சஞ்சய் ராவத்: RSS அடுத்த பிரதமரை மகாராஷ்டிராவிலிருந்து தேர்ந்தெடுக்கும்..!”

பிரதமர் நரேந்திர மோடி 10-11 ஆண்டுகளில் ஒருபோதும் RSS தலைமையகத்திற்குச் சென்றதில்லை. தலைமை மாற்றத்தை RSS விரும்புகிறது. ஆகையால், பிரதமர் மோடி தனது பதவியில் இருந்து வெளியேறுகிறார் என உத்தவ் பிரிவு சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா தலைநகரம் மும்பையில் செய்தியாளர்களின் கேள்விக்கு சஞ்சய் ராவத் பதிலளித்தார். அப்போது, “பிரதமர் நரேந்திர மோடி RSS தலைமையகம் வந்ததற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. வழக்கமாக, RSS அமைப்பில் என்ன விவாதங்கள் நடந்தாலும், அது மூடிய கதவுகளுக்குப் பின்னால்தான் நடக்கும். தற்போது சில அறிகுறிகள் தென்படுகின்றன.

பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே RSS தலைமையகத்துக்குச் சென்றார். எனக்குத் தெரிந்தவரை, அவர் 10-11 ஆண்டுகளில் ஒருபோதும் RSS தலைமையகத்திற்குச் சென்றதில்லை. தலைமை மாற்றத்தை RSS விரும்புகிறது. பிரதமர் மோடி தனது பதவியில் இருந்து வெளியேறுகிறார்” என சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

ராஜ் தாக்கரே அறிவுரை: தமிழர்களை பார்த்து மராட்டியர்கள் திருந்துங்கள்..!

தமிழ்நாட்டைப் பாருங்கள். தமிழர்கள், இந்திக்கு வேண்டாம் என்று தைரியமாக சொல்கிறார்கள். நீங்கள் மகாராஷ்டிராவில் அனைவரும் மராத்திக்காக உறுதியாக நிற்க வேண்டும் என நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலிள்ள சிவாஜி பூங்காவில் நேற்று நடந்த பேரணியில் ராஜ் தாக்கரே உரையாற்றினார். அப்போது, “எங்கள் மும்பையில், அவர்கள் மராத்தி பேச முடியாது என்று சொல்கிறார்கள்.  அவர்கள் முகத்தில் அறையப்படுவார்கள். நாட்டைப் பற்றியும் மற்ற அனைத்தையும் பற்றியும் என்னிடம் சொல்லாதீர்கள். ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சொந்த மொழி உண்டு, அது மதிக்கப்பட வேண்டும். மும்பையில், மராத்தி மதிக்கப்பட வேண்டும்.

மராத்தி பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த இன்று முதல் ஒவ்வொரு வங்கி மற்றும் நிறுவனத்தையும் கண்காணிக்க கட்சித் தொண்டர்களை அறிவுறுத்துகிறேன். நீங்கள் அனைவரும் மராத்திக்காக உறுதியாக நிற்க வேண்டும். தமிழ்நாட்டைப் பாருங்கள். தமிழர்கள், இந்திக்கு வேண்டாம் என்று தைரியமாக சொல்கிறார்கள், கேரளாவும் தமிழர்களைப் போலவே இந்திக்கு வேண்டாம் தெரிவிகின்றனர். மேலும், நீங்கள் மராத்தியர்களாக ஒன்று சேர்வதைத் தடுக்க சில அரசியல் தலைவர்கள் மகாராஷ்டிராவில் நிலவும் ஜாதி மற்றும் மத அடிப்படையிலான பிரிவினை செய்கிறார்கள். முதலில் வாட்ஸ்அப்பில் வரலாற்றைப் படிப்பதையும், சாதிக் கண்ணோட்டத்தில் படிப்பதையும் நிறுத்துமாறு மகாராஷ்டிர இளைஞர்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இது உங்களை அரசியல் ரீதியாகப் பிரிக்கவும், மராத்தியர்களாக ஒன்று சேர்வதைத் தடுக்கவும் செய்யப்படுகிறது. இது எங்கள் கவனத்தைத் திசை திருப்புகிறது, மேலும் அதானிக்கு நிலங்களை வழங்குவது போன்ற பணிகள் அமைதியாக செய்யப்படுகின்றன” என ராஜ் தாக்கரே எச்சரித்தார். அதைத்தொடர்ந்து “மராட்டியர்களால் தோற்கடிக்கப்பட்டவர்களின் அதாவது அவுரங்கசீப் கட்டமைப்புகளை நாம் அழிக்கக்கூடாது. நாம் அவர்களை நல்லடக்கம் செய்தோம் என்பதை உலகம் அறிய வேண்டும். ஒரு படம் பார்த்துவிட்டு விழித்துக்கொள்ளும் இந்துவால் எந்தப் பயனும் இல்லை. வரலாற்றை வாட்ஸ்அப் மூலம் கற்றுக்கொள்ள முடியாது. அதற்கு நீங்கள் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என ராஜ் தாக்கரே தெரிவித்தார்.

சிம் கார்டு தவறாக பயன்படுத்தியதாக மிரட்டி ரூ.50 லட்சம் பறிப்பு..! தொடர் மிரட்டலில் தற்கொலை வயதான தம்பதியினர்..!

சிம் கார்டு தவறாக பயன்படுத்தியதாக மிரட்டி ரூ.50 லட்சம் பறித்தது மட்டுமின்றி மீண்டும் பணம் கேட்டு தொடர் மிரட்டல் விடுததால் மன உளைச்சலுக்கு ஆளான வயதான தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக சைபர் மோசடி நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சைபர் மோசடிகளில் பெண்கள் மற்றும் முதியவர்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படுகின்றனர். மேலும் சைபர் மோசடிகளில் பாதிக்கப்படும் இவர்கள் சைபர் மோசடி கும்பலின் மிரட்டல் தாங்கமுடியாமல் இறுதியில் தற்கொலை ஒன்றே இதற்கு தீர்வு என்று விபரீத முடிவுகளை எடுத்து அவர்களின் உயிரை மாய்த்து கொள்கின்றனர்.

ஆன்லைனில் யாரையும் கைது செய்ய முடியாது. எனவே நீங்கள் கைது செய்யப்பட இருப்பதாக யாராவது தொலைபேசி மூலம் கூறினால் தயவு செய்து பீதி அடைய வேண்டாம் என சைபர் கிரைம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிலையில், கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டத்தில் டியோக்ஜெரோன் சாந்தன் நாசரேத் மற்றும் அவரது மனைவி ஃபிளேவியானா ஆகியோர் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.

இந்நிலையில், அவர்களது வீட்டில் இருவரும் உயிரிழந்து கிடந்ததை கண்டு அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போலீசார் சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது டியோக்ஜெரோன் தனது கைப்பட எழுதிய தற்கொலை கடிதத்தை காவல்துறை கண்டுபிடித்தனர்.

அந்த கடிதத்தில், “இப்போது எனக்கு 82 வயது, என் மனைவிக்கு 79 வயது. எங்களை பார்த்துகொள்ள யாரும் தேவையில்லை. சுமித் பிர்ரா மற்றும் அனில் யாதவ் ஆகிய இருவர் நபர்கள் எங்களை தொடர்பு கொண்டு அவரது சிம் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறி எங்களது சொத்து மற்றும் நிதி விவரங்களை கோரியுள்ளனர். இந்த விவகாரத்தில் இருந்து கைது செய்யாமலிருக்க அதிக பணம் செலவாகும் என மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த மிரட்டலுக்கு பயந்து டியோக்ஜெரோன் சாந்தன் நாசரேத் ரூ.50 லட்சத்திற்கும் மேல் பணத்தை கொடுத்துள்ளார்.

சுமித் பிர்ரா மற்றும் அனில் யாதவ் ஆகியோர் பணம் பெற்று கொண்டு கூடுதலாக பணம் கேட்டு டியோக்ஜெரோன் சாந்தன் நாசரேத் தொந்தரவு செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல் இவர்களின் தொந்தரவு தாங்க முடியவில்லை. ஆகையால், யாருடைய தயவிலும் நாங்கள் வாழ விரும்பவில்லை,

அதனால் இந்த முடிவை எடுத்துள்ளோம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு டியோக்ஜெரோன் சாந்தன் நாசரேத் மற்றும் அவரது மனைவி ஃபிளேவியானா இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என காவல்துறை தரப்பில் தெரிவித்தனர். தற்கொலை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சுமித் பிர்ரா மற்றும் அனில் யாதவ் ஆகியோர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் சைபர் மோசடி பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குணால் கம்ராவுக்கு இடைக்கால முன்ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம்

குணால் கம்ராவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால முன்ஜாமின் வழங்கியுள்ளது. மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்யும் வகையில் பேசிய நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். ஸ்டாண்ட் – அப் காமெடியனான நடிகர் குணால் கம்ரா, சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

அதில், சிவ சேனாவை உடைத்து, MLA -க்கள் சிலரை தன் பக்கம் இழுத்து பிறகு பாஜக கூட்டணியில் இணைந்து ஒரு துரோகி ஆதாயம் அடைந்தார் என விமர்சித்து இருந்தார். மேலும் அவர், சிவ சேனா உருவாக பாஜகதான் காரணம். சிவ சேனா இரண்டாக உடையவும் பாஜகதான் காரணம் என்று அந்த விடூயோவில் இருந்தது. இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் புயல் வீசிக் கொண்டிருக்கிறது.

ஆனால், அவரின் கருத்துக்களால் ஷிண்டே தொண்டர்கள் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்று குணால் காமிராவின் ஸ்டூடியோவை அடித்து உடைத்தனர். போதாக்குறைக்கு சேதமடைந்த ஸ்டுடியோவை மாநகராட்சி அதிகாரிகள் இடித்துத் தள்ளினர். மகாராஷ்டிரா சட்டசபையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. இதனிடையே துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கேலி செய்ததற்காக, குணால் கம்ரா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவுறுத்தி இருந்தார்.

மேலும் குணால் கம்ராவின் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி குணால் கம்ராவுக்கு தொடர் மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் குணால் கம்ரா மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறியது மட்டுமின்றி கொலை மிரட்டல் விடுத்த சிவசேனா கட்சியினருக்கு நான் தமிழ்நாட்டில் தான் உள்ளேன். முடிந்து வாருங்கள் என்று சவால் விடுத்து இருந்தார்.

மேலும் மும்பை கர் காவல்நிலையம் குணால் கம்ராவை விசாரணைக்கு அழைத்தது. ஆனால், தன்மீதான வழக்கு விசாரணைக்கு ஆஜாராக 1 வார காலம் குணால் கம்ரா அவகாசம் கேட்டு இருந்தார். ஒருவேளை தான் கைது செய்யப்படலாம் என அஞ்சி, சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். ஆனால், மகாராஷ்டிராவில் நடைபெற்ற சம்பவத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றததில் முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்ய காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு, குணால் கம்ரா விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் மும்பையில் வசித்து வருவதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் குணால் கம்ராவுக்கு இடைக்கால முன்ஜாமின் வழங்கியுள்ளது. மேலும், குணால் கம்ரா மனு குறித்து பதில் அளிக்க மும்பை கர் காவல்நிலையத்திற்கு உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. மேலும் விழுப்புரம் மாவட்டம் வானூரிலுள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமின் பெற்றுக்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“துரோகி ஏக்நாத் ஷிண்டே..” இணையத்தில் தீயாகபரவும் வீடியோ..!

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்யும் வகையில் பேசிய நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். ஸ்டாண்ட் – அப் காமெடியனான நடிகர் குணால் கம்ரா, சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், சிவ சேனாவை உடைத்து, MLA -க்கள் சிலரை தன் பக்கம் இழுத்து பிறகு பாஜக கூட்டணியில் இணைந்து ஒரு துரோகி ஆதாயம் அடைந்தார் என விமர்சித்து இருந்தார். மேலும் அவர், சிவ சேனா உருவாக பாஜகதான் காரணம். சிவ சேனா இரண்டாக உடையவும் பாஜகதான் காரணம் என்று அந்த விடூயோவில் இருந்தது. இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் புயல் வீசிக் கொண்டிருக்கிறது.

ஆனால் அவரின் கருத்துக்களால் ஷிண்டே தொண்டர்கள் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்று குணால் காமிராவின் ஸ்டூடியோவை அடித்து உடைத்தனர். போதாக்குறைக்கு சேதமடைந்த ஸ்டுடியோவை மாநகராட்சி அதிகாரிகள் இடித்துத் தள்ளினர். மேலும் குணால் கம்ராவுக்கு தொடர் மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா சட்டசபையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. இதனிடையே துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கேலி செய்ததற்காக, குணால் கம்ரா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், தன்மீதான வழக்கு விசாரணைக்கு ஆஜாராக 1 வார காலம் குணால் கம்ரா அவகாசம் கேட்டுள்ளார். காவல்துறையுடன் ஒத்துழைக்க தயார் என்றும் ஆனால் தனது கருத்துக்கு வருத்தப்படவில்லை, அதற்காக மன்னிப்பும் கேட்கப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தற்போது ஷிண்டேவுடன் கூட்டணியிலுள்ள மகா. துணை முதலமைச்சர் அஜித் பவாரே ஏக்நாத் ஷிண்டேவை ஒரு காலத்தில் துரோகி என்று கூறிவந்ததையும் குணால் கம்ரா சுட்டிக்காட்டி உள்ளார். அதோடு நிற்காமல் பாஜகவை சீண்டும் வகையில் குணால் கம்ரா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது குணால் கம்ரா நிகழ்ச்சி நடந்த இடத்தை சிவசனோ கட்சியினர் அடித்து சேதப்படுத்தியது தொடர்பான வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அதன் பின்னணியில் இந்தி மொழியில் Hum Konge Kangaal என்ற பாடலை பாடி பாஜக கூட்டணி ஆட்சியை விமர்சனம் செய்துள்ளார். இது மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இது பாஜக, சிவசேனா மற்றும் தேசிய வாத காங்கிரஸ் கட்சியினரை கொதிப்படைய வைத்துள்ளது.

உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கணவனின் கழுத்தை அறுத்து கொன்ற மனைவி மற்றும் மாமியார்..!

கர்நாடகாவில் மாமியாருடன் சேர்ந்து கணவரின் கழுத்தை அறுத்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியாயி ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு நகரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் லோக்நாத் சிங் பெங்களூரிலுள்ள சிக்கபனாவரா பகுதியில் இருந்த ஒரு காரில் சடலம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இந்த கொலை தொடர்பாக லோக்நாத் சிங்கின் மனைவி மற்றும் மாமியாரை காவல்துறை கைது செய்தனர்.

லோக்நாத் சிங்கின் மனைவி, மாமியார் ஆகியோர் அவரது உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து மயங்கிய பிறகு அவரது கழுத்தை அறுத்து கொலை செய்ததாக காவல்துறை தெரிவித்தனர். திருமணத்தை மீறிய உறவு, சட்டவிரோத வணிக நடவடிக்கைகளில் லோக்நாத் சிங் ஈடுபட்டு வந்ததால் அவரை கொன்றதாக மனைவி வாக்குமூலம் கொடுத்துள்ளதாக காவல்துறை தெரிவித்தனர்.

குணால் கம்ரா சவால்: நான் தமிழ்நாட்டில் தான் உள்ளேன்… முடிந்து வாருங்கள்..!

நான் தமிழ்நாட்டில் தான் உள்ளேன்…! முடிந்து வாருங்கள் என்று சிவசேனா கட்சியினருக்கு குணால் கம்ரா சவால் விடுத்துள்ளார். மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்யும் வகையில் பேசிய நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். ஸ்டாண்ட் – அப் காமெடியனான நடிகர் குணால் கம்ரா, சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

அதில், சிவ சேனாவை உடைத்து, MLA -க்கள் சிலரை தன் பக்கம் இழுத்து பிறகு பாஜக கூட்டணியில் இணைந்து ஒரு துரோகி ஆதாயம் அடைந்தார் என விமர்சித்து இருந்தார். மேலும் அவர், சிவ சேனா உருவாக பாஜகதான் காரணம். சிவ சேனா இரண்டாக உடையவும் பாஜகதான் காரணம் என்று அந்த விடூயோவில் இருந்தது. இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் புயல் வீசிக் கொண்டிருக்கிறது.

ஆனால், அவரின் கருத்துக்களால் ஷிண்டே தொண்டர்கள் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்று குணால் காமிராவின் ஸ்டூடியோவை அடித்து உடைத்தனர். போதாக்குறைக்கு சேதமடைந்த ஸ்டுடியோவை மாநகராட்சி அதிகாரிகள் இடித்துத் தள்ளினர். மகாராஷ்டிரா சட்டசபையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. இதனிடையே துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கேலி செய்ததற்காக, குணால் கம்ரா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவுறுத்தி இருந்தார்.

மேலும் குணால் கம்ராவின் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி குணால் கம்ராவுக்கு தொடர் மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் குணால் கம்ரா மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறியது மட்டுமின்றி கொலை மிரட்டல் விடுத்த சிவசேனா கட்சியினருக்கு நான் தமிழ்நாட்டில் தான் உள்ளேன். முடிந்து வாருங்கள் என்று சவால் விடுத்துள்ளார்.

இப்படியான சூழலில் தான் இன்று மீண்டும் பாஜகவை சீண்டும் வகையில் குணால் கம்ரா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது குணால் கம்ரா நிகழ்ச்சி நடந்த இடத்தை சிவசனோ கட்சியினர் அடித்து சேதப்படுத்தியது தொடர்பான வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அதன் பின்னணியில் இந்தி மொழியில் Hum Konge Kangaal என்ற பாடலை பாடி பாஜக கூட்டணி ஆட்சியை விமர்சனம் செய்துள்ளார். இது மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இது பாஜக, சிவசேனா மற்றும் தேசிய வாத காங்கிரஸ் கட்சியினரை கொதிப்படைய வைத்துள்ளது.

குணால் கம்ரா: முதலமைச்சரே சொன்னாலும் மன்னிப்பு கேட்க முடியாது..!

மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் வேண்டுகோள் விடுத்திருந்தாலும் துணைமுதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கேலி செய்து பாடியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என குணால் கம்ரா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஸ்டாண்ட் – அப் காமெடியனான நடிகர் குணால் கம்ரா, சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், சிவ சேனாவை உடைத்து, MLA -க்கள் சிலரை தன் பக்கம் இழுத்து பிறகு பாஜக கூட்டணியில் இணைந்து ஒரு துரோகி ஆதாயம் அடைந்தார் என விமர்சித்து இருந்தார். மேலும் அவர், சிவ சேனா உருவாக பாஜகதான் காரணம். சிவ சேனா இரண்டாக உடையவும் பாஜகதான் காரணம் என்று அந்த விடூயோவில் இருந்தது. இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் புயல் வீசிக் கொண்டிருக்கிறது.

நடிகர் குணால் கம்ராவுக்கு எதிராக சிவசேனா தொண்டர்கள் வன்முறையில் இறங்கினர். குணால் கம்ராவின் நிகழ்ச்சி நடைபெற்ற ஸ்டுடியோவை சிவசேனா தொண்டர்கள் சூறையாடினர். மகாராஷ்டிரா சட்டசபையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. குணால் கம்ரா மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கேலி செய்ததற்காக, குணால் கம்ரா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், குணால் கம்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் பட்னாவிஸ் கேட்டுக் கொண்டாலும் கூட ஏக்நாத் ஷிண்டேவை கேலி செய்து பாடியதற்காக மன்னிப்பு கேட்கவே முடியாது; எந்த வன்முறை கும்பலுக்கும் பயப்படமாட்டேன். நீங்கள் இடிக்க விரும்புகிற இடத்தை சொல்லுங்கள். அங்கே மீண்டும் நிகழ்ச்சி நடத்தி காட்டுகிறேன். எனக்கு எதிராக வன்முறைதான் சரி என களமிறங்கியவர்கள் மீது சட்டம் பாயுமா? என் ஸ்டுடியோவை சூறையாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என குணால் கம்ரா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆதித்ய தாக்கரே: யார் துரோகி மற்றும் திருடன் என்பது முழு நாடும், முழு உலகமும் அறிந்ததே..!

யார் துரோகி மற்றும் திருடன் என்பது முழு நாடும், முழு உலகமும் அறிந்ததே என ஆதித்ய தாக்கரே தெரிவித்தார். ஸ்டாண்ட் – அப் காமெடியனான நடிகர் குணால் கம்ரா, சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், சிவ சேனாவை உடைத்து, MLA -க்கள் சிலரை தன் பக்கம் இழுத்து பிறகு பாஜக கூட்டணியில் இணைந்து ஒரு துரோகி ஆதாயம் அடைந்தார் என விமர்சித்து இருந்தார்.

மேலும் அவர், சிவ சேனா உருவாக பாஜகதான் காரணம். சிவ சேனா இரண்டாக உடையவும் பாஜகதான் காரணம் என்று அந்த விடூயோவில் இருந்தது. இந்த வீடியோவை, சிவ சேனா இளைஞரணியினர், குணால் கம்ரா தனது வீடியோவை பதிவு செய்த ஸ்டூடியோவை நேற்று சேதப்படுத்தினர். இதனால் மகாராஷ்டிரா அரசியல் களம் சூடுபித்தது. இந்நிலையில்; மும்பையில் செய்தியாளர்களின் கேள்விக்கு ஆதித்ய தாக்கரே பதிலளித்தார். அப்போது, ” குணால் கம்ராவின் வீடியோ கிளிப்பை பார்த்தேன். ஏக்நாத் ஷிண்டேவின் தொண்டர்கள் எப்போது அவரை ஒரு துரோகி மற்றும் திருடன் என்று முடிவு செய்தார்கள் என்ற கேள்வி எழுகிறது? அவர் யாருடைய பெயரையும் சொல்லவில்லை. ஆனால், ஏக்நாத் ஷிண்டே ஏன் கோபப்படுகிறார்?

யார் துரோகி மற்றும் திருடன் என்பது முழு நாடும், முழு உலகமும் அறிந்ததே. குணால் கம்ரா நம்மைப் பற்றி, பலரைப் பற்றி, மோடி பற்றியும் பலமுறை பேசியுள்ளார். ஆனால் யாரும் இப்படி எதிர்வினைவ ஆற்றவில்லை. நாக்பூரில் நாசவேலை செய்தவர்களிடம் இருந்து அதற்கான இழப்பீடு பெறப்படும் என்று முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறினார். அதேபோல், நேற்று குணால் கம்ராவுக்கு எதிராக நாசவேலை செய்தவர்களிடம் இருந்து இழப்பை வசூலிக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் தனது கண்களைத் திறந்து யார் அவரை குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். அது எதிர்க்கட்சியா அல்லது அவரது நண்பர்களா?

குணால் கம்ரா ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? ஏக்நாத் ஷிண்டே ஒரு துரோகி மற்றும் திருடன் என கூறி இருந்தால், குணால் கம்ரா மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் பெயரைக் குறிப்பிடவில்லை. அப்படி இருக்கும்போது, ஏக்நாத் ஷிண்டே முதலில் தான் ஒரு துரோகி மற்றும் திருடனா என்பது குறித்து பதிலளிக்க வேண்டும்” என ஆதித்ய தாக்கரே தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே: “குணால் கம்ரா உண்மைகளை கூறினார்..! எந்த தவறும் செய்யவில்லை..!”

குணால் கம்ரா தனது கருத்துகளை மட்டுமே வெளிப்படுத்தினார். அவர் உண்மைகளை கூறினார். பொதுமக்களின் கருத்தை வெளிப்படுத்தினார். அவர் எந்த தவறும் செய்யவில்லை என சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார். ஸ்டாண்ட் – அப் காமெடியனான நடிகர் குணால் கம்ரா, சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், சிவ சேனாவை உடைத்து, MLA -க்கள் சிலரை தன் பக்கம் இழுத்து பிறகு பாஜக கூட்டணியில் இணைந்து ஒரு துரோகி ஆதாயம் அடைந்தார் என விமர்சித்து இருந்தார்.

மேலும் அவர், சிவ சேனா உருவாக பாஜகதான் காரணம். சிவ சேனா இரண்டாக உடையவும் பாஜகதான் காரணம் என்று அந்த விடூயோவில் இருந்தது. இந்த வீடியோவை, சிவ சேனா இளைஞரணியினர், குணால் கம்ரா தனது வீடியோவை பதிவு செய்த ஸ்டூடியோவை நேற்று சேதப்படுத்தினர். இதனால் மகாராஷ்டிரா அரசியல் களம் சூடுபித்தது. இந்நிலையில், மும்பையிலுள்ள விதான் பவனில் செய்தியாளர்களின் கேள்விக்கு உத்தவ் தாக்கரே பதிலளித்தார். அப்போது, “குணால் கம்ரா தனது கருத்துகளை மட்டுமே வெளிப்படுத்தினார். அவர் உண்மைகளை கூறினார். பொதுமக்களின் கருத்தை வெளிப்படுத்தினார். அவர் எந்த தவறும் செய்யவில்லை. சத்ரபதி சிவாஜி மகாராஜை அவமதித்த சோலாபுர்கர் மற்றும் கோரட்கர் ஆகியோர் மீது இந்த துரோகிகள் நடவடிக்கை எடுக்கவில்லை,” என உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

மேலும் பேசுகையில், சத்ரபதி சம்பாஜி மகாராஜ் மற்றும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஆகியோருக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை நாக்பூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் பிரசாந்த் கோரட்கர் மற்றும் நடிகர் ராகுல் சோலாபுர்கர் ஆகியோர் தெரிவித்ததை அடுத்து, அவர்களை கைது செய்யக் கோரி மாநிலத்தில் நடந்த போராட்டங்களை உத்தவ் தாக்கரே குறிப்பிட்டார். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கட்சியின் தொண்டர்களால் குணால் கம்ராவின் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்துக்கு ஏற்பட்ட சேதத்துக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தவ் தாக்கரே வலியுறுத்தினார்.