உடல் முழுக்க சிகரெட் சூடு..! 15 வயது சிறுமியை சித்ரவதை செய்து கொன்ற தம்பதி..!

16 வயது சிறுமியை உடல் முழுவதும் சிகரெட் சூடு வைத்து சித்ரவதை செய்து கொன்ற கணவன் – மனைவி கைது செய்யப்பட்டனர். சென்னை அமைந்தகரை பகுதியில் வீட்டில் பணிபுரிந்து வந்த 15 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அந்த சிறுமியின் உடல் முழுவதும் சிகரெட்டால் சூடு வைக்கப்பட்டு, அடித்து தாக்கப்பட்டிருந்த காயங்கள் இருந்தது. இந்நிலையில் வீட்டு உரிமையாளர் மற்றும் அவரது மனைவி உள்பட 3 பேர் தான் சிறுமியை அடித்து கொலை செய்தது தெரிவர அவர்களை காவல்துறை கைது செய்துள்ளனர்.

சென்னை அமைந்தகரை மேத்தாநகர் சதாசிவம் தெருவில் உள்ள man and soil அடுக்குமாடி குடியிருப்பில் நாபியா மற்றும் முகமது நவாஸ் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டில் தஞ்சாவூரை சேர்ந்த 16 வயது சிறுமி பணிப்பெண்ணாக ஓராண்டுக்கு மேலாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், தீபாவளி அன்றும் சிறுமி அவரது வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முகமது நவாஸ் வீடு பூட்டிக் கிடந்தது. வீட்டில் பணிபுரிந்த சிறுமியை காணவில்லை என காவல் நிலையத்திற்கு வந்த புகாரின் பேரில் காவல் துறை அந்த வீட்டில் நேற்று சோதனை நடத்தினர். இதில் வீட்டின் கழிவறையில் மர்ம முறையில் சிறுமி பிணமாக கிடந்தார். இதையடுத்து அவரது உடலை மீட்ட காவல்துறை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு தப்பி ஓடியிருந்த கணவன் மனைவி இருவரையும் காவல்துறை பிடித்து விசாரணை செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கழிவறையில் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்துவிட்டதாக கூறினர். ஆனால் காவல்துறை அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். காவல்துறை நடத்திய விசாரணையில் உறைய வைக்கும் தகவல் வெளியானது. அதாவது, கணவன் மனைவி மற்றும் அவர்களது நண்பர் ஆகிய 3 பேரும் சேர்ந்து தான் சிறுமியை சித்ரவதை செய்து கொலை செய்தது தெரியவந்தது.