வெகு விமர்சத்தையாக நடைபெற்ற மந்தார குப்பம் வெற்றி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்..!

கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தார குப்பம் கடைவிதியில் அமைந்துள்ள வெற்றி விநாயகர் கோவில் உள்ளது இதில் ஸ்ரீ வெற்றி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை முன்னிட்டு கடந்த 21-ஆம் தேதி மாலை முதற்கால யாக பூஜையும், 22 .ஆம் தேதி காலை இரண்டாம் காலை யாக பூஜையும் நடைபெற்று சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்கி புனித நீர் ஊற்றப்பட்ட கலசத்தை உத்திராபதி கைலாய வாத்தியம் முழுக்க சிவாச்சாரிகள் தலையில் சுமந்து வந்து கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.

இதனை நெய்வேலி மந்தாரக்குப்பம் பெரியார்குறிச்சி, மேல்பாதி.கீழ்பாதி, பாப்பனப்பட்டு, வடக்குவெள்ளூர், பழைய நெய்வேலி உள்ளிட்ட கிராம மக்கள் 1000க்கும் மேற்பட்டோர் மகா கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு கொண்டு இறையருள் பெற்றனர்.

நெய்வேலியில் 35 -வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் 35 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நெய்வேலி CBS அண்ணா திடலில் நடைபெற்றது. தமிழ்நாடு நுகர்வோர் உரிமை மற்றும் சாலை பாதுகாப்பு மையம் மற்றும் நெய்வேலி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், நெய்வேலி நகர காவல் நிலையத்தின் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நெய்வேலி நகர் பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் இயங்கும் தனியார் பள்ளி வாகனங்கள், வாடகை கார் ஓட்டுநர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் நெய்வேலி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் பிரான்சிஸ் மற்றும் நெய்வேலி போக்குவரத்து கழக கிளை மேலாளர் R.பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் காவல்துறை சார்பில் நெய்வேலி நகர காவல் ஆய்வாளர் சாகுல் ஹமீது உதவி ஆய்வாளர் கோபால், சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயராமன், சிறப்பு உதவி ஆய்வாளர் ஞானசேகரன், தலைமை காவலர் ராஜவேல் , முத்தையன் , ஸ்டெல்லா ஆகியோர் கலந்து கொண்டனர் முதல் நிலை காவலர்கள் S.பாலச்சந்திரன் வரவேற்புரை வழங்கினார் தொடர்ந்து பேசிய நெய்வேலி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் அவர்கள் நெய்வேலி பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் இயங்கும் தனியார் பள்ளி வாகனங்கள் அரசு நிர்ணயிக்கப்பட்ட அளவில் மாணவர்களை ஏற்ற வேண்டும் அதிவேகமாக இயக்கக் கூடாது ஏர் ஹாரன் பயன்படுத்தக் கூடாது தகுந்த சீருடை அணிந்து வாகனம் இயக்க வேண்டும் என்றும் சாலை விதிகளை மீறி வாகனம் இயக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விபத்து ஏற்படுத்தாமல் இயக்கும் சிறந்த ஓட்டுநர்களை தேர்ந்தெடுத்து கேடயம் வழங்கி கௌரவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து நெய்வேலி நகர காவல் ஆய்வாளர் சாகுல் அமீது அவர்கள் பேசுகையில் பள்ளி வாகனங்கள் வேகமாக செல்வதாக அடிக்கடி புகார்கள் வருகிறது எனவும் மெதுவாக பள்ளி வாகனங்கள் இயக்க வேண்டும் என்றும் நெய்வேலி நகரை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக வாகனத்தை இயக்கும் ஓட்டுநர்கள் மீது புதிய மோட்டார் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விபத்தினை ஏற்படுத்தும் ஓட்டுநரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் புதிய மோட்டார் வாகன சட்டங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைத்து அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து நெய்வேலி போக்குவரத்து கிளை மேலாளர் அவர்கள் பேசுகையில் விபத்தினால் ஏற்படும் இழப்புகள் குறித்தும் குழந்தைகளை இழந்த பெற்றோர்களின் நிலை குறித்து உருக்கமாக பேசினார் அதனைத் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு நுகர்வோர் உரிமை மற்றும் சாலை பாதுகாப்பு மையத்தின் தலைவர் டாக்டர் ஆரோக்கியராஜ் அவர்கள் போக்குவரத்து விழிப்புணர்வு சம்பந்தமான நோட்டீசுகளை வழங்கினார் பின்னர் நெய்வேலி நகர காவல் ஆய்வாளர் அவர்கள் போக்குவரத்து விழிப்புணர்வு பேருந்து திணை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் இறுதியில் தமிழ்நாடு நுகர்வோர் உரிமை மற்றும் சாலை பாதுகாப்பு மையத்தின் பொதுச் செயலாளர் k.செந்தில் நன்றி உரை வழங்கினார்.

நெய்வேலியில் என்எல்சியில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் தொற்று நோய்க்கான பரிசோதனை..!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் தொற்று நோய்க்கான பரிசோதனை திட்டம் துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் அவர்கள் கலந்துகொண்டு முகாமை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மருத்துவம், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சார்பில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் மூலம் தொற்று நோய்க்கான பரிசோதனை துவக்க விழா நெய்வேலி வட்டம் 24 பகுதியில் உள்ள என்எல்சி சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

பின்னர் தொழிலாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனைகளை பார்வையிட்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் மருத்துவத்துறையில் தமிழகம் சிறந்து விளங்கதாகவும், சுகாதாரத்துறை மூலம் இல்லம் தேடி மருத்துவம் திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்துவதாகவும் கூறினார் முகாமில் நெய்வேலி என்எல்சி இந்திய நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு எடை, உயரம், ரத்த அழுத்தம், மற்றும் நீரிழிவு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவ ஆலோசனைக்ள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் கீதா ராணி . என்எல்சி தலைவர் பிரசன்னா குமார் மோட்டுபள்ளி , நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் , விருதாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நெய்வேலியில் தண்ணீரை சேகரித்த அதிகாரிகள்..!

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீரில் பாதரசம் கலந்திருப்பதாகவும், மண்வளம் மற்றும் காற்று மாசடைந்து இருப்பதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக தனியார் அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி கடந்த 10-ந்தேதி சென்னை தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்தது.

அதில் , வல்லனர் குழுவை அமைக்க உத்தரவிடபட்டு அதன்படி, மண்வளம் பாதிக்கப்பட்டுள்ளதா என்று அய்வு செய்ய 5 பேர் கெர்ணட குழுவை நியமித்து மாசுகட்டுப்பாட்டு வரியம் அமைத்தது. தமிழ்நாடு நீர்பகுப்பாயம் துறையின் தலைமை குடிநீர் பகுப்பாய்வாளர் சுஜாதா உத்தரவின்பேரில் துணை தலைமை குடிநீர் பகுப்பாய்வாளர் கேசவன், கிண்டி சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் பூபதி, ஷேக்தாவுத் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் காலை நெய்வேலி வந்தனர்.

தொடர்ந்து அவர்கள் தெற்குவெள்ளூர் வெளிக்கூனங்குறிச்சி, பெரியாக்குறிச்சி, மேல்பாப்பன்பட்டு, குறவன்குப்பம், பழையநெய்வேலி, மேல்பாதி, கீழ்பாதி, வடக்குசேப்ளாநத்தம், உய்யகொண்டராவி, வடக்குவெள்ளூர், காட்டு குறிச்சி, தொப்புளிக்குப்பம், அம்மேரி, ஆதண்டார்கொல்லை உள்ளிட்ட 33 கிராமங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, குடிநீர் குழாய், ஆழ்துளை கிணறு ஆகியவற்றில் இருந்து தண்ணீர் மாதிாிகளை சேகரித்தனர்.