பிரசாந்த் கிஷோர்: மோடியின் பேச்சைக் கேட்டு 2014-ல் வாக்களித்தோம் குஜராத் வளர்கிறது..! பீகார் மக்கள் நிலை..!?

பீகார் மாநிலத்தை சேர்ந்த அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், நேற்று முறைப்படி புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். பீகார் அரசியலில் அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில், கடந்த ஓராண்டிருக்கும் மேலாக மாநிலம் முழுவதும் சுமார் 3 ஆயிரம் கிலோமீட்டர் பாதயாத்திரையாக பயணம் மேற்கொண்டார். காந்தி பிறந்தநாளான நேற்று முறைப்படி அந்த கட்சிக்கு ஜன் சுராஜ் என்றபெயரில் புதிய அரசியல் கட்சி தொடங்கினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் தேவேந்திர பிரசாத் யாதவ், பிரபல அரசியல் தலைவர் பவன் வர்மா, முன்னாள் எம்பி மோனாசிர் ஹாசன் உள்ளிட்ட பல புகழ்பெற்ற பிரமுகர்கள் முன்னிலையில் பாட்னாவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் புதிய கட்சியின் பெயரை அறிவித்தார்.

இத்தனை தொடர்ந்து முன்னாள் வெளியுறவுத் துறை அதிகாரி மனோஜ் பார்தியை கட்சியின் செயல் தலைவராக நியமித்தார். புதிய கட்சியின் அமைப்புத் தேர்தல்கள் நடைபெறும் வரை, அதாவது மார்ச் மாதம் வரை மனோஜ் பார்தி அந்த பதவியில் இருப்பார் என்று கூறினார். இந்த விழாவில் பிரசாந்த் கிஷோர் பேசுகையில்,’ ஜன் சுராஜ் ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்கு ஒரு மணி நேரத்தில் ரத்து செய்யப்படும். ஆனால் மக்கள் டெபாசிட் செய்யும் சேமிப்பின் விகிதம் பீகாருக்கு கிடைக்கும்படி வங்கிகளை நிர்பந்திப்போம் ’ என தெரிவித்தார்.

மேலும் பிரசாந்த் கிஷோர் பேசுகையில்,’ என்னையும், உங்களையும் போன்றவர்களும் குஜராத்தின் வளர்ச்சிக்கு மோடி நிறைய செய்திருக்கிறார் என்ற எண்ணத்தில் அவரது பேச்சைக் கேட்டு 2014-ல் அவருக்கு வாக்களித்தோம். உண்மையாகவே குஜராத் முன்னேறி வருகிறது. ஒட்டுமொத்த நாட்டின் செல்வமும் திசை திருப்பப்பட்டதாகத் தெரிகிறது. குஜராத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் தொழிற்சாலைகள் அமைக்கப்படுகிறது. பீகாரில் இருந்து மக்கள் வேலை தேடி அந்த மாநிலத்திற்கு படையெடுக்கின்றனர். குஜராத்தின் வளர்ச்சிக்காக வாக்களித்த பீகார் மக்கள் எப்படி வளர்ச்சி பெற முடியும்?’ என பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பினார்.

யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவரால் 15 வயது சிறுவன் உயிரிழப்பு..!

யூடியூபை பார்த்து அறுவை சிகிச்சை செய்ததால் 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ண குமார் என்ற சிறுவன் பலமுறை வாந்தி எடுத்ததால் அவரது பெற்றோர் சரன் நகரில் உள்ள கணபதி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு அவருக்கு மருத்துவர் அஜித் குமார் புரி முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். பின்னர் சிறுவனுக்கு பித்தப்பையில் கல் உள்ளது. அதனால்தான் அவருக்கு வாந்தி போன்ற உடல் உபாதைகள் அவ்வப்போது ஏற்படுகிறது. எனவே, அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறி பெற்றோர் சம்மதம் இல்லாமலேயே யூடியூபை பார்த்து அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சிறிது நேரத்தில் அந்த சிறுவனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை அந்த யூடியூப் போலி மருத்துவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

அதிகாரியை கம்பத்தில் கட்டி வைத்த விவசாயிகள்…

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கொண்டாடிய நிலையில் நாடு பல்வேறு துறைகளில் பின்னுக்கு இருப்பதற்கு காரணம் அரசியல்வாதிகளுக்கு, அதிகாரிகளும் லஞ்சம், லாவண்யத்தில் ஊறி கிடைக்க அப்பாவி மக்கள் ஒரு வேளை சோற்றுக்கு செய்வதறியாது விழி பிதுங்கி வாழ்ந்து கொண்டுள்ளனர். இந்நிலையில். நாட்டின் பல்வேறு வட மாநிலங்களில் நிறைய அரசியல் மாற்றங்களுக்கும் வழிவகுத்த 3-வது வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் செய்த போராட்டம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில், விவசாயிகள் தங்களுக்கான உரிமைகளை இன்று துணிவுடன் கேட்டு வருகிறார்கள். பீகாரில் உள்ள மோதிஹரியின் நிதின் குமார் என்பவர் விவசாயத் துறையால் நியமிக்கப்பட்ட ஆலோசகர். இவர் உரத்தை பதுக்கி வைத்து கறுப்பு சந்தையில் வியாபாரம் செய்கிறாராம்.. இந்த விஷயம் கேள்விப்பட்ட விவசாயிகள், சம்பந்தப்பட்ட அதிகாரியை இழுத்து பிடித்து, அங்கிருந்த கம்பத்தில் கட்டி வைத்துவிட்டனர். இந்த வீடியோவும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கிக் கணக்கே இல்லாத கூலித் தொழிலாளி கணக்கில் ரூ.9.90 கோடி டெபாசிட்

இந்தியாவில் சாமானிய மக்களின் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுப் பணம் பரிமாற்றம் செய்வதற்கு பேர்போன மாநிலம் பிஹார். அப்படி பணம் பரிமாற்றம் செய்வதை கண்டுபிடிக்கப்படுவதும் வாடிக்கையாக நிகழும் ஒன்றாகும்.

அதன்வரிசையில் பிஹார் சபுவால் நகரம் அருகேயுள்ள சிசானி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி விபின் சவுகான் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் இணைவதற்காக, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் வாடிக்கையாளர் சேவை மையத்துக்குக் கடந்த சில நாட்களுக்கு முன் சென்று கணக்குத் தொடங்க விரும்பினார்.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் சேவை மைய அலுவலர், விபின் சவுகானின் ஆதார் எண்ணைப் பதிவு செய்து வங்கிக் கணக்கு தொடங்க முற்பட்டபோது, அவர் பெயரில் ஏற்கெனவே வங்கிக் கணக்கு இருப்பதாகவும் மேலும் அவருடைய வங்கிக் கணக்கில் ரூ.9.99 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருப்பது கண்டுஅதிர்ச்சி அடைந்தார்.

மேலும் சவுகான் பெயரில் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி வங்கிக் கணக்கு தொடங்கி, 2017-ம் ஆண்டு பிப்ரவரி வரை கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. ஆனால், சவுகான் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் அவரின் புகைப்படம், கைரேகை, கையொப்பம் என எதுவுமே இல்லாத நிலையில் ஆதார் கார்டு எண் மட்டுமே அவருடையதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.