தாமரை வளரவே கூடாது.. சேகர்பாபு சொன்னதை கேட்டு அதிர்ந்த அதிகாரி.. !

சென்னை போரூரில் பசுமை பூங்காவை ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு, அங்கு குளத்தில் தாமரை வளர்ந்திருந்ததைப் பார்த்துவிட்டு, தாமரை வளரவே கூடாது என அதிகாரிகளிடம் தெரிவித்ததால் அங்கு கலகலப்பு ஏற்பட்டது.

சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் போரூரில் 16.60 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.60 கோடி மதிப்பில் ஈரநிலை பசுமை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் 103 இருக்கைகள், நடைபாதை, செங்கல் நடைபாதை, கருங்கல் நடைபாதை, கூடைப்பந்து விளையாட்டு மைதானம், சிறுவர் விளையாட்டுத் திடல், 6.85 ஏக்கர் அளவில் ஏரி, திறந்தவெளி உடற்பயிற்சி மைதானம், பார்க்கிங், கழிப்பிடம், கடைகள், மின்விளக்கு, சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பசுமை பூங்காவில் பல்வேறு வசதிகள் அமைக்கும் பணிகளை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவர் பி.கே.சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம் இதுவரை செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்தும், எப்போது பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது அங்கு குளத்தில் மலர்ந்திருந்த தாமரைப் பூக்களை பார்த்த அமைச்சர் சேகர்பாபு, அதிகாரிகளிடம், “தாமரை வளவே கூடாது.. இங்க என்ன இப்படி வளர்ந்திருக்கு” என கிண்டலாக கூறினார். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை முதன்மை செயலர் காகர்லா உஷா ஐ.ஏ.எஸ், அமைச்சரின் கிண்டல் முதலில் புரியாமல் ஏன் சார் எனக் கேட்க, அருகில் இருந்தவர்கள் சிரித்ததைப் பார்த்து, அமைச்சரின் கிண்டலை உணர்ந்து சிரித்தார்.

சேகர்பாபு: நாங்கள் பணி செய்து பெயர் வாங்குகிறவர்கள். அதிமுகவினர் குற்றம் சொல்லியே பெயர் வாங்குபவர்கள்..!

நாங்கள் பணி செய்து பெயர் வாங்குகிறவர்கள். அதிமுகவினர் குற்றம் சொல்லியே பெயர் வாங்குபவர்கள். எனவே, அவர்களுடைய வசைபாடுகளைப் பற்றி நாங்கள் கவலைப்படுபவர்கள் இல்லை. இந்தப் பேரிடரில் இருந்து மக்களை காப்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு.” என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழை வெள்ள பாதிப்புகளை, பட்டாளம் பகுதியில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், “முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக சென்னையில் பல இடங்களில் தண்ணீர் வடியத் தொடங்கியிருக்கிறது.

குறிப்பாக, நேற்று தமிழக முதல்வர் ஆய்வு செய்த புளியந்தோப்பு நெடுஞ்சாலை, ஓட்டேரி, ஸ்டீபன்சன் சாலை ஆகிய பகுதிகளில் முழுவதுமாக தண்ணீர் வடிந்திருக்கிறது. பட்டாளம் ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் சிறுமழைக்கே தண்ணீர் தேங்குவது வழக்கம். காரணம் இது பள்ளமான, தாழ்வான பகுதி, இங்கு தேங்கக்கூடிய தண்ணீரை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று இந்தப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

இப்பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை துரிதமாக அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை மாநகரத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் மின் தடை, பால் தேவை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் போர்க்கால அடிப்படையில், தமிழக அரசும், திமுகவும் ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைந்து மழை வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மக்களின் தேவைகளை உடனுக்குடன் அறிந்து அவற்றைத் தீர்ப்பதற்கான போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நாங்கள் பணி செய்து பெயர் வாங்குகிறவர்கள். அதிமுகவினர் குற்றம் சொல்லியே பெயர் வாங்குபவர்கள். எனவே, அவர்களுடைய வசைபாடுகளைப் பற்றி நாங்கள் கவலைப்படுபவர்கள் இல்லை.

இந்தப் பேரிடரில் இருந்து மக்களை காப்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. எனவே, குறை சொல்பவர்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். எங்களது தரப்பில் குறைகள் இருந்தால், நிச்சயமாக அதற்கு செவிசாய்த்து, அந்த குறைகளையும் நிவர்த்தி செய்வதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.” என சேகர்பாபு தெரிவித்தார்.

Udhayanidhi Stalin: எல்லோருக்கும் எல்லாமும் என்பதுதான் திராவிடம்…!

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி வாயிலாக வாழ்த்துரை வழங்கினார். அப்போது, “சேகர்பாபுவை நமது முதலமைச்சர் எப்போதும் செயல் பாபு என்றே அழைப்பார்.

அது எவ்வளவு உண்மை என்பது இந்த மாநாட்டின் ஏற்பாடுகளைப் பார்க்கும் போதே தெரிகிறது. எப்போது பார்த்தாலும் அமைச்சர் சேகர் பாபு எதாவது ஒரு திருக்கோயிலை ஆய்வு செய்து கொண்டு தான்a இருப்பார். கோயிலில் தான் அவர் குடியிருப்பார் என்று சொல்லும் அளவுக்கு அவரது பணி இருக்கிறது. இன்று அறநிலையத்துறை தன்னுடைய பணிகளை அறத்தோடு முன்னெடுத்துச் செல்கிறது.

திராவிட மாடல் அரசு இந்த மாநாட்டை திடீரென நடத்துவதாகச் சிலர் சொல்கிறார்கள். ஆனால், இது திடீரென நடத்தப்படும் மாநாடு இல்லை. கடந்த 3 ஆண்டுகளில் இந்த திராவிட மாடல் அரசு பல சாதனைகளைச் செய்துவிட்டுத் தான் இந்த மாநாட்டை நடத்துகிறது. திமுக அரசு யாருடைய நம்பிக்கைக்கும் குறுக்கே நிற்காத அரசு. எல்லாருடைய உணர்வுக்கும் மதிப்பு கொடுக்கும் அரசு. சொல்லப்போனால் அறநிலையத் துறையின் பொற்காலம் என்றே திமுக ஆட்சியை சொல்லலாம்.

திராவிட இயக்கத்தின் தொடக்க புள்ளியான நீதி கட்சி ஆட்சியில் தான் இந்து சமய அறநிலைய துறை பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டு, மக்களின் வழிபாட்டு உரிமை உறுதி செய்யப்பட்டது. குற்றக்குடி அடிகளார் விபூதியை கொடுத்த போது அதை மறுக்காமல் வாங்கி நெற்றி நிறைய பூசிக்கொண்டவர் தந்தை பெரியார். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று முழங்கியவர் அண்ணா. பல ஆண்டுகளாக ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்தவர் கருணாநிதி.

இந்த தலைவர்கள் வழியில் வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 3 ஆண்டுகளில் அறநிலையத் துறை சார்பில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த திராவிட மாடல் அரசு அமைந்த 3 ஆண்டுகளில் 1400+ கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. ரூ. 5,600 கோடி மதிப்பிலான 6,000 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ரூ 3,800 கோடி மதிப்பில் 8500 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எல்லோருக்கும் எல்லாமும் என்பதுதான் திராவிடம்.

நமது திராவிடம் யாரையும் ஒடுக்காது, அனைவரையும் இணைக்கவே செய்யும். அதற்கு மிக சிறந்த ஒரு உதாரணமாகவே அனைத்து சாதியினர் மற்றும் பெண்கள் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. இப்போது மாநிலத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மற்ற துறைகளை எப்படி இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருக்கிறதோ.. அதேபோல தான் அறநிலைய துறையும் இந்தியாவுக்கு வழிகாட்டி வருகிறது.

இப்படி பல சாதனைகளை செய்த தமிழக அரசு இப்போது முருகன் மாநாட்டை நடத்துகிறது. முருகன் மாநாடு ஆன்மீக மாநாடு மட்டும் இல்லை. தமிழர் பண்பாட்டு மாநாடாகவும் நடைபெறுகிறது. இந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வரலாற்றில் எப்போதும் நிலைத்து நிற்கும்” என உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

அமைச்சர் சேகர்பாபு: பாவம் செய்ததை போக்க அண்ணாமலை நடைபயணம்…!

சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு உதவி தொகை மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா தங்கசாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலை வகித்தார். இதில் சுற்றுச்சூழல் பணி தலைவர் பூங்கோதை ஆலடி அருணா பங்கேற்று கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில், இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவில் 100 நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக 40 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில், பாஜகவுக்கு திமுக சிம்ம சொப்பனமாக இருக்கிறது. ராகுல்காந்தி நடை பயணம் செய்தது இந்தியாவை மீட்டெடுக்க.

அண்ணாமலை நடைபயணம் செய்வது அவரை முன்னிலைப்படுத்த தான். ஆட்சி மூலமும், கட்சி மூலமும் பல்வேறு நலத்திட்டங்களை திமுக தொடர்ந்து செய்து வருகிறது. அண்ணாமலை நடைபயணம் பாவம் செய்ததற்காக நடத்தப்படுகிறது. திமுக எந்த பாவமும் செய்யாததால் நடை பயணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.