வாதிகார போக்கு இன்று ‘ஒரே நாடு ஒரே மொழி’ என்ற கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பாஜக அரசு, பிற மொழிகளைத் தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.

இந்நிலையில், பொது நிறுவனமான LIC-இலும் இந்தி திணிப்பை பாஜக முன்னெடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது . அரசின் LIC இணையதளப் பக்கத்தின் முதன்மை மொழி, ஆங்கிலத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது முகப்பு பக்கத்தில் இந்தி மொழி மட்டுமே இருக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த செலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது என பாஜக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ஒட்டுமொத்த நாட்டு மக்களின் பங்களிப்போடு செயல்பட்டு வரும் LIC -யின் இணையதளம், முழுக்க, முழுக்க இந்தி மயமாக்கப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அந்த இணையதளத்தை ஆங்கிலத்தில் பார்ப்பதற்கான வசதியைக் கூட இந்தியில் உள்ள சுட்டியின் மூலம் தான் பெற முடியும் என்பது மத்திய அரசின் இந்தித் திணிப்பு மோகத்தையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

தமிழ், ஆங்கிலம் உட்பட அனைத்து மாநில மொழிகளிலும் LIC இணையதளத்தை மக்கள் பயன்படுத்தும் வகையில் உடனே மாற்றி அமைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தி உட்பட எந்த ஒன்றையும் வலுக்கட்டாயமாக திணிப்பதன் மூலம் வளர்த்துவிட முடியாது என்பதை ஒன்றிய அரசு இன்னும் புரிந்துகொள்ளவில்லை. சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது” என உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

H. ராஜா கேள்வி: செந்தில் பாலாஜி தம்பியை கைது செய்யாத காவல்துறை கஸ்தூரியை கைது செய்ய காரணம் என்ன..!?

செந்தில் பாலாஜி தம்பியை கைது செய்யாத காவல்துறை கஸ்தூரியை கைது செய்ய காரணம் என்ன..!? என பாஜக மூத்த தலைவர் H. ராஜா தெரிவித்தார். புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வருகை தந்த பாஜக தமிழ்நாடு பொறுப்பாளர் H. ராஜா செய்தியாளர்களின் கேள்விக்கு  பதிலளித்தார்.

அப்போது, “செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமாரை இதுவரை கைது பண்ண முடியாத காவல்துறை, பிரதமரை தரக்குறைவாக பேசிய தா.மோ. அன்பரசனை இதுவரை கைது செய்யாமல் மந்திரி சபையிலும் வைத்துள்ளனர். ஆனால், கஸ்தூரியை மட்டும் கைது செய்துள்ளனர். அந்த பெண்மணிக்கு தக்க பாதுகாப்பு வேண்டும். நீதித்துறை தான் அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். நீதிமன்ற காவலில் இருக்கும் போது தான் சவுக்கு சங்கர் பாதிக்கப்பட்டார்.

தமிழகத்தில் 10 ஆயிரத்து 500 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் போலிகளாகவும், 950 உதவிப் பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு பேருந்துகள் கூட தரமானதாக இல்லாததால் மக்கள் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளது. இவ்வாறாக, தமிழக அரசில் ஒரு துறைகூட திறமையானதாக இல்லை. தமிழக அரசிடம் உள்ள குறைகளை சுட்டிக்காட்டத்தான் எதிர்க்கட்சிகளால் முடியுமே தவிர, அவற்றை சரி செய்ய முடியாது. தமிழக அரசு மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர்.

வரும் தேர்தலில் பாஜகவோடு கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறி இருக்கிறார். எனில், நாங்கள் யாரும் அந்தக் கட்சியை கூட்டணிக்கு வருமாறு மனு செய்யவும் இல்லை. அவர்களுக்காக காத்திருக்கவும் இல்லை. அதே வேளையில், கூட்டணியைப் பற்றி அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும். அந்த முடிவை செயல்படுத்தும் இடத்தில்தான் மாநில பாஜக உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடம் ஆதரவு இல்லை என்பது வரும் 23-ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவு மூலம் தெரிந்துவிடும்.

தமிழகத்தில் கடந்த கால சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஒரே ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. அதிலும், வெற்றி பெற்ற மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, சட்டப்பேரவைக்குள் செல்ல பயந்து அதையும் ராஜினாமா செய்தார். அதே வேளையில், அதற்கு முன்பு திமுகதான் ஆட்சியில் இருந்தது. ஆகையால், வரும் 2026 தேர்தலில் 200 இடங்களில் வெல்வோம் என்று திமுக கனவு காண்கிறது என H .ராஜா தெரிவித்தார்.

பாஜக கூட்டணி அரசிலிருந்து தேசிய மக்கள் கட்சி விலகல்

மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த பாஜக தவறிவிட்டதாக குற்றம் சாட்டி தேசிய மக்கள் கட்சி பாஜக கூட்டணி அரசில் இருந்து விலகியுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி, குகி சமுதாயங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்து 237 பேர் உயிரிழந்தனர். 60,000-க்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்த நிலையில் 11,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், மணிப்பூரில் படிப்படியாக அமைதி திரும்பி வந்த நிலையில் கடந்த 11-ஆம் தேதி ஜிரிபாம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் குகி சமுதாயத்தை சேர்ந்த 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜிரிபாம் மாவட்டத்தில் குகி தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மைதேயி சமூகத்தை சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து மணிப்பூர் மாநிலம் முழுவதும் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. ஜிரிபாம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஊரடங்கு அமல் செய்யப்பட்டிருக்கிறது. மணிப்பூரில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பாஜக தவறிவிட்டதாக குற்றம் சாட்டி தேசிய மக்கள் கட்சி பாஜக கூட்டணி அரசில் இருந்து விலகியுள்ளது.

மணிப்பூர் சட்டப்பேரவையில் மொத்தம் 60 MLA -க்கள் உள்ள நிலையில் முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையில் 39 MLA -க்கள் பாஜக கூட்டணி அரசு ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில், மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த பாஜக தவறிவிட்டதாக குற்றம் சாட்டி தேசிய மக்கள் கட்சி பாஜக கூட்டணி அரசில் இருந்து நேற்று விலகியுள்ளது.

கல்பனா சோரன்: தோல்வி பயத்தில் பாஜக தலைவர்கள் உளறி வருகின்றனர்..!

கல்பனா சோரன்: தோல்வி பயத்தில் பாஜக தலைவர்கள் உளறி வருகின்றனர்..!

ஜார்கண்டில் மொத்தமுள்ள 81 சட்டசபை தொகுதிகலில் ஆட்சியை பிடிக்க 41 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்ற சூழ்நிலையில் ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு வருகிற நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி, இடதுசாரிகள் கூட்டணி கட்சிகளும், பாஜக கூட்டணியில் ஏஜேஎஸ்யூ, ஐஜத, எல்ஜேபி கட்சிகளும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இதில் முதல் கட்ட வாக்கு பதிவு கடந்த 13 ஆம் தேதி 43 தொகுதிகளுக்கு நிறைவடைந்த நிலையில் 2-ம் வாக்கு பதிவு மீதமுள்ள 38 தொகுதிகளுக்கு வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ளது.

ஆகையால் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் இன்றுடன் தேர்தல் பரப்புரைகள் நிறைவடைகின்றன. இரண்டாம் மற்றும் இறுதி கட்ட வாக்கு பதிவுகாக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதையொட்டி நேற்று முன்தினம் தியோகர் மாவட்டம் மதுப்பூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் கலந்துகொண்டு ஜேஎம்எம் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினார்.

அப்போது, ஜேஎம்எம் அரசு கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களைப் பார்த்து பாஜகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. ஜேஎம்எம் அரசின் சர்வஜன் பென்ஷன் திட்டம், மைன்யா சம்மான் திட்டம் ஆகியவை மக்களிடையே பிரபலமான திட்டங்களாக உள்ளன. மைன்யா சம்மான் திட்டம் மூலம் 55 லட்சம் பெண்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்தத் திட்டத்தில் மேலும் பெண்கள் சேர்க்கப்படவுள்ளனர். இந்தத் திட்டம் மூலம் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500 ரொக்கம் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

அதைப் போலவே சர்வஜன் பென்ஷன் திட்டத்தின் கீழ் 40 லட்சம் பொதுமக்கள் பயன் பெற்று வருகின்றனர். இதேபோல் புலோ ஜனோ திட்டம் மூலம் 9 லட்சம் சிறுமிகள் பயன் அடைந்துள்ளனர். மேலும், அரசு சார்பில் 25 லட்சம் குடும்பத்தாருக்கு அபுவா ஆவாஸ் திட்டம் மூலம் வீடு கட்டித் தரப்படவுள்ளது. மேலும் 20 லட்சம் குடும்பத்தாருக்கு பச்சை நிற ரேஷன் அட்டைகள் வழங்கப்படவுள்ளன. இந்தத் திட்டங்களைப் பார்த்துத்தான் பாஜக தலைவர்கள் தோல்வி பயத்தில் உளறி வருகின்றனர் என கல்பனா சோரன் தெரிவித்தார்.

அன்பழகன் குற்றச்சாட்டு: பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் சேர்ந்து புதுச்சேரியையே விற்றுவிடுவார்கள்..!

பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் சேர்ந்து புதுச்சேரி அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களை ஒவ்வொன்றாக விற்பனை செய்து வருகிறது என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளது.

புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, புதுச்சேரி மாநிலத்தில் பாஜக- என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்து அரசுக்கு சொந்தமான பல சொத்துக்கள் விஞ்ஞான ரீதியில், சட்ட விரோதமாக தனியாருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஏற்கெனவே விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலத் திட்டம் முழுமையாக கைவிடப்பட்ட நிலையில், அங்கு உள்ள இடங்கள் ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களுக்கும், பல வெளிமாநில தொழில் அதிபர்களுக்கு தாரை வார்த்து கொடுக்கப்படுகிறது.

அரசுக்கு சொந்தமான எந்த இடத்தை விற்பனை செய்வதாக இருந்தாலும் துணைநிலை ஆளுநரின் அனுமதியும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியும் பெற்று தான் விற்பனை செய்யப்பட வேண்டும். புதுச்சேரி அரசானது சர்வ சாதாரணமாக தனக்கு வேண்டியவர்களுக்கு இடத்தை தாரை வார்த்து வருகிறது.

இதையெல்லாம் துணைநிலை ஆளுநர் தடுத்து நிறுத்துவார் என்ற எண்ணம் எங்களுக்கு உண்டு. ஆனால் ஆளுநர் இதில் வெறும் பார்வையாளராகவே உள்ளார். அரசு செலுத்த வேண்டிய வரி பாக்கிக்கு அரசு இடத்தை ஏலத்துக்கு கொண்டு வருவது என்பது இந்த அரசு வெட்கப்பட்டு தலைகுனிய வேண்டும். இதன் மீது துணைநிலை ஆளுநர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏலத்தை தடுத்து நிறுத்த வேண்டும். ஏற்கெனவே அரசு நிலங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களை ஒவ்வொன்றாக விற்பனை செய்து வருகிறது. இதன் மூலம் புதுச்சேரியையே விற்பனை செய்யக்கூடிய அளவுக்கு புதுச்சேரி பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசின் செயல்பாடுகள் உள்ளது.

பல கூட்டுறவு நிறுவனங்கள் செயற்கையாக மூடப்பட்டுள்ளது. அவற்றுக்கு சொந்தமான இடங்களையும் இந்த அரசு விற்பனை செய்து வருவது என்பது வெட்கக்கேடானது. எனவே துணைநிலை ஆளுநர் அரசு மற்றும் அரசு சார்ந்த சொத்துக்களை காப்பாற்றுவதற்காக ஒரு உயர் மட்ட கமிட்டியை அமைக்க வேண்டும்.

அரசு சார்ந்த நிலங்கள் தனியாருக்கு குறுக்கு வழியில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அப்படி இருந்தால் அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். புதுச்சேரி அரசின் மக்கள் விரோத போக்கு, அரசு வரிப்பணத்தை தான்தோன்றித்தனமாக செலவு செய்வது போன்ற அரசு நடவடிக்கைகளை ஆளுநர் தடுத்து நிறுத்த வேண்டும். வெறும் பார்வையாளராக மட்டும் இருக்கக் கூடாது என அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளது.

H .ராஜா: அதிமுகவை பாஜகவோடு வைத்துக்கொள் என நாங்கள் யாரும் மனு போடவில்லை..!

அதிமுகவை பாஜகவோடு வைத்துக்கொள் என நாங்கள் யாரும் அந்தக் கட்சியை கூட்டணிக்கு வருமாறு மனு செய்யவும் இல்லை என பாஜக மூத்த தலைவர் H. ராஜா தெரிவித்தார்.. புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு H. ராஜா பதிலளித்தார். அப்போது, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையைப் பற்றி விமர்சிக்கும் அளவுக்கு மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதியிடம் அரசியல் ஞானம் இல்லை. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அரசு மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதைப் பற்றி மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பேச மறுக்கிறார்.

தமிழகத்தில் 10 ஆயிரத்து 500 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் போலிகளாகவும், 950 உதவிப் பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு பேருந்துகள் கூட தரமானதாக இல்லாததால் மக்கள் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளது. இவ்வாறாக, தமிழக அரசில் ஒரு துறைகூட திறமையானதாக இல்லை. தமிழக அரசிடம் உள்ள குறைகளை சுட்டிக்காட்டத்தான் எதிர்க்கட்சிகளால் முடியுமே தவிர, அவற்றை சரி செய்ய முடியாது. தமிழக அரசு மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர்.

வரும் தேர்தலில் பாஜகவோடு கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறி இருக்கிறார். எனில், நாங்கள் யாரும் அந்தக் கட்சியை கூட்டணிக்கு வருமாறு மனு செய்யவும் இல்லை. அவர்களுக்காக காத்திருக்கவும் இல்லை. அதே வேளையில், கூட்டணியைப் பற்றி அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும். அந்த முடிவை செயல்படுத்தும் இடத்தில்தான் மாநில பாஜக உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடம் ஆதரவு இல்லை என்பது வரும் 23-ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவு மூலம் தெரிந்துவிடும்.

தமிழகத்தில் கடந்த கால சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஒரே ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. அதிலும், வெற்றி பெற்ற மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, சட்டப்பேரவைக்குள் செல்ல பயந்து அதையும் ராஜினாமா செய்தார். அதே வேளையில், அதற்கு முன்பு திமுகதான் ஆட்சியில் இருந்தது. ஆகையால், வரும் 2026 தேர்தலில் 200 இடங்களில் வெல்வோம் என்று திமுக கனவு காண்கிறது என H .ராஜா தெரிவித்தார்.

லாட்டரி அதிபர் மார்ட்டின் மகனை அழைத்து வந்த பாஜக..!

பாஜக MLA -க்கள் நடத்திய விழாவில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் கலந்துகொண்டார். புதுச்சேரியில் காமராஜர் தொகுதியில் பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாஜக MLA -க்கள் ஜான்குமார், அவரது மகன் ரிச்சர்டு, கல்யாணசுந்தரம், பாஜக ஆதரவு சுயேட்சைகள் சிவசங்கர், அங்காளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் ஜான்குமார் மகனான ரிச்சர்ட் பேசுகையில், “எனது தந்தை ஜான்குமார் நெல்லித்தோப்பு தொகுதியை எனக்கு தந்துவிட்டு காமராஜர் தொகுதிக்கு வந்தார். இருவரும் MLA -க்களாக உள்ளோம். அவரை விட ஒருபடி மேலாக சார்லஸ் மார்டின் வந்துள்ளார். என் தந்தை செய்ததை விட பல மடங்கு செய்வார். மிக முக்கியப்பொறுப்புக்கு அவர் வரபோகிறார்” என ரிச்சர்ட் தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே: அதானியிடம் தாராவியை ஒப்படைக்காததால் எனது அரசு கவிழ்ந்தது..!

நான் முதலமைச்சராக இருந்தபோது அதானியை சந்தித்தேன்; தாராவியில் டெண்டர் கொடுப்பதற்கு அல்ல; அதானியிடம் தாராவியை ஒப்படைக்காததால் எனது அரசு கவிழ்க்கப்பட்டது என முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவை ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், பாஜக ஆகிய கூட்டணி கட்சிகளான மஹாயுதி கூட்டணியின் பதவிக்காலம் நவம்பர் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது. இத்தனை தொடர்ந்து 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடத்தப்பட்டு வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது.

மஹாயுதி கூட்டணிக்கும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகளான மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் ஆட்சியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இந்தியா டுடே பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ‘சமீபத்தில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மகாராஷ்டிராவில் சிவசேனா MLA -களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பான வழக்கில் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. MLA-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில் பேரவை தேர்தலே வந்துவிட்டது. டி.ஒய்.சந்திரசூட் அவர்கள் நீதியை வழங்குவதற்குப் பதிலாக ஒரு வர்ணனையாளராக மாறிவிட்டார். நீதிபதி என்பதற்கு பதிலாக அவர் சட்டத்துறை ஆசிரியராக இருந்திருந்தால், மிகவும் பிரபலமாக இருந்திருப்பார்.

பாஜக தலைமை மிகவும் தந்திரமானது; காங்கிரஸ் தலைமை மரியாதை அளிக்கிறது; ஒருமித்த கருத்துடன் செயல்படுகிறது. ஆட்சியில் இல்லாவிட்டாலும் ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, கார்கே ஆகியோர் மிகுந்த மரியாதையுடன் நடந்து கொள்கின்றனர். இன்றைய பாஜக ‘யூஸ் அண்ட் த்ரோ’ போல மாறிவிட்டது. மும்பை தாராவியை அதானியிடம் ஒப்படைக்கப்படும் விதத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது.

ஆங்கிலேயேர் காலத்தில் மும்பையை வரதட்சணையாக வழங்கப்பட்டதைப் போல், தற்போதும் மும்பையை யாரிடமும் ஒப்படைக்க முடியாது. மக்கள் தான் முடிவு செய்வார்கள்; மாநில அரசு அல்ல. நான் முதலமைச்சராக இருந்தபோது அதானியை சந்தித்தேன்; தாராவியில் டெண்டர் கொடுப்பதற்கு அல்ல; அதானியிடம் தாராவியை ஒப்படைக்காததால் எனது அரசு கவிழ்க்கப்பட்டது. நான் முதலமைச்சராக இருந்தபோது, யாரையும் வெட்டவில்லை. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்கள் தீப்பிடித்து எரிந்தன.

அவர்களிடம் பேசுவதற்கு உண்மையான பிரச்னைகள் இல்லை; எனவே அவர்கள் அப்படி பேசுகிறார்கள். மகாராஷ்டிரா தேர்தலில் பாகிஸ்தான் பிரச்னையை எழுப்புவது முற்றிலும் பொருத்தமற்றது. நான் முதலமைச்சராக வேண்டும் என்று கனவு காணவில்லை. மகாராஷ்டிராவை சுரண்டுபவர்களை தோற்கடிப்பதே தனது முன்னுரிமையாக உள்ளது. துணை முதலமைச்சரான தேவேந்திர பட்நாவிசை முதலமைச்சர் வேட்பாளாராக அமித் ஷா அறிவித்துள்ளார். ஆனால் ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் ஒப்புக்கொள்கிறார்களா? எனவே எங்களது கூட்டணி ஆட்சியமைக்கும்’ என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

H .ராஜா குற்றச்சாட்டு: தமிழக அரசில் ஒருதுறைகூட திறமையானதாக இல்லை..!

தமிழக அரசில் ஒரு துறைகூட திறமையானதாக இல்லை என பாஜக மூத்த தலைவர் H .ராஜா குற்றச்சாட்டி உள்ளார். புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு H .ராஜா பதிலளித்தார். அப்போது, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையைப் பற்றி விமர்சிக்கும் அளவுக்கு மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதியிடம் அரசியல் ஞானம் இல்லை. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அரசு மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதைப் பற்றி மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பேச மறுக்கிறார்.

தமிழகத்தில் 10 ஆயிரத்து 500 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் போலிகளாகவும், 950 உதவிப் பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு பேருந்துகள் கூட தரமானதாக இல்லாததால் மக்கள் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளது. இவ்வாறாக, தமிழக அரசில் ஒரு துறைகூட திறமையானதாக இல்லை. தமிழக அரசிடம் உள்ள குறைகளை சுட்டிக்காட்டத்தான் எதிர்க்கட்சிகளால் முடியுமே தவிர, அவற்றை சரி செய்ய முடியாது. தமிழக அரசு மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர்.

வரும் தேர்தலில் பாஜகவோடு கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறி இருக்கிறார். எனில், நாங்கள் யாரும் அந்தக் கட்சியை கூட்டணிக்கு வருமாறு மனு செய்யவும் இல்லை. அவர்களுக்காக காத்திருக்கவும் இல்லை. அதே வேளையில், கூட்டணியைப் பற்றி அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும். அந்த முடிவை செயல்படுத்தும் இடத்தில்தான் மாநில பாஜக உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடம் ஆதரவு இல்லை என்பது வரும் 23-ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவு மூலம் தெரிந்துவிடும்.

தமிழகத்தில் கடந்த கால சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஒரே ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. அதிலும், வெற்றி பெற்ற மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, சட்டப்பேரவைக்குள் செல்ல பயந்து அதையும் ராஜினாமா செய்தார். அதே வேளையில், அதற்கு முன்பு திமுகதான் ஆட்சியில் இருந்தது. ஆகையால், வரும் 2026 தேர்தலில் 200 இடங்களில் வெல்வோம் என்று திமுக கனவு காண்கிறது என H .ராஜா தெரிவித்தார்.

வானதி சீனிவாசன்: யாரு பாசிசம்..! யாரு கருத்து சுதந்திரம் என சிந்தித்து பாருங்கள்..!

யாரு பாசிசம், யாரு கருத்து சுதந்திரம், யாரு சட்டம் என்றெல்லாம் தெரியவரும். மீம்ஸ் எப்படி என்றாலும் போடலாம் என வானதி சீனிவாசன் தெரிவித்தார். கோயம்புத்தூரில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கோயம்புத்தூர் தெற்குத் தொகுதி பாஜக MLA வானதி சீனிவாசன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, வானதி சீனிவாசன் ஆவேசமாக பேட்டியளித்துக் கொண்டு இருந்த போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர், தனது செல்போனில் தவெக தலைவர் விஜயின் புகைப்படத்தை கேமரா முன்பு காட்டி உடனே மறைந்தார்.

இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து வானதி சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, நானும் இந்த வீடியோவை பார்த்தேன்.. நிறைய பேர் இந்த வீடியோவை இன்ஸ்டாவில் போட்டுருந்தாங்க.. இதுக்கு நான் என்ன சொல்ல முடியும்.. ரொம்ப டிரெண்ட் ஆக இன்ஸ்டா, எக்ஸ் தளத்தில் ஓடிக்கொண்டிருந்தது. நாங்க எந்த அளவுக்கு இதனை அனுமதிக்கிறோம் என்று பாருங்கள். கருத்து சுதந்திரத்தை பாஜக அனுமதிக்கிறது.

இன்னொருவர் வந்து புகைப்படத்தை பின்னாடி வந்து காட்டும் அளவிற்கு கருத்து சுதந்திரத்தை நாங்க அனுமதிக்கிறோம். ட்ரோல், மீம்ஸ், காமெடி என எந்த மெசேஜ் ஆக வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளலாம். இதே மாதிரி இன்னொரு கட்சியில், இந்த விஷயத்தை இந்த பக்கம் நின்று பண்ண முடியுமா?.. என்று பாருங்கள். அப்போ யாரு பாசிசம், யாரு கருத்து சுதந்திரம், யாரு சட்டம் என்றெல்லாம் தெரியவரும். மீம்ஸ் எப்படி என்றாலும் போடலாம் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.