ஏபி டி வில்லியர்ஸ் கணிப்பு: ரிக்கி பாண்டிங்கிற்கு ரிஷப் பந்த் மீது பாசம் அதிகம்..! ஆர்சிபியால் ரிஷப் பந்தை வாங்க முடியாது.. !

பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள ரிக்கி பாண்டிங்கிற்கு இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் மீது பாசம் அதிகம், ஆகையால் பஞ்சாப் அணி ரிஷப் பந்தை அவரை வாங்குவதற்கு எந்த எல்லைக்கும் செல்லும் என என்று ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரிஷப் பந்த் எவ்வளவு தொகைக்கு வாங்கப்படுவார் என்பது இன்று மிகப்பெரிய விவாதமாகியுள்ளது. ஏனென்றால் சர்வதேச அளவில் ரிஷப் பந்தின் பிராண்ட் வேல்யூ உச்சத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் அவரை தங்களது அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று ஏராளமான அணிகள் தயாராகி வருகின்றன.

ஆனால் ரிஷப் பந்த் குறைந்தபட்சம் ரூ.25 கோடி வரை ஏலத்திற்கு செல்வார் என்று கணிக்கப்பட்டு வரும் நிலையில், ராஜஸ்தான், மும்பை, ஐதராபாத், சென்னை உள்ளிட்ட அணிகளின் பர்ஸ் தொகை குறைவாக இருப்பதால், அவர்களால் ரிஷப் பந்தை வாங்க முடியாது என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் அதிக பர்ஸ் தொகை கொண்ட பஞ்சாப், ஆர்சிபி ஆகிய அணிகளால் மட்டுமே ரிஷப் பந்தை வாங்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

இதுகுறித்து ஆர்சிபி முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் பேசுகையில், என்னை பொறுத்தவரை ஆர்சிபி அணியின் கைகளுக்கு ரிஷப் பந்த் வருவார் என்று கருதவில்லை. ஏனென்றால் ரிஷப் பந்த் மதிப்பு மிகவும் அதிகம். அனைத்து அணிகளும் அவரை வாங்க நிச்சயம் விரும்புவார்கள்.

ரிஷப் பந்த் வாங்குவதற்கு எவ்வளவு தொகை வேண்டுமானாலும் பஞ்சாப் கிங்ஸ் அணியால் செலவு செய்ய முடியும். அவர்களும் தயாராக இருப்பதாக தெரிகிறது. இது என்னுடைய உணர்வு தான். அதேபோல் ரிக்கி பாண்டிங் மற்றும் ரிஷப் பந்த் இருவரும் நீண்ட ஆண்டுகளாக இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

அதனால் அவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு செல்வார் என்று நினைக்கிறேன். ஆனால் மெகா ஏலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஒருவேளை ஆர்சிபி அணி அவரை வாங்கினால் சிறப்பாக இருக்கும். ஆனால் ஆர்சிபி அணியின் கவனம் இம்முறை பவுலர்களை வாங்குவதில் தான் இருக்க வேண்டும் என ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்தார்.