ரேவந்த் ரெட்டி அதிரடி அறிவிப்பு: நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 நிதி

நாட்டின் 78-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் இன்று பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையிலும், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கோல்கொண்டா கோட்டையிலும் தேசிய கொடியேற்றி வைத்துச் சிறப்புரையாற்றினர்.

அப்போது, “இந்த அரசு மாநில நலன்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அதனைக் கருத்தில் கொண்டு அண்டை மாநிலங்களுடனும், மத்திய அரசுடனும் நல்லுறவை பேணி வருகிறது. ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் அண்மையில் நடந்த பேச்சுவார்த்தையில் மாநில பிரிப்பு சார்ந்து சாதகமான பலன்கள் கிடைக்கும் என அரசு நம்புகிறது.

மக்கள் நலனுக்கு இந்த அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. தெலங்கானாவை உலக அளவில் பெருமை கொள்ள செய்யும் வகையில் இந்த அரசின் செயல்படும் இருக்கும் என்பது இந்நேரத்தில் நான் உறுதியளிக்கிறேன். நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை குறித்து இந்த அரசு அறியும். அவர்களுக்கு இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு ரூ.12,000 நிதியுதவி வழங்கப்படும்.

விவசாயிகளின் நலனை காக்கும் கடமையை இந்த அரசு கொண்டுள்ளது. ரைத்து பரோசா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.15,000 நிதியுதவி விரைவில் வழங்கப்படும். அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தற்போது தயாரிப்பு நிலையில் உள்ளது. அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்” என முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.

Revanth Reddy: பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை வங்கியில் எடுக்கப்பட்ட செல்லா காசோலை..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அண்மையில் கூட காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

இந்நிலையில், பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்தநாளான இன்று மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு ‘மோடியின் உத்தரவாதம்’ என்ற தலைப்பில் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையில் 14 முக்கிய வாக்குறுதிகள் இடம் பெற்று இருந்தன. இதையடுத்து பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தெலங்கனா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில், ”2004 ஆம் ஆண்டு பா.ஜ.க வெளியிட்ட ‘ஒளிரும் இந்தியா’ தேர்தல் அறிக்கையை மக்கள் நிராகரித்தது போல் இம்முறையும் ‘வளர்ந்த இந்தியா’ தேர்தல் அறிக்கையை மக்கள் நிராகரிப்பார்கள். பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை என்பது தோல்வியடைந்த வங்கியில் எடுக்கப்பட்ட செல்லா காசோலை.” என தெரிவித்துள்ளார்.