அதிமுக ஆட்சியில் ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்கு முன்பு “ஐ அம் சாரி ஐயப்பா..” என்ற பாடல் இசைவாணியால் பல்வேறு மேடைகளில் பாடிய பாடல் கடந்த ஒரு வார காலமாக சமூக வலைத்தளங்களில் பரவி நாட்டிலேயே அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற முயற்சி செய்கின்றனர்களா என்ற கேள்வி எழுகின்றது.
நாட்டில் மாட்டுக்கறி விஷயம் பெரிதான போது நீலம் பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பில் கேஸ்ட்லெஸ்ட் கலெக்ஷன் என்கிற இசை குழுவில் ஏ அந்த கறி.. இந்த கறி.. எந்த கறிய துன்னா உனக்கென்னா… நீ யாரா வேணா இருடா எனக்கென்னா.? “பெரிய கறி” என்ற பாடலை பாடியதன் மூலம் வடசென்னையை பூர்வீகமாகக் கொண்ட கானா பாடகி இசைவாணி பெரிய அளவில் பிரபலமானார்.
ஜாதி ஏற்றத்தாழ்வுகள், இட ஒதுக்கீடுக்கு எதிரான மனநிலை, உணவு பழக்கத்தில் நிலவும் பாகுபாடு, பெண்கள் மீது செலுத்தப்படும் தீண்டாமை உள்ளிட்ட சமூகத்தில் படிநிலையில் நிலவும் பல்வேறு ஏற்ற தாழ்வுகளை கலைந்து சமூக உரிமைகளை கூறும் பொருட்டு நீலம் பண்பாட்டு மையம் கேஸ்ட்லெஸ்ட் கலெக்ஷன் என்கிற இசை குழு உருவாகி ஒரு பாடல் வரியோடு the casteless collective பல பாடல்களை இயற்றியது.
“2018-ஆம் ஆண்டு தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்று கொண்டு இருந்த சமயம், கேரளாவில் உள்ள சபரிமலைக்குப் பெண்கள் செல்வது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பாலினப் பாகுபாட்டை முன்வைத்து பெண்களுக்கு உரிமை மறுக்கப்படக்கூடாது என்று தீர்ப்பளித்தது. அப்போது, ஐ அம் சாரி ஐயப்பா என்று ஒரு பாடலை பாடியிருக்கிறார். அந்த வீடியோக்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ஐ அம் சாரி ஐயப்பா.. நான் உள்ளே வந்தால் என்னப்பா…? நான் தாடிக்காரன் பேபி.. இப்ப காலம் மாறிப்போச்சு.. இனி தள்ளி வைத்தால் தீட்டா.. நான் முன்னேறுவேன் மாஷா.. என்ற வரிகள் அதில் இருக்கிறது.
பொதுவாக ஐயப்பன் கோவிலில் பத்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் மற்றும் 60 வயதை கடந்த பெண்கள் மட்டும் தான் செல்ல வேண்டும் என்ற நிலை உள்ள நிலையில் இவர் ஐயப்ப பக்தர்கள் உணர்வை சீண்டும் வகையில் பாடல் பாடி இருக்கிறார் என்று இவர் மீது பலர் புகார் கொடுத்து இருக்கிறார்கள்.
அதை ஆதாரமாகக் கொண்டு மிகப்பெரிய விவாதமும் நடைபெற்றது. அதை தொடர்ந்து நாட்டில் உள்ள முற்போக்கு இயக்கங்களும் பெண்களின் உரிமைக்கு ஆதரவாக நின்றன. இதே காலகட்டத்தில் தான் நீலம் பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பில் இந்த கேஸ்ட்லெஸ்ட் கலெக்ஷன் என்கிற இசை குழு உருவானது.
சமூகப் படிநிலையில் நிலவும் பல்வேறு ஏற்ற தாழ்வுகளை கலைந்து சமூக உரிமைகளை கூறும் ஒரு பாடல் வரியோடு the casteless collective பல பாடல்களை இயற்றியது. ஜாதி ஏற்றத்தாழ்வுகள், இட ஒதுக்கீடுக்கு எதிரான மனநிலை, உணவு பழக்கத்தில் நிலவும் பாகுபாடு, பெண்கள் மீது செலுத்தப்படும் தீண்டாமை உள்ளிட்டவைகள் இதில் அடங்கும்.
இந்நிலையில், கேஸ்ட்லெஸ்ட் கலெக்ஷன் என்கிற இசை குழு, ஐ அம் சாரி ஐயப்பா என்கிற பாடல் ஆண்டாண்டு காலமாய் இங்கு பேசப்பட்டு வரும் கோயில் நுழைவு உரிமையை கூறுகிற வரிகளோடு துவங்கி பின் பெண்களின் சுதந்திரத்தை பறிக்கும் பொதுவான உரிமைகளை கூறும் பாடலாக பாடல் பாடப்பட்டுள்ளது.
ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இசைவாணியால் பல்வேறு மேடைகளில் பாடிய பாடல் கடந்த ஒரு வார காலமாக சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறது. அதாவது, அதிமுக ஆட்சியில் பாடப்பட்ட பாடல் இன்று திமுக ஆட்சியில் பூதாகரமாக பரப்பப்பட்டு நாட்டிலேயே அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தை கலவர பூமியாக மற்ற முயற்சி செய்கின்றனர்களா என்ற கேள்வி எழுகின்றது.