பூமியில் விலங்கினங்கள் உருவான காலத்திலிருந்து பலம் படைத்தவை பலம் இல்லாதவைகளை அடக்கி அடிபணிய வைப்பது வாடிக்கையானது. ஐந்தறிவு படைத்த விலங்கினங்கள் ஆறறிவு படைத்த மானிடனாக மாறினாலும் விலங்கினங்களின் குணங்கள் ஒவ்வொரு மானிடனின் ஆழ்மனதில் உறங்கிக் கொண்டுள்ளது.
இதற்கு பல உதாரணங்களை நாம் சொல்லி கொண்டே போகலாம் அதாவது பாலைவனத்தையும் பசுமையாக்கிய நைல் நதி, குளித்து எழுந்தால் உடல் முழுக்க தங்கம் ஒட்டியிருக்கும் அவ்வளவு தங்கம் நிறைந்த நாடு. மேலும் உலகின் மிகப் பிரம்மாண்டமான அரண்மனைகள், மலைக்க வைக்கும் பெரிய கோவில்கள் மற்றும் தலை சுற்ற வைக்கும் பிரமீடுகள், தங்கம், வைரம், வைடூரியத்தால் இழைக்கப்பட்ட பொருட்கள்.
இறந்த அரசர்களுடன் புதைக்கப்பட்ட கோடிக்கணக்கான பொக்கிஷங்கள் நாகரீகம் பெற்ற மனிதர்கள் என ஆப்பிரிக்கா நாடான எகிப்து பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் ஆப்பிரிக்கா முழுக்க கூட்டம் கூட்டமாய் பிரிந்து கிடந்த பழங்குடியினர், ஒரு பழங்குடியினர் மற்றொரு பழங்குடியினரை அடிமைப் படுத்துவது வாடிக்கையாக கொண்டிருந்தனர். யூதர்கள் கூட ஆப்பிரிக்காவிற்கு பஞ்சம் பிழைக்கத்தான் போனார்கள் என்பது நம்மை ஆச்சரியமூட்டும் விஷயமாகும். ஆனால் அப்படிப்பட்ட ஆப்பிரிக்கா நாடுகளின் இன்றைய நிலை ஒரு கேள்வி குறி.
அதேபோல இஸ்ரேலில் இயேசு பிறப்பதற்கு முன் ஆப்ரஹாமின் கொள்ளுப் பேரன் மன்னர் சாலமோன் அவருடைய பெயரில் ஜெருசலேமில் சாலமோன் தேவாலயத்தை கட்டினார். இதன் பிறகு எரிக்கோவிலில் வாழ்ந்த பழங்குடியினர் மக்களிடம் ஏற்பட்ட போரில் இஸ்ரேல் இரண்டாக பிரிந்து ” ஜுதேயா” உருவாக நெபுகட் நெசேர்” இஸ்ரேலை கைப்பற்ற, ஆயிரக்கணக்கான யூதர்களைக் கொன்று குவித்தது மட்டுமின்றி சாலமோன் தேவாலயத்தை தரைமட்டமாக்கினான் என்பதே வேதனையானது.
இன்று பாரசீகத்தில் சொராஸ்டிரியம் அழிந்திருந்தாலும், இந்தியாவில் ஏழைகளே இல்லை என்று வாழும் சொராஸ்டிரியர்கள் குறி சொல்லுதல், பலியிடுதல், படையலிடுதல் போன்ற வழிபாட்டு குணங்களை கொண்ட சொராஸ்டிரிய மதத்தினர் தீயை கடவுளாக வணங்கி, தீ இவர்களுக்கு ஆற்றலை வழங்கியதாக நம்பி பாரசீகன் வாழ்ந்தான். பாரசீகன் பெரும்பாலான அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகள் இவர்களின் அடிமை நாடுகளாக இருந்தது மட்டுமின்றி உலகின் பெரிய ராணுவ வல்லரசு நாடாக திகழ்ந்தது. பாரசீகனின் பலத்தால் உலகின் செல்வங்கள் அனைத்தும் கொள்ளையடித்து அவர்களின் கஜானாக்களில் நிரப்பி வைத்தான் அன்று.
காலக்கொடுமை கஜினி முகம்மது கி.பி. 1000 முதல் 1027 வரையில் 17 முறை இந்தியாவைத் தாக்கிய பாரசீக மன்னரின் படையெடுப்புகளால் இந்தியாவில் கொட்டிக்கிடந்த வளங்கள் வெளியுலகிற்கு கசிய கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு பிறகு துருக்கிய-பாரசீக மன்னர் பாபரால் 1526 -ஆம் ஆண்டு டில்லி சுல்தானான, இப்ராஹிம் லோடி என்பவரை, முதலாவது பானிபட் போரில் தோற்கடித்து முகலாய அரசைத் தோற்றுவிக்க, லண்டனில் 1600-ம் ஆண்டு இந்தியவில் வணிகம் செய்து லாபம் ஈட்டும் நோக்கத்தில், பிரிட்டானிய வணிகர்களால் பிரிட்டனில் கிழக்கிந்திய கம்பெனி, நிறுவப்பட்டு 1611-ம் ஆண்டு ஆந்திரா மாநிலத்தின் மசூலிப்பட்டணக் கடற்கரையில் வணிகக் கூடம் திறக்கப்பட்டது.
அதன் பின்னர் கொஞ்சம், கொஞ்சமாக 1947 -ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட முஸ்லீம்களால் 100 ஆண்டுகளுக்கு, கிருஸ்துவர்கள் 300 ஆண்டுகளுக்கு கலாச்சாரம், மதம் , பண்பாடு என தென் கிழக்கு ஆசியா முழுவதும் தொடங்கி , இந்தோனேசியா வரை பரவி கிடக்க, பாலாறும் தேனாறும் ஓட, சொர்க்கம் என்று ரோமானியர்கள், கிரேக்கர்கள் மற்றும் சீனர்களும் எழுதி வைக்க, போரில் கூட தர்மத்தினை கடைபிடிக்க பாதுகாப்பிற்கு பஞ்சமில்லை என உலகிற்கே பறை சாற்ற, கிடைத்த செல்வத்தினை அரசன் கடைசிக்கட்ட குடிமக்கள் வரை பகிர்ந்து கொள்வது மட்டுமின்றி அரசனை சிறுவன் முதல் பெண்கள் வரை எதிர்த்து கேள்வி கேட்கும் உரிமைப் பெற்ற நாம் கிருஸ்துவர்கள் மற்றும் முஸ்லீம்களால் ஒட்டுமொத்த செல்வத்தையும் பறிகொடுத்து விட்டு, அவர்கள் விட்டு சென்ற எச்சமான மதத்தாலும், மொழியாலும் பிரிந்து கிடப்பது மட்டுமின்றி நம்மை நாமே கொள்ளை அடித்து கொண்டுள்ளோம்.
மக்களுக்கு சேவை செய்வது மகேசன் சேவை என சேவை செய்த மன்னர் ஆட்சிக்கு முடிவு கட்டி, மக்கள் ஆட்சி மலர்ந்ததோ அன்றே நாட்டின் ஒட்டுமொத்த ஜனநாயகத்தையும் மத்தியில் ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் கடந்த 75 ஆண்டுகளாக மக்களின் வறுமை மற்றும் அறியாமையை பயன்படுத்தி மக்களாட்சி என்ற பெயரில் நாட்டை கூறுபோட்டு இந்திய பெருமுதலாளிகள் மற்றும் அன்னிய முதலாளிகளின் கஜானாவை நிரப்பி வருகின்றனர்.
ஆனால் நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் மக்களாட்சியின் மகத்துவதை காற்றில் பறக்கவிட்டு அதிகாரத்தை கையில் எடுத்து மக்க ளை ஆட்டி படைக்கின்றனர். நாட்டின் இருண்டகாலம், நாட்டின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி 1971 நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தின் போது தேர்தல் வரைமுறையை மீறி முறைகேடுகளை செய்ததாக, இந்திரா காந்தியின் தவறுகளை காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராஜ் நாராயணன் அவர்கள் தொடுத்த வழக்கில் 1975-ல் உச்ச நீதிமன்றம் இந்திரா காந்தி 1971 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்று கூறி, இந்திரா காந்தி பிரதமர் பதவியில் இருந்து விலகி சிறை தண்டனை பெற வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
இந்திரா காந்தி தனது மீதான தண்டனைக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பை அமலாவதைத் தடுக்க 1975 -ம் ஆண்டு நெருக்கடி நிலையை இந்தியா முழுவதும் வரைமுறையற்ற அதிகாரத்தால் அமல்படுத்தினார். இந்த நெருக்கடி நிலையை வடக்கே இதனை கடுமையாக எதிர்த்து போராடிய தலைவர்களுள் ஒருவரான ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையில் நிறுவன காங்கிரஸ், பாரதிய லோக் தளம், பாரதிய ஜனசங்கம் போன்ற கட்சிகள் இணைந்து ஜனதா கட்சி என்று பெயர் மாற்றி நெருக்கடி நிலையை எதிர்த்து போராட, இந்தியாவில் உள்ள பல மாநிலக்கட்சி தலைவர்களும் இணைந்து நெருக்கடி நிலையை அமல்படுத்திய இந்திரா காந்தியை எதிர்த்து போராடினர்.
இதனால் வெகுண்ட இந்திரா காந்தி ஜெயப் பிரகாஷ் நாராயண், ராஜ் நாராயண், மொரார்ஜி தேசாய், சரண் சிங், ஜிவத்ராம் கிருபாலனி, வாஜ்பாய், எல்.கே.அத்வானி மற்றும் பொதுவுடமைக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோரும் கைது செய்யபட்டு சிறையில் அடைத்தார்.
அப்போது தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையில், தி.மு.க ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அன்றும், இன்றும் இந்தியாவிலே தமிழ்நாட்டில் மட்டும் தான் ஜனநாயகம் என்கிற சுதந்திரத்தை சுவாசிக்க முடிகிறது. எனவே எமர்ஜென்சி என்ற அடக்குமுறைக்கு அஞ்சாத சிங்கமாக மாநில உரிமை காக்க, சென்னை கடற்கரையிலே லட்சக்கணக்கான மக்களை ஒன்று திரட்டி, ஒரு மாபெரும் கூட்டத்தைக் கூட்டி அந்தக் கூட்டத்திலே தி.மு.க சார்பில் இந்திராகாந்தி கொண்டு வந்த நெருக்கடி நிலையை, அவசர நிலையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமல்ல, சிறையில் அடைத்து வைத் திருக்கிற தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என்ற தீர்மானம் கொண்டு வந்தார்.
இதன்தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சி கவிழ்க்கப்பட்டு, காவல்துறை அதிகாரிகள் கலைஞரின் இல்லத்திற்கு வந்தார்கள். “என்ன விசேஷம்? நான் கைதாக வேண்டுமா?” எனக் கலைஞர் கேட்க, “இல்லை.. உங்களை இல்லை” என ஒரு அதிகாரி சொல்ல,“யாரை கைது செய்ய வேண்டும்? என்று கலைஞர் அதிர்ச்சியுடன் கேட்க, “உங்கள் மகன் ஸ்டாலினை’‘என்று அதிகாரி கூற, “அவன் ஊரில் இல்லையே.. நாளை மாலை வருவான்“என்றவரிடம், “வீட்டில் இருக்கிறாரா? என்று சர்ச் செய்து பார்க்கும் படி உத்திரவு’‘வீட்டை சல்லடைப்போட்டு சோதனை செய்தனர்.
மறுநாள் பொழுது விடிந்தது மதுராந்தகத்தில் ‘முரசே முழங்கு!’ பிரசார நாடகத்தில் பங்கேற்க சென்ற மு.க.ஸ்டாலின் வீடு திரும்பினார். துணிந்தவனுக்கு தூக்குமேடை பஞ்சுமெத்தை என்பதை வாழ்க்கைக்கான வாசகமாக கடைபிடித்த கலைஞர், வீடு திரும்பிய மு.க.ஸ்டாலினை சிறைக்கோட்ட பயணத்திற்கு தயாராகும் படி கூறினார். புலிக்கு பிறந்தது பூனையாகுமா? இடர் எதுவாக இருந்தாலும் இனத்திற்காக எதிர்கொள்ள, அடக்குமுறைக்கு முகம் கொடுக்க மு.க. ஸ்டாலின் தயாரானார்.
நீ கொலை பண்ணிட்டோ, கொள்ளையடிச்சுட்டோ சிறைக்குப் போகல.. இந்த சிறை வாசம் உன் அரசியல் வாழ்க்கைக்கு ஒரு படிக்கட்டா அமையும்’னு தட்டிக் கொடுத்து, இறுகக் கட்டிப் பிடித்து முத்தமும் கொடுத்து கலைஞர் அவர்கள் மு.க. ஸ்டாலின் அவர்களை சிறைக்கு அனுப்ப, பக்கத்திலேயே இருந்த தி.மு.க முன்னணித் தலைவர்கள் பேராசிரியர், நாவலர், ப.உ.சண்முகம், மன்னை நாராயணசாமி, அன்பில் தர்மலிங்கம் என தலைவர்கள் கட்டிப் பிடித்து வாழ்த்தி அனுப்பி வைத்தார்கள்.
வீட்டுக்கு வெளியே கட்சியோட இளைஞர் அணியினர், மகளிர் அணிப் பெண்கள் எல்லோரிடமிருந்து விடைபெற்று போலீஸ் ஜீப்ல வந்து மு.க. ஸ்டாலின் அவர்கள் உட்கார்ந்தார். பொதுவாக மாலை ஆறு மணிக்கு மேல சிறைக்குக் கைதிகளை கொண்டு போக மாட்டாங்க. ஆனா மு.க. ஸ்டாலின் அவர்களை கமிஷனர் ஆபீஸ்ல இருந்து நள்ளிரவு 12 மணிக்கு மேல் மத்திய சிறைச்சாலைக்குக் கொண்டு போனார்கள். நள்ளிரவு நேரம்.. சென்னை மத்திய சிறைச்சாலையோட பிரம்மாண்ட கேட்டின் பக்கவாட்டுக் கதவு வழியா கருகருக்கும் இருளில் போனார்.
‘ஜெயிலுக்குள் நடந்து போகப் போக கிட்டத்தட்ட சிந்தாதிரிப்பேட்டை சிறை முடியும் கடைசி பிளாக் வரை கூட்டிப் போக, அந்தக் கடைசி பிளாக்கின் முதல் அறைக்கதவு அருகில் வந்ததுமே கதவின் பெரிய பூட்டுகளை சாவிகள் கொண்டு திறந்தார்கள். ‘உள்ள போடா!’ என்று மு.க. ஸ்டாலினை தள்ளிவிட தன் காலை யார் மிதித்தார்கள். ‘யாருப்பா அது?’… என்று வீரமணி கேட்டார். ‘அண்ணே!..நான்தான்..’ என்று மு.க. ஸ்டாலின் சொன்னார்.
‘தம்பி நீயா?’ என்று அதிர்ச்சியுடன் வீரமணி கேட்டார். அறையோ 8-க்கு 8 அடி தான் இருக்கும், ஆனால் நீல.நாராயணன், வி.எஸ்.கோவிந்தராஜன் என மு.க.ஸ்டாலினுடன் சேர்த்து மொத்தம் 9 பேர்.. 9 பேரை ஆடு மாடுகளை அடைத்து வைப்பது போல் வைத்திருந்தார்கள். ஒருவர் மேல்தான் இன்னொருவர் மூச்சுவிட வேண்டும்… அறையின் ஓரத்தில் ராத்திரியில் தவிச்சா தண்ணி மோந்து குடிக்க.. ஒரு தண்ணிப்பானை.. இன்னொன்னு ஒன்பது பேருக்கும் ராத்திரி முழுக்க யூரின் போக யூரின் பானை.. இன்னொரு பக்கம் தொழுநோயாளிகளின் ரத்தம் மற்றும் சீழைத்தை துடைத்து எறிந்த பஞ்சுகள்!
அடுத்த நாள் காலை அடித்துப் பிடித்து கியூவில் நின்றும் மு.க. ஸ்டாலின் அந்தக் கூட்டத்தில் குளிக்க முயற்சித்தார். மேலும் காலை சாப்பாட்டிற்குக் கூழ் தந்தபோது வாயில் வைக்கவே முடியாத அளவிற்கு குடிக்கவே முடியவில்லை. பசிக்கும் உணவு தேவையாக இருக்க மு.க. ஸ்டாலின் நாக்கு ஓரளவு பழகிக்கொண்டது.
சிறைக்கு சென்ற இரண்டாம் நாள் இரவு எட்டரை மணி வாக்கில்… பாதிப்பேர் தூங்கிய நிலையிலும், மீதிப்பேர் பேசிக் கொண்டிருக்க… அப்போ ‘ஐயா! ஆ! அம்மா!..’ என்று அலறும் சத்தம்! கடைசி செல்லான 10-வது செல்லில் ஆரம்பித்து வரிசையாக ஒவ்வொரு செல்லில் இருந்தவர்களை வெளி வராந்தாவில் போட்டு மற்றவர்கள் பார்க்க அடித்துத் துவைத்துக் கொண்டிருந்தார்கள்.
வரிசையாக ஒவ்வொரு அறையிலும் இருப்பவர்களை வெளியே மற்றவர்கள் பார்க்க இழுத்துப் போட்டு அடித்து மிதித்தார்கள். இதோ எட்டாவது செல் வந்தாகி விட்டது. அடுத்து ஒன்பதாவது செல். இந்த இரவில் மு.க. ஸ்டாலின் மூன்றாவது செல்லுக்கு மாற்ற, அன்றிரவு ஆற்காட்டார், சிட்டிபாபு, நீல.நாராயணன், வி.எஸ்.கோவிந்தன் என ஐந்து பேர் இருக்க… ஐந்தாவது செல்…நாலாவது செல் என ஒவ்வொன்றாக முடிந்து அடுத்து மூன்றாவது செல்லின் இரும்புக் கதவு திறந்தது.
“வாங்கடா வெளீல…”என்று பெருங்குரல் வர, எதையும் வேகத்துடன் எதிர் கொள்ள சிட்டி பாபு முன்னால் செல்ல“வாடா, நீ தான் சிட்டிபாபுவா?” என்று அவர் கன்னத்தில் இறங்க… தொடர்ந்து இறங்கின லத்தி அடிகள்.. அடுத்து, “நீதாண் வீராசாமியாடா?” என்று அடித்த அடிகளில் அவர் நெடுமரம்போல சாய்ந்து விழ…“வாடா வா! நீதான் ஸ்டாலினா? நீதான் கருணாநிதியோட பையனா?” என்று கண்களில் கொலை வெறியுடன் கேட்டபடியே ஒருவன் கன்னத்தில் இடி மாதிரி ஒரு அறைவிட, அடுத்தது லத்தியால் முழங்கையில் விழுந்தது முதல் அடி.. ‘ஐயோ..’ என்று மு.க. ஸ்டாலின் சுருண்டு மயக்கமாகி விழுந்த மு.க. ஸ்டாலின் மேல் அடிகள் எதுவும் விழக்கூடாது என்று குறுக்கே படுத்து அந்த அடிகளை முழுசாகத் தன்மேல் சிட்டி பாபு தாங்கிக் கொண்டது மட்டுமின்றி மு.க. ஸ்டாலின் முகத்தை நசுக்க வந்த பூட்ஸ் காலைத் தன் உடம்பில் ஏந்தினார்.
அப்புறம் அங்கே நினைவற்று விழுந்து கிடந்த சிட்டிபாபு அவர்களை தண்ணீர் தெளித்து எழுப்பி விட எல்லோருக்குமே பிரமை பிடித்தது போல இருந்தனர். சிறைவிதிகளை எல்லாம் தூக்கி குப்பையில் கடாசி விட்டு இப்படி தன்னிச்சையாக நடக்கும் இந்த சிறையில் இனி அடுத்து என்ன நடக்குமோ என்று ஒவ்வொரு நிமிடமும் திகில் நிமிடங்களாகவே அனைவருக்கும் இருந்தது.
காலைக்கடன் முடிக்கக்கூட எழ முடியாமல் அடுத்த நாள் திணற சிறைக்குள் இருக்கும் மருத்துவமனைக்கு வரச்சொல்லி மருந்து போட்டு விட்டார்கள். இதுபோல் அரசியல் கைதிகளை காட்டுமிராண்டித்தனமாக அடித்ததுப் பற்றி பலரும் வெளியே பேச ஆரம்பிக்க அது பெரிய பிரச்சனையானது அப்போது.. இது குறித்து தி.மு.க. ஒரு கேஸ் போட்ட… அப்புறம்… சிறையில் என்ன நடக்கிறது என் று விசாரிக்க டெல்லியிலிருந்து சிறைத்துறை உயரதிகாரிகள் சென்ரல் ஜெயிலுக்கு விசாரிக்க வந்தார்கள்.
‘எங்களுக்கு சிறை விதிகளின்படி எந்த அடிப்படை வசதியும் தருவதில்லை.. குறிப்பாக 24 மணி நேரமும் செல்லில் ஆடுமாடுகளைப் போல அடைத்து வைப்பதால் எங்களில் பலர் டாய்லெட் கூடப் போக முடியவில்லை. பல் தேய்க்க முடியவில்லை.. குளிக்க முடியவில்லை..’ என்று எதற்கும் பயப்படாமல் துணிந்த முரசொலி மாறன் அவர்கள் இங்கு நடந்த அராஜகத்தை உயரதிகாரிகளுக்கு விளக்கிச் சொன்னார்.
அச்சமயம் மற்ற தமிழக சிறைகளில் வேறெங்கும் நடக்காத டார்ச்சர்கள் சென்னை சிறையில் நடந்தன. சிறையிலிருந்த மிசா சிறைக் கைதிகள் “தி.மு.க.விலிருந்து விலகி விட்டோம், எங்களுக்கும் தி.மு.க.விற்கும் சம்மந்தம் இல்லை. என்று எழுதிக் கொடுக்க வேண்டும், கையெழுத்துப் போட வேண்டும்” என்று மிரட்டினார்கள். ஆனால் அந்த மிரட்டல், அச்சுறுத்தலுக்கு எல்லாம் அஞ்சுவார்களா கலைஞரின் உடன்பிறப்புகள்!
எமர்ஜென்சிக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை பெருமளவு பாதிக்க, நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சோசலிசக் கொள்கைகளுக்கு மாறாக, சமூகப் பழமைவாத, வணிக சார்பு மற்றும் இலவச நிறுவன சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக இருந்தவரும், சிறுபான்மையினரின் சுதந்திரத்தை ஆதரித்த முதல் அரசியல் தலைவர் மொரார்ஜி தேசாய், 1977ல் சர்ச்சைக்குரிய எமர்ஜென்சி நீக்கப்பட்ட பிறகு, இந்தியா அரசியல் கட்சிகள் ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையிலான பிரபலமான ஊழல் எதிர்ப்பு இயக்கம் மற்றும் ஜனதா-அலை வட இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை முழுமையாக திசைதிருப்ப, 1977 தேர்தலில் இந்திரா காந்தி தனது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியை தழுவ, சுதந்திரத்திற்கு பின் 30 வருடங்களாக நாட்டை ஆண்டு வந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து மொரார்ஜி தேசாய் இந்தியாவின் சாதனை படைத்தார்.
1980-ம் ஆண்டு பாரதிய ஜன சங்கத்தின் தலைவர்களும் தொண்டர்களும் இணைந்து, அடல் பிகாரி வாஜ்பாயைத் தலைவராகக் கொண்ட பாரதிய ஜனதா கட்சி என்ற புதிய கட்சியை உருவாக்கினர்.
மேலும் எமர்ஜென்சிக்கு முன் ஆலவிழுதாக இருந்த திமுக இன்று பறந்து விரிந்து ஆலமரமாக மாற, தீண்டாமை கொடுமைகள் பெரியாரை ஒரு சமூகப் போராளியாக மாற்ற, தமிழினத்தின் மீது விழுந்த அடிகள் அண்ணாவை பேரறிஞராக மாற்ற, தமிழைக் காக்க கருணாநிதியை கலைஞராக மாற்ற, எமர்ஜென்சிக்கு எதிரான யுத்தத்தில் துன்பங்களைத் துச்செமெனக் கருதுகின்ற மனப்போக்கு, பொறுமை, சகிப்புத்தன்மை ஆகிய நற்குணங்கள் கொண்ட தன்னிகரில்லா தலைவனாக மு.க.ஸ்டாலின் திமுகவை வழிநடத்திட மாற்றியது. அதன்பின்னர் நாட்டில் ஆட்சிகளும், காட்சிகளும் மாறினாலும் மத்தியில் ஆளுவோர், மாநில கட்சிகளை தங்களின் கட்டுக்குள் வைத்துக்கொள்ள தங்களின் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அடக்குமுறையை பயன்படுத்தி கட்டுப்படுத்த முயற்சி செய்கின்றார்கள்.
ஆனால் அன்றே மிசாவிற்கே மிரளாத திமுக “ரெய்டு பயமுறுத்தலுக்கு எல்லாம் என்றைக்குமே மிரளவா போகிறது… கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாளில் அவருடைய உடன்பிறப்புகளான நாங்க பனங்காட்டு நரி, இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்சமாட்டோம் என்று நிமிர்ந்து நின்று எதிர்கொள்வோம்.