பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் புதிய அரங்கத்தை கட்டி திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, முக்குலத்தோர் புலிப்படை கட்சீி தலைவர் கருணாஸ் நன்றி தெரிவித்துள்ளார். முக்குலத்தோர் புலிப்படைக்கட்சி தலைவர் சே. கருணாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பசும்போன் முத்துராமலிங்க தேவர் நினைவை போற்றும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 30-ல் தேவர் ஜெயந்தி விழாவை தமிழ்நாடு அரசு விழாவாக கொண்டாடுகிறது.
அவரது நினைவிடம் அருகில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டு வந்தது. அது தற்பொழுது தமிழ்நாடு அரசால் நிரந்தர அரங்கமாக மாறியிருப்பது பாராட்டுக்குரியது. ரூ.1.55 கோடி மதிப்பீட்டில், அமைக்கப்பட்ட அரங்கத்தை தமிழக முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மக்கள் கோரிக்கையை ஏற்று இவ்வரங்கத்தை திறந்து வைத்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கருணாஸ் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.