ஒரு பாட்டு படுங்க அண்ணே..! பாட்டுப் பாடி வாக்கு சேகரிக்கும் சீமான்..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், வேட்பாளர்கள் வாக்கு வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் 3-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ளது. ற்கெனவே 2 கட்டங்களாக பிரச்சாரம் மேற்கொண்ட சீமானின் 3-ம் கட்ட பிரச்சாரம் கடந்த 11-ம் தேதி நாமக்கல் மக்களவைத் தொகுதியில் தொடங்கியது. தொடர்ந்து, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், பிரச்சாரத்தின்போது தொண்டர்களை உற்சாக மூட்டுவதற்காக, தேர்தல் சம்பந்தமான வரிகளுடன் கூடிய பாடல்களை பாடுவதையும் சீமான் வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் ஒவ்வொரு பிரச்சாரத்தின் நடுவிலும், அங்கு கூடியிருப்போர் சீமானை பாடச் சொல்லிக் கேட்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.