லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்கிய 3 காவலர்கள் அதிரடி மாற்றம்..!

கேரளாவிற்கு நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ள குவாரிகளில் இருந்து எம்சாண்ட், ஜல்லி, குண்டுக்கல் உள்ளிட்ட கனிம வளங்கள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இப்படி கொண்டு செல்லப்படும் கனிம வளங்கள் சில லாரிகள் விதிமுறைகளை மீறி அதிக பாரம் ஏற்றி செல்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கேரளாவுக்கு கனிமவளங்கள் ஏற்றி சென்ற லாரியை செங்கோட்டையில் 3 காவலர்கள் வழிமறித்து ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்கியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து காவலர்கள் அன்பரசன், சுப்பிரமணியன் மற்றும் ஜெயராஜ் ஆகிய 3 பேரை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

பருவ மழைக்கால லாட்டரி சீட்டுக்கு ரூ.10 கோடி பம்பர் பரிசு வென்ற 11 பெண் துப்புரவு பணியாளர்கள்…!

கேரளா மாநிலத்தில் அந்த மாநில அரசு சார்பில் லாட்டரி விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலங்களில் விற்பனை செய்யப்படும் லாட்டரி சீட்டுகளுக்கு பம்பர் பரிசு கோடிகள் மற்றும் லட்சங்களில் வழங்கப்படும். இதனால் கேரள மாநில மக்கள் மட்டுமின்றி, அங்கு சுற்றுலா செல்லக்கூடிய தமிழக மற்றும் பிற மாநில சுற்றுலா பயணிகளும் கேரள லாட்டரி சீட்டுகளை வாங்குவார்கள். இந்நிலையில் பருவமழைக்கால லாட்டரி சீட்டுகள் விற்பனை நடந்து வந்தது.

அதில் பம்பர் பரிசாக ரூ.10 கோடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இரண்டாம் பரிசு பெறுபவர்களுக்கும் கோடிக்கணக்கில் பரிசு அறிவிக்கப்பட்டது. பருவமழைக்கால லாட்டரி விற்பனை திட்டத்தில் விற்பனைக்காக 27 லட்சம் லாட்டரி டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டன. ஒரு டிக்கெட் ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டது. பம்பம் பரிசு ரூ.  10 கோடி என்பதால் லாட்டரி சீட்டுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில் பருவ மழைக்கால லாட்டரி சீட்டு குலுக்கல் முடிவுகள் 26-ந்தேதி வெளியிடப்பட்டது.

அதில் எம்.பி. 200261 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு பம்பர் பரிசான ரூ.10 கோடி விழுந்தது. பாலக்காட்டில் விற்பனையான அந்த லாட்டரி சீட்டை வாங்கியவர்கள் யார் என்பது தெரியாமல்இருந்தது. இந்நிலையில் அந்த லாட்டரி சீட்டை பெண் துப்புரவு பணியாளர்கள் 11 பேர் சேர்ந்து வாங்கியது தெரியவந்தது. மலப்புரம் மாவட்டம் பரப்பனகாடி நகராட்சியில் துப்புரவு பணியாளர்களாக பணிபுரிந்து வரும் அவர்கள், சம்பவத்தன்று ஒரு இடத்தில் குழுவாக நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒருவர், லாட்டரி சீட்டு வாங்குமாறு கூறியிருக்கிறார். ஆனால் ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 250 என்று கூறினார்.

இதனைக்கேட்ட துப்புரவு பணியாளர்கள் தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என்று தெரிவித்துள்ளனர். இதனால் அவர்கள் அனைவரும் இணைந்து ஒரே ஒரு லாட்டரி டிக்கெட் வாங்க முடிவு செய்தனர். அதன்படி 9 பேர் தலா ரூ. 25 ஒருவர் மட்டும் ரூ. 50 போட்டு லாட்டரி டிக்கெட் வாங்கினர். இறுதியில் அவர்களுக்கே பம்பர் பரிசான ரூ. 10 கோடி விழுந்துவிட்டதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். பம்பர் பரிசை வென்ற அவர்களுக்கு, நகராட்சி அதிகாரிகள் மற்றும் சக பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

ரூ.75 லட்சம் பரிசு: இப்படியும் சிலர்…. நர்ஸ் சந்தியாவுக்கு போனை போட்ட கடைக்காரர்..

இப்படியும் சிலர் இருப்பதால் தான் நல்ல  மழை பொழியுது என்று ஒருசிலர் சொல்ல நாம் கேட்டுள்ளோம். அவ்வப்போது  ஒருசிலர் தனக்கு பிடித்த முறையில் நடந்து உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். இன்று நம்மை வாயடைக்க செய்த மனிதர் இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியில் உள்ள ஒரு லாட்டரி கடைக்காரர்.

கேரளா அரசின் முக்கிய வருமானமாக லாட்டரி சீட்டு விற்பனை கேரளாவில் அரசே லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டுள்ளது. இதன்காரணமாக லாட்டரி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது…  அதனால்தான், வாரம் முழுக்க லாட்டரி சீட்டு குலுக்கல் இங்கு நடைபெறும். இதுபோக, பண்டிகை காலங்களான ஓணம் பம்பர், விஷு பம்பர், கிறிஸ்துமஸ் பம்பர் மற்றும் சிறப்பு லாட்டரி சீட்டுகள், அதிக பரிசு தொகையுடன் அறிவிக்கப்படுகின்றது. இந்த லாட்டரி சீட்டு விற்பனையில் சிறுசிறு கடை முதல்  ஏராளமானோர்  லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில், இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியில் ஒரு லாட்டரி கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் இதே பகுதியை சேர்ந்த நர்ஸ் சந்தியா, அடிக்கடி லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார். கடைக்காரரும், ரெகுலர் கஸ்டமர் சந்தியாவுக்கு, ஒரு சீட்டை எடுத்து தனியாக ஒரு கவரில் போட்டு வைத்துவிடுவார். பரிசு குலுக்கல் நடந்த பிறகு, அந்த சீட்டுக்கு பரிசு விழுந்திருக்கிறதா? என்பதை பார்த்து விட்டு அதனை நர்ஸ் சந்தியாவிடம் சொல்வார். ஆனால், கடைக்காரர் தனக்காக எடுத்து வைக்கும் லாட்டரி சீட்டை ஒருநாள்கூட, நர்ஸ் சந்தியா வாங்கி பார்த்ததே இல்லை, கடைக்காரர் என்ன சொல்வாரோ, அதை மட்டும் கேட்டுக் கொள்வார். அந்த அளவுக்கு நம்பிக்கை அந்த கடைக்காரர் மீது நர்ஸ் சந்தியா வைத்துள்ளார்.

இப்படி பல மாதங்களாகவே சந்தியா லாட்டரி சீட்டு வாங்கி வந்துள்ளார். சமீபத்தில் ஸ்திரி சக்தி லாட்டரி விற்பனை நடந்தது.. இதற்காக வழக்கம்போல், சீட்டு ஒன்றை எடுத்து நர்ஸ் சந்தியாவுக்காக கடைக்காரர் எடுத்து வைத்துள்ளார்… கடந்த வாரம் அதன் குலுக்கல் முடிவுகள் வெளியானது… இதில் நர்ஸ் சந்தியாவுக்காக கடைக்காரர் எடுத்து வைத்திருந்த சீட்டுக்கு, முதல் பரிசான ரூ.75 லட்சம் விழுந்திருந்தது. நர்ஸ் சந்தியாவுக்கு கடைக்காரர் எடுத்து வைத்த சீட்டின் நம்பர்கூட தெரியாது.. அந்த சீட்டுக்குதான் பரிசு விழுந்த தகவலும் தெரியாது. ஆனால், கடைக்காரருக்கு தெரியும்.

கடைக்காரை எந்த அளவுக்கு சந்தியா நம்பினாரோ, அதே அளவுக்கு தங்கள் கஸ்டமரையும் கடைக்காரர் நம்பினார். சீட்டு விற்பனை என்றாலும், அதில் ஒரு நேர்மையும், நாணயமும் கொண்டிருக்க வேண்டும் என்று நம்பினார்.. அதனால்தான், சந்தியாவுக்கு போனை போட்டு, முதல் பரிசு ரூ. 75 லட்சம் விழுந்திருப்பதை சொன்னார்.. இதைக் கேட்டு திக்குமுக்காடிப்போனார் சந்தியா.. ஒருபக்கம் முதல்பரிசு சந்தோஷம், இன்னொரு பக்கம் கடைக்காரரின் நாணயம் கண்டு ஆச்சரியப்பட்டார்.