கே.பி. முனுசாமி: டாஸ்மாக் கடைகளாக செயல்படும் திமுகவினர்..! அரசு வருமானம், திமுகவினர் பையில்..!

டாஸ்மாக் கடைகளில் விற்னை செய்ய வேண்டிய மது வகைகளை திமுகவினர் கள்ளத்தனமாக விற்பனை செய்து பணம் சம்பாதிக்கின்றனர் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். திருவண்ணாமலையில் நேற்று இரவு நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி சிறப்புரையாற்றினார்.

அதற்கு முன்னதாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கே.பி.முனுசாமி பதிலளித்தார். தமிழகத்தில் 2026-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்காக அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி குழு அமைத்துள்ளார். அரசியல் களப் பணியை மாவட்ட வாரியாக செய்வதற்கு உந்து சக்தியாக, கள ஆய்வு அமையும்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அனைத்து சாத்திய கூறுகளையும் ஆய்வு செய்து, கிளை நிர்வாகிகள், தொண்டர்களை ஒருங்கிணைத்து, திமுக ஆட்சியில் உள்ள தவறுகள் மற்றும் இயலாமைகளை மக்களிடத்தில் எடுத்து சொல்லி, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதற்கு கள ஆய்வு துணையாக இருக்கும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக செயலிழந்து இருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம், ஒரு இடத்தில் வன்முறை உருவாகிறது என்றால், சமூக விரோத சக்திகள் ஆதாயம் தேடும் அளவில் எதாவது செய்யும். அதன்படி, சமூக விரோத சக்திகள் மூலமாக கஞ்சா, போதை பொருள், அபின் அதிகளவில் புழக்கத்தில் உள்ளன. டாஸ்மாக் கடைகளில் விற்னை செய்ய வேண்டிய மது வகைகளை திமுகவினர் கள்ளத்தனமாக விற்பனை செய்து பணம் சம்பாதிக்கின்றனர். டாஸ்மாக் மூலம் அரசுக்கு வர வேண்டிய வருமானம், திமுகவினருக்கு சென்று கொண்டிருக்கிறது ன கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

கே.பி. முனுசாமி: தவெக தலைவர் விஜய் சிந்தனையை நிறைவேற்ற முடியாது என தோன்றும்..!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் சிந்தனையை நிறைவேற்ற முடியாது என தோன்றும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். திருவண்ணாமலையில் நேற்று இரவு நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி சிறப்புரையாற்றினார்.

அதற்கு முன்னதாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கே.பி.முனுசாமி பதிலளித்தார். தமிழகத்தில் 2026-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்காக அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி குழு அமைத்துள்ளார். அரசியல் களப் பணியை மாவட்ட வாரியாக செய்வதற்கு உந்து சக்தியாக, கள ஆய்வு அமையும்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அனைத்து சாத்திய கூறுகளையும் ஆய்வு செய்து, கிளை நிர்வாகிகள், தொண்டர்களை ஒருங்கிணைத்து, திமுக ஆட்சியில் உள்ள தவறுகள் மற்றும் இயலாமைகளை மக்களிடத்தில் எடுத்து சொல்லி, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதற்கு கள ஆய்வு துணையாக இருக்கும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக செயலிழந்து இருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம், ஒரு இடத்தில் வன்முறை உருவாகிறது என்றால், சமூக விரோத சக்திகள் ஆதாயம் தேடும் அளவில் எதாவது செய்யும். அதன்படி, சமூக விரோத சக்திகள் மூலமாக கஞ்சா, போதை பொருள், அபின் அதிகளவில் புழக்கத்தில் உள்ளன. டாஸ்மாக் கடைகளில் விற்னை செய்ய வேண்டிய மது வகைகளை திமுகவினர் கள்ளத்தனமாக விற்பனை செய்து பணம் சம்பாதிக்கின்றனர்.

டாஸ்மாக் மூலம் அரசுக்கு வர வேண்டிய வருமானம், திமுகவினருக்கு சென்று கொண்டிருக்கிறது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீதான தாக்குதல் என்பது கையாலாகாத செயலாகும். மலையை பார்த்து மோதும் சிறு துரும்புகள். காழ்ப்புணர்ச்சி காரணமாக தாக்குதல் நடத்தி உள்ளனர். இச்செயல், வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதிமுகவில் ஜாதி, மதம் கிடையாது. உழைக்கின்ற ஒவ்வொரு தொண்டனும் உயர்வான இடத்துக்கு வரக்கூடிய சான்றுதான் அதிமுக.

இதற்கு உதாரணம் அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி. ஒவ்வொரு துறைகளிலும் அரசு செயல்படவில்லை. இதனால், தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குகின்றனர். மக்கள் திசை திரும்பாமல் செல்ல, தவறான நடவடிக்கையை எடுத்துள்ளனர். அதிமுகவுக்கு எதிராக செயல்பட்ட காரணத்தாலும், கட்சியின் கவுரவத்தை நீதிமன்றம் மற்றும் காவல் நிலையத்துக்கு எடுத்து களங்கம் ஏற்படுத்தியவர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

அப்படிப்பட்டவர், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர், அதிமுக ஒருங்கிணையும் என்று அவர் சொல்வதாக குறித்த கேள்வி தேவையற்றது. இது முடிந்துபோன விஷயம். நடிகர் விஜய் கட்சியை தொடங்கி உள்ளார். அவர் தலைமையில், தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆட்சியில் பங்கு என்று தெரிவித்துள்ளார். இத்தனை கொள்கைகளை பிரகடனப்படுத்தி உள்ளார். காலங்கள் மாறும்.

ஒரு நேரத்தில் ஒருவருக்கு ஒரு சிந்தனை ஏற்படும். நடைமுறையில் செல்லும்போது, அந்த சிந்தனையை நிறைவேற்ற முடியாது என தோன்றும். அடுத்த சிந்தனை ஏற்படும். அப்படி வரும்போது அவருக்கு மனமாற்றம் ஏற்படும். அந்த மனமாற்றத்துக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்வார் என கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

கே.பி.முனுசாமி: ஆளுநர் ஆர்.என்.ரவி ஏதோ ஒரு காழ்ப்புணர்வில் பேசிக் கொண்டிருக்கிறார்..!

தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் தரம் பற்றியும், பள்ளிக் கல்வி பற்றியும் தமிழக ஆளுநர் ரவி விமர்சித்துப் பேசியதற்கு திமுக கடும் எதிர்வினை ஆற்றி வரும் சூழலில், திமுகவோடு கைகோர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி ஆளுநர் காழ்ப்புணர்வோடு பேசுவதாக விமர்சித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநில பாடத்திட்டத்தின் தரம் மோசமாக இருப்பதாக அண்மையில் விமர்சித்திருந்தார். அதற்கு திமுக தரப்பில் கடுமையாக எதிர்வினைகள் எழுந்தன. உலகின் தலைசிறந்த மருத்துவர்கள், விஞ்ஞானிகள் தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் படித்தவர்கள்தான். மாணவர்களை சுயமாக சிந்திக்கத் தூண்டும் கல்விமுறை தான் சிறந்த கல்விமுறை. இதைப் பிடிக்காத சில வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள்தான் இன்று தமிழ்நாட்டின் பாடத்திட்டத்தை குறை சொல்கிறார்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்திருந்தார்.

எனினும், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 5 -ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடந்த கலந்துரையாடல் நிகழ்விலும் தமிழக பள்ளிக் கல்வி பற்றி விமர்சித்துப் பேசினார் ஆளுநர் ரவி. அரசு பள்ளிகளில் கல்வித் தரம் மிகவும் கீழே சென்றுள்ளது. தேசிய சராசரியைவிட அது குறைவாக உள்ளது. அரசுப் பள்ளிகளில் 9 -ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 75% மாணவர்களால், இரட்டை இலக்க எண்களைக்கூட புரிந்துகொள்ள முடியவில்லை. 40% மாணவர்களால் அவர்களது பாடப்புத்தகங்களைக் கூட படிக்க முடியவில்லை என ஒரு ஆய்வு கூறுகிறது எனப் பேசினார் ஆளுநர் ரவி. ஆளுநரின் இந்தப் பேச்சுக்கு திமுக தரப்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

ஆளுநர் ரவி ஆவணங்களைப் பரிசீலிக்காமல் அரசியல் உள்நோக்கத்தோடு அவ்வப்போது கொடுக்கும் கோமாளித்தனமான வாக்குமூலங்களை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என திமுக எம்.பி ஆ.ராசா தெரிவித்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் அதிமுக தரப்பும் ஆளுநர் ரவியை காட்டமாக விமர்சித்துள்ளது.

இதுதொடர்பான கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பதில் அளிக்கையில், “ஆளுநர் ஆர்.என்.ரவி ஏதோ ஒரு காழ்ப்புணர்வில் தான் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறார். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மிக உயர்வான இடத்தில் இருக்கிறது. ஒருசில பள்ளிகளில் மாணவர்கள் படிக்காததன் காரணம் அங்குள்ள ஆசிரியர்களின் நடவடிக்கை தான். அப்படியானவற்றை வைத்து ஒட்டுமொத்தமாக தமிழக பள்ளிக்கல்வியின் தரத்தை குறைத்துப் பேசுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது” என கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

கரு. நாகராஜன் எச்சரிக்கை: அண்ணாமலை பற்றிய விமர்சிப்பவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்..! மக்கள் மன்றத்தில் சந்திக்கிறோம்..!

பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பெரியேற்றத்திலிருந்து அதிமுக உடன் மோதல் இருந்தது. இந்நிலையில், கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆனால் அரசியல் களத்தில் அது குறித்த விவாதங்கள் ஓய்ந்தபாடில்லை. இந்த விழாவை மையமாக வைத்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வைத்த குற்றச்சாட்டுக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் பதில் அளித்திருந்தனர்.

இந்நிலையில், அண்ணாமலை மீதான அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வார்த்தை தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்து பாஜக துணைத் தலைவர் கரு. நாகராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,பத்திரிக்கை செய்தி எங்கள் தலைவர் அண்ணாமலை அவர்களைப் பார்த்து பயப்படும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழக அரசியலில் காலடி எடுத்து வைத்த உடன் மிகவும் பயந்தது அதிமுக தான். அவரது வளர்ச்சியை பார்த்து பொறாமைப்பட்டார்கள். அவ்வப்போது அவரை குறை சொல்லி பேசுவதும் விமர்சிப்பதும் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கும் இன்றைய நிர்வாகிகளுக்கும் பொழுது போக்காக இருந்தது.

பாஜக-அதிமுக கூட்டணி இருக்குமா இல்லையா என்பதை ஒருபோதும் பாஜக பேசாத போதும், ஏதோ பாஜக அதிமுக நான் எங்களுக்கு வேண்டு என்று அழுது அடம் பிடித்ததை போல இவர்களே கதவுகளை மூடி விட்டோம். ஜன்னல்களை மூடிவிட்டோம். நாங்கள் பிஜேபியை விட்டு ஓடி விட்டோம் என்று கதை அளந்து கொண்டிருந்தார்கள். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு சாதனை படைத்த அண்ணாமலை அவர்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை தலைமை ஏற்று அமைத்து தமிழகத்தில் ஒரு சாதனை படைத்து விட்டார்.

கூட்டணி கட்சிகளோடு சேர்த்து 80 லட்சம் வாக்குகளும் பாஜகவிற்கு மட்டும் 50 லட்சம் வாக்குகளும் கிடைத்தது. ஏறத்தாழ 7300 பூத்துகளில் கூட்டணி கட்சி வேட்பாளர் திமுகவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பெற்றார்கள் 12 நாடாளுமன்ற தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்தார்கள். பல்வேறு தொகுதிகளில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு டெபாசிட் பறிபோனதை நாம் பார்த்தோம்.

இவையெல்லாம் தமிழக பாஜக எந்த அளவிற்கு வளர்ந்து இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. இவற்றையெல்லாம் உற்று நோக்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகதலைவர்கள் தொடர்ந்து மாநில தலைவர் அண்ணாமலை அவர்களை விமர்சிப்பதை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.ஏதாவது ஒரு பத்திரிகையாளர் ஒரு கேள்வி கேட்டால் அதற்கு தவறான தகவலை முரண்பட்ட தகவலை அவருடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கக்கூடிய தகவலை தொடர்ந்து பேசி வந்தார்கள்.

இவற்றிற்கெல்லாம் பதில் சொல்லாமல் வேடிக்கை பார்க்கக்கூடிய நிலையில் எங்கள் கட்சியில்லை. எங்கள் மாநிலத் தலைவர் அவர்கள். மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர் உழைக்கக்கூடியவர். ஆற்றல் மிக்கவர் அப்படிப்பட்டவரை விமர்சிக்கிற பொழுது அதற்கு பதில் சொல்லாமல் அவர் கடந்து போக முடியாது அப்படி பதில் சொல்கிற போது இவர்களுக்கு எல்லாம் வயிற்று எரிச்சல் ஏற்படுகிறது. இவர்களுடைய மனங்களில் பதட்டம் ஏற்படுகிறது. ஏற்கனவே நான்காக சிதறி இருக்கக்கூடிய அதிமுக புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி. போன்ற தலைவர்கள் இல்லாத நிலையில் தொண்டர்கள் பரிதவித்து வருகிறார்கள்.

எடப்பாடி பழனிச்சாமி அவர்களை மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. இவற்றின் வெளிப்பாடு நான் எங்கள் தலைவரை தொடர்ந்து விமர்சிக்கிறார்கள் சேற்றை வாரி இறைக்கிறார்கள். இன்றைக்கு உதயகுமார், கடம்பூர் ராஜு, செல்லூர் ராஜு, முனுசாமி போன்றவர்கள் எல்லாம் வாய்க்கு வந்தபடி மனசுக்கு வந்தபடி பேசுகிறார்கள். வசை பாடுகிறார்கள். இதன் மூலம் நாங்களும் அரசியலில் இருக்கிறோம் இன்னும் ஓய்வு பெறவில்லை என்பதை காட்டுவதற்காகவே அவர்கள் முயற்சிக்கிறார்கள்.

இது அவர்களுடைய இயலாமையை தான் காட்டுகிறது. எங்கள் தலைவர் சொன்னது போல வர இருக்கிற சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நான்காவது இடத்தை இப்பொழுதே ரிசர்வ் செய்து வைத்துக் கொள்ளலாம். இப்படி தொடர்ந்து பேசுவதை நாங்கள் வேடிக்கை பார்க்க தயாராக இல்லை. உங்கள் மீது இருக்கக்கூடிய ஊழல் வழக்குகளை ஒவ்வொன்றாக மக்கள் மன்றத்திலே அடுக்குவோம். உங்கள் மீது இருக்கிற வழக்குகள் விரைவுப்படுத்துவதற்கு நீதிமன்றங்களை நாடுவோம். உங்கள் ஆட்சியில் நடந்த ஊழல்களை நாட்டு மக்களுக்கு கொண்டு வருவோம்.

ஏதோ உங்கள் விமர்சனங்களுக்கு எல்லாம் பயந்து அரசியல் செய்யாமல் இருந்து விடுவோம் என்று நீங்கள் நினைக்காதீர்கள். நீங்கள் தமிழக அரசியலில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அண்ணா திமுகவில் எழுச்சிமிக்க தலைவர்கள் இல்லை என்று அதிமுக தொண்டர்கள் மனம் நொந்து போய் இருக்கிறார்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்களை தமிழ்நாட்டிற்கு அப்பாற்பட்டு ஒரு தலைவர் “அம்மா” என்று குறிப்பிட்டு பேசுகிறார் என்று சொன்னால் அது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தான். அவர் மீது காட்டிய உண்மையான அன்பும் பாசமும் அனைவரும் அறிந்ததே.

அப்படிப்பட்ட பிரதமர் அவர்களை இப்பொழுது விமர்சிக்கிற எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை புகழாத நாளே இல்லை. இப்படி சந்தர்ப்பவாத அரசியல் செய்ய முடிவு செய்துவிட்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்கள் மன்றத்திலிருந்து தூக்கி எறியப்பட போவது உறுதி. பதிலுக்கு பதில் நீங்கள் பேசுவதற்கு திரும்ப பதில் சொல்வதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.

நீங்கள் என்னதான் கூறினாலும் கூச்சல் போட்டாலும் உங்களால் இனிமேல் வெற்றி பெறவே முடியாது. மக்கள் உங்களை புறக்கணித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தன்மானத் தலைவர் அண்ணாமலை அவர்கள் தலைமையில் 2026 தேர்தலை சந்திக்கத்தான் போகிறோம். அதற்கு முன்பாக வருகிற உள்ளாட்சி தேர்தல்களையும் சந்திக்க தான் போகிறோம். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மையான நோக்கம், லட்சியங்களை செயல்படுத்தக்கூடிய இயக்கம் பாஜக தான் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் நினைக்கத் தொடங்கி விட்ட எனவே வழக்கு, நீதிமன்றம், செயற்குழு பொதுக்குழு இவையெல்லாம் தற்காலிகமாக அவர்கள் பதவியில் அமர்வதற்குத் தான் பயன்படுமே ஒழிய மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு ஒருபோதும் பயன்படப்போவதில்லை. அப்படி ஒரு கனவு இனிமேல் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு இருக்கக் கூடாது. இருக்க முடியாது.

வார்த்தைகளை அளந்து பேசுங்கள் நீங்கள் பேசுகிற ஒவ்வொரு வார்த்தைக்கும் மக்களிடம் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஏனென்றால் அண்ணாமலை இன்றைக்கு மக்கள் தலைவர். அவரை விமர்சிப்பவர்களை வன்மையாக கண்டிக்கிறோம் மக்கள் மன்றத்தில் சந்திக்கிறோம் என கரு. நாகராஜன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கே.பி.முனுசாமி: “வெற்றிப் பாதைக்கு வர முடியாமல் கடைசி இடத்தில் இருப்பவர்களை பற்றி பேசுவதற்கு வாய்ப்பு இல்லை..!

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெய பிரகாஷை ஆதரித்து, கிருஷ்ணகிரி நகரில் பிரச்சாரம் மேற்கொண்ட அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி பேசுகையில், “ஓட்டப் பந்தயத்தில் முன்னணியில் செல்பவர்கள் அடுத்ததாக யார் வருகிறார்கள் என்பதை தான் பார்ப்பார்கள். அவரை தோற்கடிக்க வேண்டும் என்கிற சிந்தனையில்தான் ஓடிக்கொண்டிருப்பார்கள்.

தற்போதைய தேர்தல் களம் என்கிற ஓட்டப் பந்தயத்தில் அதிமுக முன்னணியில் ஓடிக்கொண்டிருக்கிறது. எங்கள் பின்னால் திமுக ஓடி வந்து கொண்டிருக்கிறது. அதனால், திமுகவை பற்றிதான் பேசி வாக்கு சேகரிப்போம். வெற்றிப் பாதைக்கு வர முடியாமல் கடைசி இடத்தில் இருப்பவர்களை பற்றி பேசுவதற்கு வாய்ப்பு இல்லை. அந்தக் கடைசி இடத்தில்தான் பாஜக உள்ளது.

நேரடி களத்தில் வருபவர்களை பற்றிதான் பேச முடியும். பாஜகவை சரியான நேரத்தில் விமர்சிப்போம். இதுகுறித்து ஸ்டாலின் அவர்கள் கவலைப்பட வேண்டிய தில்லை. மேலும், தேசிய அளவில் பாஜக பெரிய ஆளாக இருந்தாலும், தமிழகத்தை பொறுத்தவரை பாஜக ஒரு தவழுகின்ற குழந்தையாகும்.

தமிழக மக்களிடத்திலேயே உங்களுடைய எந்த விதமான சித்து விளையாட்டுகளும் எடுபடாது. எம்ஜிஆர், ஜெயலலிதாவை குறித்து பிரதமர் மோடி பேசுவது, எங்கள் தலைவர்களை உண்மையாக நேசித்து கூறவில்லை. தமிழக மக்கள், எம்ஜிஆர் மீதும், ஜெயலலிதா மீதும் ஈடில்லா அன்பு கொண்டிருப்பதால், அந்த அன்பு உள்ளங்கள் மாறி நமக்கு வாக்களிக்க மாட்டார்களா என்ற சுயநலத்தோடுதான் மோடி இந்த கருத்துகளை சொல்லிக்கொண்டிருக்கிறார்” என கே.பி.முனுசாமி தெரிவித்தார்.